Tuesday, January 15, 2013

எதிர்க்குரலும் போட்டிகளும்


போட்டி...போட்டி...போட்டா போட்டி.. என்று போன மாதம் ஒரு பதிவு போட்டேன். பதிவுலகில் நான் பங்குபெறவிருக்கும் முன்று போட்டிகளைப் பற்றிய விபரங்கள் பற்றிய பதிவு தானது. 

அனைத்துப் போட்டிகளின் முடிவுகளும் வந்துவிட்டன.

முதலில் இஸ்லாமியப்பெண்மணி நடத்திய கட்டுரைப் போட்டி. மிக அற்புதமான முறையில் நடத்தப்பட்ட போட்டியில் பதிவர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.  இதன் மூலம் பலரின் எழுத்தாற்றல் மட்டுமின்றி... தமிழக முஸ்லிம் சமுதாயம் கல்வித்துறையில் பிந்தங்கியிருப்பதர்கான காரணங்களும் கல்வியில்  அனைவரும் சிறந்து விளங்க  பலவழிமுறைகளும் ஆலோசனைகளும்  வழங்கப்பட்டிருந்தன. முதல் முன்று பரிசுகளை வென்ற கட்டுரைகள் இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் விரைவில் இடம்பெறும்.

முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள்:

கடும் போட்டிக்கு இடையே முதல் பரிசாக  ரூபாய் ஐந்தாயிரம்  தட்டிச் செல்பவர்...

சகோ. Dr. Captain. S.ABIDEEN, இளையான்குடி.
பெற்ற மதிப்பெண்கள் : 104.5

இரண்டாம் பரிசாக ரூபாய் 3 ஆயிரம் தட்டிச்சென்றவர் :

சகோ. உம்ம் ஒமர் என்ற அனிஷா, அமெரிக்கா.
பெற்ற மதிப்பெண்கள் : 100.5

மூன்றாம் பரிசாக ரூபாய் 2 ஆயிரம்  வென்றவர்:

சகோ. இப்னு முஹம்மது, கோவை.
பெற்ற மதிப்பெண்கள் : 97.5

இக்கட்டுரைப் போட்டிக்காக இதில் பங்கேற்ற ஒருவர் தமிழக அரசின் தகவலறியும் சட்டத்தின் உதவியினை நாடியது பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.

பலர் கையால் எழுதிய கட்டுரைகளை ஸ்கேன் செய்து போட்டிக்கு அனுப்பியுள்ளார்கள். இதுவும் என்னை ஆச்சரியத்திலாழ்த்திய விஷயங்களில் ஒன்று. இந்த காலத்தில் பள்ளி/கல்லூரிக்கு வெளியே பேனா உபயோகத்தை நான் கண்டது மிகவும் குறைவு. :( ....

போட்டிக்கும் போட்டிக்கு வந்த கட்டுரைகளுக்கும் உள்ள உறவினை  இத்தோடு  முடித்துக்கொள்ளாமல் தமது எழுத்தின் மூலம் தமது சமுதாயத்திற்கும் நாட்டிற்கும்  ஒரு நல்ல மாற்றத்தினை உருவாக்கித்தர பங்கேற்றவர்கள் எடுத்துவைத்துள்ள சிறந்த ஆலோசனைகளை  நடைமுறைப்படுத்தவும் போட்டியாளர்கள்  முன்வந்திருப்பது பாராட்டிற்குரியது. 

எனக்கு என்ன பரிசா... ஹி... ஹி... நான் எழுதிய கட்டுரையை நடுவர்கள் வாசிச்சதே  என் பெரிய வெற்றி..... என் மதிப்பெண்ணை அறிய ஆவலாக இருப்பவர்கள்(ஹி..ஹி ....) (பானு எனும் பெயரில் இருக்கும்) இங்கு போய்க் காணலாம். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக விற்கப்பட்டுகொண்டிருக்கும்  எதிர்க்குரல் புத்தகமும் பங்கு பெற்றதற்கான சான்றிதழும் கிடைக்கப்பெற்றுள்ளேன். இறைவனுக்கே புகழனைத்தும்!!

