அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 1
முஹம்மது நபிக்குப் பின் நாடாள வேண்டியவர்கள் நபிகளுடன் இருந்து ஆற்ற வேண்டிய, நன்மை ஈட்டித்தரும் கடமைகள், அவர்களது செல்வசிறப்பால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் என எத்தனையோ செயல்கள் அவர்கள் ஆற்ற வேண்டியிருக்க அவர்களை இப்னு தம்னா என்பவரின் மூலமாக அவரை மறுபடியும் நபிகளிடத்தில் கொண்டுவந்து சேர்க்கிறான்.
முஹம்மது நபிக்குப் பின் நாடாள வேண்டியவர்கள் நபிகளுடன் இருந்து ஆற்ற வேண்டிய, நன்மை ஈட்டித்தரும் கடமைகள், அவர்களது செல்வசிறப்பால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் என எத்தனையோ செயல்கள் அவர்கள் ஆற்ற வேண்டியிருக்க அவர்களை இப்னு தம்னா என்பவரின் மூலமாக அவரை மறுபடியும் நபிகளிடத்தில் கொண்டுவந்து சேர்க்கிறான்.
புகாரி ஹதீஸ் எண் 2297ன் ஒரு பகுதி:
முஸ்லிம்கள் (எதிரிகளின் கொடுமைகளால்) சோதனைக் குள்ளாக்கப்பட்டபோது, அபூ
பக்ர்(ரலி) தாயகம் துறந்து அபிஸினியாவை நோக்கி சென்றார்கள். 'பர்குல்கிமாத்' எனும் இடத்தை அவர்கள் அடைந்தபோது அப்பகுதியின் தலைவர் இப்னு
தம்னா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களிடம், 'எங்கே
செல்கிறீர்?' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி) 'என் சமுதாயத்தவர் என்னை
வெளியேற்றிவிட்டனர்; எனவே பூமியில் பயணம் (செய்து வேறுபகுதிக்குச்) சென்று
என் இறைவனை வணங்கப் போகிறேன்! என்று கூறினார்கள். அதற்கு இப்னு தம்னா,
'உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது' வெளியேற்றப்படவும்கூடாது! ஏனெனில்
நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர்; உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்;
பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர்; விருத்தினர்களை
உபசரிக்கிறீர். எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன்! எனவே, திரும்பி
உம்முடைய ஊருக்குச் சென்று இறைவனை வணங்குவீராக!' எனக் கூறினார். இப்னு
தம்னா, தம்முடன் அபூ பக்ர்(ரலி)அவர்களை அழைத்துக் கொண்டு குறைஷிகளில்
இறைமறுப்பாளர்களின் பிரமுகர்களைச் சந்தித்தார். அவர்களிடம், 'அபூ பக்ரைப்
போன்றவர்கள் வெளியேறவும் கூடாது! ஏழைகளுக்காக உழைக்கின்ற, உறவினர்களுடன்
இணங்கி வாழ்கின்ற, விருந்தினரை உபசரிக்கின்ற, பிறருக்காகச் சிரமங்களைத்
தாங்கிக் கொள்கின்ற, துன்பப்படுபவர்களுக்கு உதவுகிற ஒரு மனிதரை நீங்கள்
வெளியேற்றலாமா?' என்று கேட்டார். எனவே, குறைஷியர் இப்னு தம்னாவின்
அடைக்கலத்தை ஏற்று அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர்.
