Sunday, February 5, 2012

ஆஷா இருக்கிறா பேஷா..!

பூமியில் கிடைக்கும் அமுது என்ற தலைப்பில் தாய்ப்பாலின் அருமை பெருமை சிலவற்றை உங்களோடு பகிர்ந்திருந்தேன். சில மாதங்களுக்கு முன் விகடனில் இடம்பெற்ற உண்மைச் சம்பவத்தையும் உங்களோடு பகிர நினைத்தே இவ்விடுகை.

என்னதான் நம்ம அதை இதை பேசினாலும் ஊர்க்கதை ஓண்ணு சொன்னா அது மூலமா கிடைக்கிற படிப்பினையே வேறுதான்.

'தாய்ப் பாலுக்கு ஈடு இணையில்லை’ என்பது உலகறிந்த விஷயமே! அதற்கு மகுடம் சூட்டுவதுபோல... பல தாய்களிடம் இருந்து பெறப்பட்ட பால் மூலமாக... ஒரு குழந்தையை மறுபிறவி எடுக்க வைத்து, தாய்ப்பாலின் பெருமையை மேலும் ஒரு படி உயர்த்திப் பிடித்திருக்கின்றனர் திண்டுக்கல், அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவக் குழுவினர்!
 
திண்டுக்கல் மாவட்டம், தவசிமேடை கிராமத்தைச் சேர்ந்தவர் நீதிமேரி. கூலி வேலை செய்துவரும் இவருக்கு, கொசவபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. ஆஷா என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை, தாய்ப்பால் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால் பிறந்ததிலிருந்தே நோய்களால் தாக்கப்பட்டு, சாவின் விளிம்புக்கே சென்றுவிட... கடைசிக் கட்டத்தில் ஆஷாவைக் காப்பாற்றியிருக்கிறது, தாய்(களின்) பால்!
 
ஏழு மாதக் குழந்தை ஆஷாவை கைகளுக்குள் அடைக்கலப்படுத்தியபடி   அமர்ந்திருந்த நீதிமேரி, ''தாய்ப்பால் போதாதால, ஆறாவது நாள்ல இருந்தே புட்டிப்பால் கொடுக்க ஆரம்பிச்சுட்டோம். நாப்பத்தி ரெண்டாவது நாள்ல வயித்துப் போக்கு ஆரம்பிக்க, திண்டுக்கல், கெவருமென்ட் ஆஸ்பத்திரியில சேர்த்தோம். ரத்தம், குளுகோஸ்னு ஏத்தியும் ஒண்ணும் சரியாகல. என்ன ஆகப்போகுதோனு தவியா தவிச்சுக்கிடந்தேன்.
 
என் நிலையைப் பார்த்து ரொம்பவும் பரிதாபப்பட்ட டாக்டர் ஜெயின்லால் பிரகாஷ், 'பக்கத்து பெட்கள்ல குழந்தை பெத்திருந்தவங்ககிட்ட இருந்து தாய்ப்பாலை வாங்கிக் கொடுக்கலாம்'னு சொன்னார். இப்போ குழந்தை உயிர் பிழைச்சுக் கிடக்கறதுக்கு அவர்தான் முக்கிய காரணம்! வெவரமெல்லாம் அவர்கிட்டயே கேட்டுக்கோங்க'' என்றார் கண்கள் கலங்கியபடி.
அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நல தலைமை மருத்துவர் ஜெயின்லால் பிரகாஷிடம் பேசினோம். ''நீதிமேரி, ரொம்ப கஷ்டப்படற குடும்பம். ஊட்டம் பத்தாததால அவங்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கல. குழந்தைக்கு அடிக்கடி வயித்துப் போக்கும் ஏற்பட, குழந்தை பத்தின கவலையால தாய்ப்பால் ரொம்பவும் சுண்டிப் போச்சு. தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஆகவே... நோய்க்கிருமிகளோட தாக்கம் அதிகமாகி, ரத்தத்துல கலந்து 'செப்டிமீசியா ஸ்டேஜு'க்கு வந்துடுச்சு குழந்தை. இறுதியா, 'மராஸ்மிக் ஸ்டேஜ்'ல, உடம்புல உயிர் ஒட்டிக்கிட்டு இருந்ததுனுதான் சொல்லணும்.
 