எதிர்க்குரல் 

பல்வேறு முஸ்லிம் பதிவர்களின் ஆக்கங்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து புத்தகமாக  ஒரு சேர உருவாக்கியிருக்கிறார்கள் உம்மத்  குழுவினர். அதுவே எதிர்க்குரல் (இஸ்லாமோஃபோபியா vs இஸ்லாமியப்பதிவர்கள்)... இஸ்லாத்தின் மீதும், இஸ்லாமியர்களின் மீதும் உங்கள் கண்ணோட்டத்தினை நல்ல முறையில் விரிவாக்க உதவும். ஒவ்வொரு படைப்பும் வித்தியாசமான கோணத்தில் இஸ்லாத்தினை புரிந்திட வழிவகுக்கும். தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் இப்புத்தகம் ரூ. 50 ல்  கிடைக்கிறது. புத்தகக் கண்காட்சிக்குச் சென்று பெற இயலாதவர்கள் இந்த கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டால் உங்கள் இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆஷிக் அஹமத் : 97895 44123
சகோதரர் சிராஜ்: 99415 85566

இ.மெயில் மூலம் தொடர்பு கொள்ள aashiq.ahamed.14@gmail.com, vadaibajji@gmail.com

மேலும் விபரங்களுக்கு:இப்புத்தகத்தின் பலப்பிரதிகள் இன்னுமதிக வேகத்தில் விற்பனையாக இறைவன் உதவி செய்வானாக! ஆமீன்!!
 _______________________________________________________________________________

அடுத்து ஜலீலாக்கா நடத்திய பேச்சுலர்ஸ் ஃபீஸ்ட் போட்டி.... பங்கு பெற்றவர்களின் குறிப்புகளை பேச்சிலர்களின் ஆலோசனைகளையும் கேட்டு முடிவுகள் அறிவிச்சிருந்தாங்க... இதற்கு முன்று குறிப்புகள் அனுப்பியிருந்தேன். அவற்றில் ஈஸி இறால் குழம்பு  எனும் குறிப்பிற்கு சிறந்த பக்க உணவு குறிப்பிற்கான  விருது வழங்கியிருக்காங்க.... நன்றிக்கா....போட்டியை அறிவித்ததிலிருந்து மின்னஞ்சல் மூலமும் அதற்கென உள்ள மென்பொருள் மூலமாகவும் பதிவர்கள் உற்சாகமாக அனுப்பிய நூற்றுக்கணக்கான குறிப்புகளைத் தரம் பிரித்து, அனுப்பியவர்களின் சரிபார்த்தலையும் கேட்டு, பங்கேற்ற ஒரு பதிவரையும் விடாமல் அனைவருக்கும் விருதுகள் வழங்கி, பலரது பேராதரவைப் பெற அப்பப்பா..... தனியாளாக போட்டியை வெற்றிகரமாக நடத்திவிட்டார்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா... (இனிதான் வெற்றியாளர் அறிவிக்கப்படனும்)...

பிற்சேர்க்கை:  ஜலீலாக்கா...வெற்றியாளர்கள் பெயரை அறிவித்து விட்டார்கள். கிச்சன் குயினாக ஃபாயிஸா காதரும் கிச்சன் கிங்காக வை.கோ. சாரும் வாகை சூடியுள்ளார்கள்.

மகி அருண், அதிரா, அஸ்மாக்கா, அமைதிச்சாரல், ஆமினா, ஆசியா - (நானும் என் பெயரை 'அ'வில் தொடங்குமாறு வைக்கப்போகிறேன் :)) ஆகியோருக்கு சூப்பர் அன்பளிப்புகள் வழங்கியிருக்காங்க... மனமார்ந்த வாழ்த்துக்கள் சமையல் வல்லுனர்களே....

(மெயிலில்) ஜலீலாக்கா என் குறிப்பு முதல் 12 இடங்களில் வந்திருந்ததாகத் தெரிவித்திருந்தாங்க... இன்னும் நல்ல அக்கறையுடன் குறிப்புகள் அனுப்பியிருக்கலாம் எனவும் சொல்லியிருந்தாங்க ....அக்கா.... என் வாழ்க்கையிலேயே முதல் சமையல் குறிப்பு உங்களுக்காக எழுதினது தான்க்கா..... சமையல் ராணிகள் எத்தனையோ பேரிருக்க...சரி..நம் பங்கிற்கு அனுப்பிவைப்போம் எனும் அளவிலேயே என் எண்ணம் இருந்தது....  குறைகளையும் நிறைகளோடு சொன்னாதான்க்கா அடுத்த முறை திருத்திக்க முடியும்.....நீங்கள் நடத்திய முதல் ஈவன்ட் மிக்க வெற்றிகரமாக அமைந்ததில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


இந்த ஈவன்ட்டில் எனக்குக் கிடைத்த விரு(ந்)துகள்.
_________________________________________________________________________________