அவ்வடைக்கல்த்தில் இருந்த சமயம் அபூபக்ர்(ரலி) அவர்களது
வெளிப்படையான இறைபக்தியைக் கண்டு குறைஷியர்கள், அபூ பக்ர் தங்களுக்கு
இடையுறு செய்வதாக இப்னு தமனாவிடம் முறையிட அபூ பகர் "எனக்கு இறைவனின்
அடைக்கலமே போதுமானது. தயவுசெய்து தங்களது அடைக்கலத்தை திரும்ப
பெற்றுக்கொள்ளுங்கள்" என இப்னு தம்னாவிடம் சொல்லிவிட்டார்கள். (புகாரி 2297)
மக்காவிலிருந்து பல முஸ்லிம்கள் அமைதியை நாடி இறைவனுக்காக அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் (இறைவனுக்காக நாடு துறத்தல்) செய்தார்கள். மதீனாவில் இஸ்லாம் எட்டுத்திசையிலும் பரவி மக்களை முஸ்லிம்களாக்கியிருந்தது. நபி(ஸல்) தமது கனவிலும் மதீனா நகருக்கு மக்கள் ஹிஜ்ரத் செய்வதைக் கண்டார்கள். ஆகையினால் ஹிஜ்ரத் செய்வதற்கு, மதீனாவை நபியவர்கள் தேர்ந்தெடுத்து ஹிஜ்ரத் செய்ய,
மக்கத்து முஸ்லிம்களைப் பணித்தார்கள். இதனையறிந்த, அபிசீனியாவிற்கு
ஏற்கனவே ஹிஜ்ரத் செய்திருந்தவர்களும் மதீனாவிற்குத் தம் இருப்பிடத்தை
மாற்றிகொண்டார்கள்.அபூபக்ர்(ரலி) அவர்களும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்வது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் ஆலோசனை செய்யும்பொழுது இறைவனது அனுமதிக்காகத் தாம் காத்திருப்பதாகவும் அதுவரை பொறுமைகாக்கவும் தமது நண்பரிடம் வேண்டுகோள் வைக்கிறார்கள்.
மதீனா நகருக்கு ஹிஜ்ரத் செய்ய இறைவனிடமிருந்து செய்தி வரவே நபியவர்கள் புறப்படலானார்கள்.முக்கிய சஹாபாக்கள் அனைவரும் ஏற்கனவே ஹிஜ்ரத் செய்திருக்க அலீ(ரலி) அவர்களிடம் தம்மை நம்பி மக்கத்து மக்கள் ஒப்படைத்திருந்த அமானிதப்பொருட்களை ஒப்படைத்து விட்டு நபி(ஸல்) பயணம் மேற்கொண்டார்கள். இநநாளுக்காகக் காத்திருந்து பல ஏற்பாடுகள் செய்திருந்த அபூபக்ர்(ரலி) அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்கள்.மதீனா செல்லும் வழியில் தவ்ர் குகையில் மூன்று நாட்கள் தங்கச செய்து எதிரிகளிடமிருந்து அவர்களிருவரையும் இறைவன் பாதுகாத்தான். அச்சமயத்தில் அச்சங்கொண்ட அபூபக்ருக்கு முஹம்மது நபியவர்கள் 'இறைவன் நம்முடன் இருக்கிறான் ....அஞ்சாதீர் அபூபக்ரே' என தைரியமூட்டினார்கள். இந்நிகழ்வையே இறைவன் தனது திருமறையில் (9:40) குகையில் இருந்த இருவர்" என முஹம்மது நபி (ஸல்)அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் குறிப்பிடுகிறான். தமது தந்தையும் கணவரும் ஹிஜ்ரத் செய்த நிகழ்ச்சியை ஆயிஷா (ரலி) அவர்கள் அழகாகக் கோர்வையாக கூறும் ஹதீஸ்:
புகாரி 3905 - அவர்கள் இருவருக்காகவும் வேண்டிப் பயண ஏற்பாடுகளை வெகுவிரைவாக நாங்கள் செய்து முடித்தோம். ஒரு தோல்பையில் பயண உணவை நாங்கள் தயார் செய்து வைத்தோம். அப்போது அபூ பக்ரின் மகள் (என் சகோதரி) அஸ்மா தன்னுடைய இடுப்புக் கச்சிலிருந்து ஒரு துண்டை(க் கிழித்து) அதனை அந்தப் பையின் வாய் மீது வைத்துக் கட்டினார்கள். இதனால் தான் அவர்களுக்கு 'கச்சுடையாள்' என்று பெயர் வந்தது. பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் (பயணம் புறப்பட்டு) 'ஸவ்ர்' மலையில் உள்ள ஒரு குகைக்கு வந்து சேர்ந்து அதில் மூன்று நாள்களில்) அவர்கள் இருவருடன் அப்துல்லாஹ் இப்னு அபீ பக்ரும் இரவில் வந்து தங்கியிருப்பார் - அவர் சமயோசித அறிவு படைத்த, புத்திக் கூர்மையுள்ள இளைஞராக இருந்தார் பின்னிரவு (சஹர்) நேரத்தில் அவர்கள் இருவரைவிட்டும் புறப்பட்டு மக்கா குறைஷிகளுடன் இரவு தங்கியிருந்தவர் போன்று அவர்களுடன் காலையில் இருப்பார். அவர்கள் இருவரைப் பற்றி (குறைஷிகளால் செய்யப்படும்) சூழ்ச்சிகளைக் கேட்டு, அவற்றை நினைவில் இருத்திக் கொண்டு இருள் சேரும் நேரத்தில் அவர்கள் இருவரிடமும் அச்செய்திகளைக் கொண்டு வந்து விடுவார்.
