பாளையாங்கோட்டையில் இங்கிலீஷ் மீடியத்தில் படிச்சுட்டு சும்மா பந்தாவா காலேஜிலயும் சேர்ந்தாச்சு. காலேஜ் வகுப்பு தோழிகள் (தமிழ் மீடியத்தில் படிச்சவங்க) ஆங்கிலத்தில் ஏதாவது டவுட்டுன்னா என்கிட்ட கேப்பாங்க... எனக்கு தெரியாத வார்த்தைன்னாலும் எப்படியாவது அந்த வார்த்தை இடம்பெற்ற வாக்கியத்தை, முடிஞ்சா பாராவையே படிச்சு ஒரு வழியா அந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்லுவேன். 'அப்படியா'னு சந்தேகம் கேட்டவ இன்னும் குழம்பி போறத பத்தியெல்லாம் கவலைப்பட்டது கிடையாது.எப்படியோ, தெரியாதுன்னு சொல்லாம, சமாளிச்ச திருப்தி.
டிகிரி முடிச்சு சில மாதங்களில் வேலையிலயும் சேர்ந்தாச்சு அதுவும் அப்பா வேலை பார்த்த வெளிநாட்டுல. கொலீக்ஸ் கூடயும் சரளமா பேசி பழகியாச்சு. ஆனா ஃபோன் அடிச்சா (official calls) வயித்தில கரைக்கும் பாருங்க புளி ...தமிழே மறந்துடும்... அந்தளவுக்கு ஃபோன்ல பேச பயம். ஏதாவது ஃபைல் அல்லது தகவல் கேட்டு யாராவது ஃபோன் பண்ணினா தெரிஞ்ச மேட்டரா இருந்தாலும் சொதப்பிடுவேன். தெரியாத மேட்டர்னா...அவ்வளவுதான்... அத சொல்லி இத சொல்லி நான் குழம்பி...தகவல் கேட்டவங்களையும் குழப்பி ஒரே சொதப்பல்ஸ் ஆஃப் செப்பல்ஸ் தான். தெரியாததை தெரியாதுன்னு சொன்னா எதும் திட்டிடுவாங்களோன்னு ரொம்ப பயம். இப்படியே ஒன்னு, ரெண்டு வாரம் ஓடிடுச்சு.
அப்பதான் என் பக்கத்து ஸீட்ல இருந்த ஒரு ஸ்டாஃப் அவங்களுக்கு வந்த ஃபோன் கால்ஸ் அட்டன்ட் பண்ணும்போது ஒரு விஷயம் கவனிச்சேன். அவங்களுக்கு தெரியாத விஷயத்தை, தெரிந்த விஷயத்தைத் தெரியுன்னு சொல்றத விட, ரொம்ப கேஷுவலா தெரியாதுன்னு சொல்வாங்க.
அப்பதான் எனக்கு உறைச்சுது. தெரிந்த விஷயத்தை தெரியுன்னு சொல்றதுக்கு தைரியம் தேவையில்ல. தெரியாத விஷயத்த தெரியாதுன்னு சொல்றது தான் தைரியசாலி, புத்திசாலிக்கு :)) அழகுன்னு. அதிலருந்து எனக்கு தெரியாத விஷயத்த யாராவது என்கிட்ட கேட்டா 'எனக்கு தெரியாது... கொஞ்சம் டைம் கொடுத்தீங்கன்னா தகவல் சேகரிச்சுட்டு சொல்றேன்' அப்படீன்னு கொஞ்சம் சொல்ல ஆரம்பிச்சேன். அவங்க சரின்னு சொன்னா டேட்டா கலக்ட் பண்ணி தெரிவிக்கறது இல்லாட்டி ரொம்ப நல்லதுன்னு நினைச்சுக்கிறது. அதுக்கப்புறம் அந்த ஆபீஸ்ல ஒரு மூணு வருஷம் பழந்தின்னு கொட்டை போட்டு, அதுக்கப்புறம் கொட்டை போட இடமில்லாததால வேலைய விட்டுட்டேன்;)).