அடுத்து ஃபாயிஸா  காதர் குழந்தைகளுக்கான வரையும் போட்டி நடத்தினாங்க.... 7 வயதாகும் என் மகனைக் கெஞ்சி மன்றாடி படத்தினை வரைந்து அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.. முதலில் அழகிய படம் எதாவது அனுப்பும் முடிவில்தான் இருந்தேன்.... அது கொஞ்சம் சிரமமாக இருந்தது அவனுக்கு.... பிறகு... சுட்டி டீவியில் குழந்தைகளுக்கான  போட்டியொன்றில் ஒரு சிறுமி வரைந்த படத்தில் தீம் வைத்திருந்தது கண்டேன்..(நன்றி...சுட்டி டீவி).... சரி... நாமும் அப்படியே வரையலாம் என்று இயற்கை பாதுகாப்பிற்கான சில விதிகளைக் கூறி தகுந்த படத்தினை வரைந்தும் அனுப்பியாயிற்று.... பிறகு, முடிவு வெளியிடுவதற்கு சில தினங்களுக்கு முன் தனக்கு வந்த படங்களை பாயிஸா வெளியிட்டிருந்தார்கள். எல்லாமே வரையும் திறமையை அடிப்படையாக வைத்து அமையப்பெற்றிருந்தன. ஆகா.... நாம் மட்டும் தீமெல்லாம் வைத்து அனுப்பிவிட்டோமொன்னு கொஞ்சம் யோசனையாக இருந்தது. இறைவன் அருளால், என் மகனுக்கு 7-10 வயதினர் பிரிவில்  இரண்டாமிடம் கிடைத்தது. முதலிடம் சஃபியா முஸ்கானுக்குக் கிடைத்தது.....
இப்படியாக, போட்டிகள் நிறைவுற்றன. எந்நேரமும் பதிவுகள் பற்றி (சரி..சரி... பிறரின் பதிவுகள்....போதுமா..அவ்வ்வ்வ்...) மட்டுமே சிந்தனை ஓடும் நாட்களை விட பதிவு சாராத நம் திறமைகளை வெளிக்கொணர இந்த போட்டிகள் உதவின; உற்சாகப்படுத்தின; (மிக முக்கியமாக எனக்க்க்கே சிந்தனையைத் தூண்டின...ஹி...ஹி...) என்றால் மிகப்பொருத்தமாகும். போட்டிகளில் பங்கு பெற்ற நினைவுகள் என்றும் நினைவை விட்டும் நீங்காதவை.... வாழ்க்கையில் மாற்றங்கள் காண இது போன்ற போட்டிகள் பெரிதும் உதவுகின்றன. போட்டிகளில் பங்கு பெறுபவர்களை விட போட்டி நடத்துபவர்களுக்கு அதிகப் பொறுப்புகள் உண்டு. பிறரின் மகிழ்ச்சிக்காக தமது நேரத்தினைப் பகிர்ந்த சகோதரர்களுக்கு எனது பணிவான நன்றிகள்; வாழ்த்துக்கள். அல்ஹம்துலில்லாஹ்.

(தலைப்பைப் பார்த்துவிட்டு காரசாரமான பதிவை எதிர்பார்த்து இவ்வலைப்பூவிற்கு வந்தவர்கள் சிறிது  மிளகாயினைக் கடித்துக்கொண்டு வாசிக்கவும்..... ஹி ... ஹி ...ஹி ...)

அபூபக்ர்(ரலி) அவர்களது வரலாற்றின் அடுத்த பகுதி விரைவில்.... மன்னிக்கவும்.

12 comments:

ஆமினா said...

அடடா... இப்படி கூட பதிவு போடலாமா..... ஏன் இப்பலாம் எனக்கு பல்பு எறியமாட்டேங்குது பானு!!

நானும் ஏதோ ஒரு ஆர்வத்துல கட்டுரைபோட்ட்டியில் கலந்துக்கிட்டேனா... 20 மார்க்ல மொத எடத்த மிஸ் பண்ணிட்டேன் .. ரொம்ப வருத்தமா இருக்கு!! :(

அப்பறம் ஜலீலாக்கா போட்டியும் பாயிஷா போட்டியும் செம கலக்கல்...

கலந்துக்கிட்டது செம குஷி...

சிராஜ் said...
This comment has been removed by the author.
சிராஜ் said...

சலாம் சகோ பானு,

அருமையாக உள்ளது. தெரிந்த விஷயத்தையே சுவாரஸ்யமாக சொல்ல ஒரு சிலரால் தான் முடியும்.(அட்ரா..அட்ரா..அட்ரா).

என் மெயில் ஐடியை இருட்டடிப்பு செய்ததை மட்டும் மென்மையாக கண்டித்துவிட்டு விடை பெறுகிறேன்.

ஹுஸைனம்மா said...