அவர்கள் இருவருக்காக அபூ பக்ர்(ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமை ஆமிர் இப்னு ஃபுஹைரா (அபூ பக்ர் அவர்களின்) மந்தையிலிருந்து ஒரு பால் தரும் ஆட்டை மேய்த்து வருவார். இரவின் சிறிது நேரம் கழிந்தவுடன் அதனை அவர்கள் இருவரிடமும் ஓட்டி வருவார். அந்தப் பாலிலேயே இருவரும் இரவைக் கழித்து விடுவார்கள் - அது புத்தம் புதிய, அடர்த்தி அகற்றப்பட்ட பாலாகும் - அந்த ஆட்டை ஆமிர் இப்னு ஃபுஹைரா இரவின் இருட்டு இருக்கும் போதே விரட்டிச் செல்வார். இதை (அவர்கள் இருவரும் அந்தக் குகையில் தங்கியிருந்த) மூன்று இரவுகளில் ஒவ்வோர் இரவிலும் அவர் செய்து வந்தார். மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி) அவர்களும் பனூ அப்து இப்னு அதீ குலத்தில் 'பனூ அத்தீல்' என்னும் கிளையைச் சேர்ந்த கை தேர்ந்த ஒருவரை பயண வழி காட்டியாக இருக்கக் கூலிக்கு அமர்த்தினர். அவர் ஆஸ்பின் வாயில் அஸ்ஸஹ்மீ என்னும் குலத்தாருடன் நட்புறவு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார். (ஆனாலும்) அவர் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் மதத்தில் இருந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி) அவர்களும் அவரை நம்பி, தங்களின் இரண்டு வாகன (ஒட்டக)ங்களை ஒப்படைத்து மூன்று இரவுகளுக்குப் பின் 'ஸவ்ர்' குகைக்கு வந்து விடுமாறு வாக்குறுதி வாங்கியிருந்தனர். மூன்றாம் (நாள்) அதிகாலையில் அந்த இருவாகனங்களுடன் (அவர் ஸவ்ர் குகைக்கு வந்து சேர்ந்தார்.) அவர்கள் இருவருடன் ஆமிர் இப்னு ஃபுஹைராவும் பயண வழிகாட்டியும் சென்றனர். பயண வழிகாட்டி அவர்களைக் கடற்கரைப் பாதையில் அழைத்துச் சென்றார்.
பின்னர் நடந்த நிகழ்வுகளை அபூபக்ர்(ரலி) அவர்கள் ஆஸிப்(ரலி) அவர்களிடம் இவ்வாறு விவரிக்கிறார்கள்:
புகாரி 3917: 'எங்களின் மீது (எதிரிகளால்) கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. எனவே, நாங்கள் இரவில் புறப்பட்டோம். நாங்கள் நண்பகல் நேரம் வரும் வரை இரவும் பகலும் கண் விழித்துப் பயணித்தோம். பிறகு எங்களுக்குப் பாறை ஒன்று தென்பட்டது. நாங்கள் அதனருகே சென்றோம். அதற்கு ஏதோ கொஞ்சம் நிழல் இருந்தது. நான் அல்லாஹ்வின் தூதருக்காக என்னுடன் இருந்த தோல் ஒன்றை விரித்தேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் அதன் மீது படுத்தார்கள். நான் அவர்களைச் சுற்றிலுமிருந்த புழுதியைத் தட்டிக் கொண்டே சென்றேன். அப்போது (தற்செயலாக) ஓர் ஆட்டிடையனைக் கண்டேன். அவன் தன்னுடைய சிறிய ஆட்டு மந்தை ஒன்றுடன் நாங்கள் நாடிச் சென்ற (அதே பாறை நிழல்)தனை நாடி, அதை நோக்கி வந்து கொண்டிருந்தான். நான் அவனிடம், 'இளைஞனே! நீ யாருடைய பணியாள்?' என்று கேட்டேன். அவன், 'நான் இன்னாரின் பணியாள்" என்று சொன்னான். நான், 'உன் ஆடுகளிடம் சிறிது பால் இருக்குமா?' என்று கேட்டேன். அவன், 'ஆம்" என்றான். நான், 'நீ (எங்களுக்குப்) பால் கறந்து தருவாயா?' என்றான். பின்னர், அவன் தன் ஆடுகளில் ஒன்றைப் பிடித்து வந்தான். நான் அவனிடம், 'அதன் மடியை (புழுதி போக) உதறு" என்று சொன்னேன். பிறகு, 'அவன் சிறிது பாலைக் கறந்தான். என்னிடம் தண்ணீருள்ள தோல்ப் பாத்திரம் ஒன்றிருந்தது. அதில் துண்டுத் துணியொன்று (மூடி) இருந்தது. அதில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காகத் தண்ணீர் வைத்திருந்தேன். அதைப் பால் (பாத்திரத்தின்) மீது அதன் கீழ்ப்பகுதி குளிர்ந்து போகும் வரை ஊற்றினேன். பிறகு அதை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று, 'பருகுங்கள், இறைத்தூதர் அவர்களே!' என்று சொன்னேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நான் திருப்தியடையும் வரை (அதை)ப் பருகினார்கள். பிறகு, எங்களைத் தேடிவந்தவர்கள் எங்கள் தடயத்தைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்க நாங்கள் புறப்பட்டோம்.
இவ்வாறாக இருவரும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். ரபியுல் அவ்வல் 12ம் நாள் மதீனா வந்தடைந்த அவ்விருவரில் மக்களுக்கு முஹம்மது நபி(ஸல்) யாரென்று அடையாளம் தெரியவில்லை அப்பொழுது கொளுத்தும் வெயிலில் நபிகளாரின் தலை மீது போர்வையை அபூபக்ர் அவர்கள் போர்த்தியதால் மக்களுக்கு நபி(ஸல்) யாரென்றும் அபூபக்ர்(ரலி) யாரென்றும் அடையாளம் தெரிந்தது. (புகாரி 3911). இது போன்ற சிறு சிறு உதவிகளை நபி(ஸல்) அவர்களுக்குச் செய்வதில் அபூபக்ர் அவர்கள் மனத்திருப்தியும் இறைப்பொருத்தமும் நன்மைகளும் பெற்றுக்கொண்டார்கள்.
மக்காவிலிருக்கும் தமது உடைமைகள் அனைத்தையும் துறந்து மதீனா சென்றடைந்ததும் ஒவ்வொரு முஹாஜிருக்கும் ஒவ்வொரு அன்சாரியைச் சகோதரத்துவத்திற்காக நபியவர்கள் இணைத்து வைக்கிறார்கள்.அபூபக்ர்(ரலி) அவர்களுக்கு காரிஜா பின் ஸைத் எனும் அன்சாரி உடன்பிறவா சகோதரராகக் கிடைக்கிறார். நபி(ஸல்) அவர்களின் உற்ற தோழர் அவர்களைத் தம் சகோதரராக அடைந்த மகிழ்ச்சியில் காரிஜா பின் ஸைத் அவர்கள் தாம் சம்பாதித்த சொத்தனைத்திலும் பாதியை அபூபக்ர்(ரலி) அவர்களுக்குத் தர முன்வந்தும் அபூபக்ர்(ரலி) அவர்கள் புன்முறுவலோடு மறுத்துவிடுகிறார்கள்..