தகவலை எல்லாருக்கும் கொண்டு சேர்ப்பதற்காகவும், மற்றவர்களை மனதாரப் பாராட்டவும் ஒரு பதிவையே எழுதுன உங்க டெடிகேஷனைப் பாராட்ட வார்த்தையே இல்லை!!

(என்னா, இந்தப் பின்னூட்டத்தை மறுபடி மறுபடி வாசிக்கிறீங்க? நம்பமுடியலையா.. நெசம்மாவே உங்களைப் பாராட்டத்தான் செய்றேன்.. ஹும்.. நல்லதுக்கே காலமில்லை...)

:-)))))

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ பானு!

சுவாரஸ்யமாக தொகுத்தளித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

enrenrum16 said...

@Amina
என்னாது...பதிவெழுத காரணம் தெரியலயா உங்களுக்கு???? ஓக்கே...நம்பிட்டோம்..... :)

ஆமாங்க.... நிறைய பேர் நிறைய மார்க் வித்தியாசத்தில் முதல்பரிசைத் தவறவிட்டுட்டாங்க.... ஹி..ஹி..ஹி...

கலந்துகொள்ளும் குஷியினைத் தந்த போட்டியாளர்களுக்கு நன்றிகளைத் தெரிவிக்கத்தான் இப்பதிவு. நமது சந்தோஷமே அவர்களின் வெற்றி.... :)

enrenrum16 said...

//தெரிந்த விஷயத்தையே சுவாரஸ்யமாக சொல்ல ஒரு சிலரால் தான் முடியும்.(அட்ரா..அட்ரா..அட்ரா).// அதுக்கு ஏன் உங்கள நீங்களே இப்படிப் போட்டு அடி அடின்னு அடிச்சுக்கிறீங்க??? :)

மின்னஞ்சல் முகவரி சேர்த்துட்டேன்...:)

enrenrum16 said...

@ஹுஸைனம்மா

நீங்க திட்டியே கமன்ட் போட்டாலும் எனக்கு ஓக்கேதான்... ஏன்னா உள்குத்து,வெளிக்குத்து எல்லாம் புரியாத அப்பாவி நான்.... மனதார வாழ்த்தியதற்கு நன்றி ஹுஸைனம்மா...

enrenrum16 said...

vassalam....வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ.சுவனப்பிரியன். :)

faiza kader said...

arumaiyaagavum alahagavum solli irukeega. vaalthukal..

enrenrum16 said...

கருத்திற்கு நன்றி ஃபாயிஸா

enrenrum16 said...

ஜலீலாக்கா மெயிலில் அனுப்பிய கருத்து:

மொத்த பதிவர்கள் போட்டியையும் ஒரே இட்த்தில் பதிந்து இருக்கீங்க
இஸ்லாமிய பெண்மனி கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற
டாக்டர் கேப்டன், அப்தீன்,அன்னு, மற்றும் இப்னு முஹம்மது முவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
இஸ்லாமோஃபோபியா vs இஸ்லாமிய பதிவர்கள்,இந்த புத்தகம் அனைவரையும் சென்றடைய என் வாழ்த்துக்கள்/

பேச்சுலர் ஈவண்டில் குறிப்பு அனுப்பிய அனைத்து மஹாராணிகளின் குறிப்புகளும் மிக அருமை.நானும் நிறைய் எக்சல் ஷீட்டில் வகையாக பிரித்து குறை நிறைகளை எழுதி போஸ்ட் செய்ய இருந்தேன். ஆனால் என் கணவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
அதான் அங்கு சொல்லவில்லை.
மற்ற படி கோதுமை தோசை + இரால் குழம்பு இரண்டுமே அருமை.

வாழ்த்துக்கள், இனி உங்கள் ஊர் பல வகையான புதுமாதிரியான குறிப்புகளை இங்கு எதிர் பார்க்கிறேன்.
பேஷ் பேஷ் உங்கள் மகனுக்கு இரண்டாவது பரிசா வாழ்த்துக்கள்
என் பெயரை சொல்லி அவருக்கு ஒரு லாலிபாப் வாங்கி கொடுத்து விடுங்கள். ரொம்ப அழகாக இருக்கு , ஆனால் பட்த்தை பெருசு செய்து பார்க்க முடியல.
அம்மா மகன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

என் பெரிய மகன் சூப்பராக வரைவார். என் பிள்ளைகளுக்கு போட்டி விதி படி வயது அதிகம் , அப்ப்டி இருந்தும் சின்னவர் முன்பு நான் வரைந்த்தை அனுப்பி வைப்பது தானே என்றார்.