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நடைபெற்ற பத்ருப்போர், முன்றாமாண்டு நிகழ்ந்த உஹதுப்போர்,ஐந்தாமாண்டு ஏற்பட்ட அகழ்ப்போர், ஆறாமாண்டு செய்யப்பட்ட ஹுதைபிய்யா உடன்படிக்கை, ஏழாமாண்டு கைபர் யுத்தம், எட்டாமாண்டு மக்கா வெற்றி ஆகிய அனைத்திலும் நபி(ஸல்) அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து தமது பணியினைச் செவ்வனே நிறைவேற்றினார்கள் அபூபக்ர்(ரலி) அவர்கள். ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது உமர்(ரலி) அவர்களுக்கும் அபூபக்ர்(ரலி) அவர்களுக்குமிடையே நடந்த உரையாடல் இன்ஷா அல்லாஹ் விரைவில்.....
14 comments:
///முஸ்லிம்கள் (எதிரிகளின் கொடுமைகளால்) சோதனைக் குள்ளாக்கப்பட்டபோது, அபூ பக்ர்(ரலி) தாயகம் துறந்து அபிஸினியாவை நோக்கி சென்றார்கள். 'பர்குல்கிமாத்' எனும் இடத்தை அவர்கள் அடைந்தபோது அப்பகுதியின் தலைவர் இப்னு தம்னா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களிடம், 'எங்கே செல்கிறீர்?' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி) 'என் சமுதாயத்தவர் என்னை வெளியேற்றிவிட்டனர்; எனவே பூமியில் பயணம் (செய்து வேறுபகுதிக்குச்) சென்று என் இறைவனை வணங்கப் போகிறேன்! என்று கூறினார்கள். அதற்கு இப்னு தம்னா, 'உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது' வெளியேற்றப்படவும்கூடாது! ஏனெனில் நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர்; உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்; பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர்; விருத்தினர்களை உபசரிக்கிறீர். எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன்! எனவே, திரும்பி உம்முடைய ஊருக்குச் சென்று இறைவனை வணங்குவீராக!' எனக் கூறினார்.///
இதை ஏற்கன்வே உண்மைத் தோழர் அபூபக்கர் (ரலி) எனும் புத்தகத்தில் படித்தபோது மலைத்து நின்றேன் அதை மீண்டும் நினைவுப்படுத்தியதற்கு ஜஸாக்கல்லாஹ் கைர
மாஷா அல்லாஹ், மிக அருமையான பதிவு. ஜசாக்கல்லாஹ்..
அஸ்ஸலாமு அலைக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகத்துஹு
மாஷா அல்லாஹ் மிக அழகிய பகிர்வு இறைவன் உங்களுக்கு நற்கூலிகளை வழங்குவானாக.
மாஷா அல்லாஹ் மிக அழகியே பகிர்வு .....
அருமையான பதிவு... கங்கிராட்ஸ்...
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு சிஸ்டர்...
மாஷா அல்லாஹ் மிக அழகிய பகிர்வு.. படிக்க படிக்க இன்னும் நீளக் கூடாதான்னு இருக்கு.. சிறந்த முயற்சி அல்ஹம்துலில்லாஹ்..
நபி(ஸல்) அவர்களின் வரலாற்றோடு இணைந்து படித்ததுதான், அபூபக்கர்(ரலி) அவர்களின் வரலாறும். தனியாக அவர்களின் வாழ்வில் நட்ந்தவற்றை இத்தனை விபரமாகத் தெரிய வாய்ப்புக் கிடைத்ததில்லை. ஜஸாக்கல்லாஹ்.
தெரியாத பல விஷயங்களை தெரிய வைத்தற்க்கு ஜஸக்கல்லாஹ் சகோ..
@ ஹைதர் அலி
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரகத்துஹு.
ஹதீஸை மறுபடியும் நினைவுப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சி.... ஜஸாக்கல்லாஹ்
பதிவினைப் படித்து பயனடைந்த அனைவருக்கும் என் நன்றிகள்... நம் அனைவருக்கும் இறைவன் இதற்கான நற்கூலியை வழங்குவானாக!Aameen!
இன்னூம இந்த உலகம் நம்மள நம்பூது
நம்பும் மக்களுக்கும் நம்புவதில் பெருமை கொள்பவர்களுக்குமே இந்தப்பதிவு..
பகுதி ஒன்று மற்றும் இரண்டு படித்து விட்டேன்.
மிக அருமையான பதிவு
Post a Comment