குளுக்கோஸ், ரத்தம் எல்லாம் ஏத்தினோம்... ஏகப்பட்ட மருந்துகளையும் கொடுத்தோம். பொதுவா அரசு மருத்துவமனையில வெளியில இருந்து மருந்துகளை வாங்கிக் கொடுக்கக் கூடாது. இந்தக் குழந்தைக்காக மேலிடத்துல ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி, அரசு செலவுலேயே வெளியில இருந்து மருந்துகள வாங்கிக் கொடுத்தோம். ஆனாலும், குழந்தையோட உடம்புல முன்னேற்றம் இல்லை. இறுதியா, அந்த சிசுவை எப்படியும் காப்பாத்தியே ஆகணும்ங்கற பொறுப்போட ஜூனியர் டாக்டர்ஸ், ஸ்டாஃப் நர்ஸ்கள், டிரெய்னிங் நர்ஸ்கள்னு எங்க டீம் போட்ட மீட்டிங்லதன்... 'தாய்ப்பாலை இரவல் வாங்கிக் கொடுக்கலாம்'ங்கற முடிவுக்கு வந்தோம்.
வார்டுல குழந்தை பெற்றிருந்த எல்லா தாய்மார்கள்கிட்டயும் குழந்தை ஆஷாவோட நிலையையும், தாய்ப்பாலோட மகத்துவத்தையும் எடுத்துச் சொல்லி புரிய வெச்சோம். சிசேரியன் பண்ணினவங்க, குழந்தை சரியா பால் குடிக்காம இருக்கிற தாய்மார்கள், போதுமான அளவைவிட அதிகமா பால் சுரக்கிற தாய்மார்கள்னு எல்லாரும் சந்தோஷமா பாலை எடுத்துத் தர ஆரம்பிச்சாங்க. ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை தாய்ப்பாலை கொடுக்க ஆரம்பிச்சோம். நாலஞ்சு நாள்லயே குழந்தை தேறிடுச்சு! பல தாய்களோட பால் மூலமா... வைட்டமின், புரோட்டீன்னு எல்லாச் சத்தும் கிடைச்சதுல... இப்ப முழுசா குணமாகி நல்ல ஆரோக்கியமா இருக்கு குழந்தை'' என்று நிம்மதி பெருமூச்சு விட்டபடி சொன்ன டாக்டர் ஜெயின்லால் பிரகாஷ், நிறைவாகச் சொன்னது... ஒவ்வொரு பெண்ணும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம். அது...
''இந்தக் குழந்தை பிழைச்ச விஷயத்தை 'மிராக்கிள் ஆஃப் பிரெஸ்ட் மில்க்’னுதான் சொல்லணும். 'தாய்ப்பால், இத்தனை சக்தி வாய்ந்ததா!'னு மத்த தாய்மார்கள் எல்லாம் அதோட அற்புதத்தை நேரடியா பார்த்து முழுமையா உணர்ந்தாங்க. இப்போ இருக்கிற இளம் தாய்மார்களும், அமிர்தமா இருக்கற தாய்ப்பாலோட மகிமையைப் புரிஞ்சு, உயிர் காக்கும் அந்த விலையில்லாத மருந்தை வீணாக்காம கொடுத்து, குழந்தைகள நோயில்லாமலும், புத்திசாலியாவும் வளர்க்கணும்!''

26 comments:

Jaleela Kamal said...

அருமையான பகிர்வை பகிர்ந்து இருக்கீங்க

ஆஷாவுக்கு மறுபிறவி கிடைத்துள்ளது

Jaleela Kamal said...

//இளம் தாய்மார்களும், அமிர்தமா இருக்கற தாய்ப்பாலோட மகிமையைப் புரிஞ்சு, உயிர் காக்கும் அந்த விலையில்லாத மருந்தை வீணாக்காம கொடுத்து, குழந்தைகள நோயில்லாமலும், புத்திசாலியாவும் வளர்க்கணும்!''//

மிகச்சரியாக சொல்லி இருக்கீங்

ஆமினா said...

போட்டோவை பார்த்தது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்துவிட்டது...

இச்செய்தியை முன்பு எங்கேயோ படித்த ஞாபகம். ஆனால் படங்கள் இன்று தான் பார்க்கிறேன்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.என்றென்றும்16,
மிகவும் அருமையான பகிர்வு.
ஜசாக்கலாஹ் க்ஹைர்.

//என்னதான் நம்ம அதை இதை பேசினாலும் ஊர்க்கதை ஓண்ணு சொன்னா அது மூலமா கிடைக்கிற படிப்பினையே வேறுதான்.//---100% உண்மை..!!!

இங்கே பகிர்ந்திருக்கும் படம் என் நினைவை விட்டு நீங்காது என்றே எண்ணுகிறேன்..!

//எல்லாரும் சந்தோஷமா பாலை எடுத்துத் தர ஆரம்பிச்சாங்க.//---மாஷாஅல்லாஹ்..! உயிரோடு இருக்கும்போது தரப்படும் ரத்ததானம், கிட்னி தானம் போன்ற எத்தனையோ உயிர்காக்கும் தானம் பார்த்திருக்கிறேன்...

அவற்றில் எல்லாம் நிச்சயமாக இது ஒரு ஸ்பெஷல் தானம்..! அந்த டாக்டர்.ஜெயின்லால் பிரகாஷ், நர்ஸ்கள் உட்பட அந்த தர்ம சீதேவிதாய்மார்கள் அனைவருக்கும் இறைவன் அருள் புரியட்டும்.

"ஆஷா இருக்கிறா பேஷா..!" அல்ஹம்துலில்லாஹ்.

Mahi said...

wow! ஆண்டவன் படைப்பில் இதுவும் ஒரு அற்புதமே! பகிர்வுக்கு நன்றிங்க!

ஸாதிகா said...

உங்கள் பதிவின் மூலம் தகவல் அறிந்து கொண்டேன்,நன்றி!

ஹுஸைனம்மா said...

விகடன்ல படிக்கும்போதே பகீர்னு இருந்துது. இப்ப இருக்கிற ஆஷா ப்டத்தைப் பார்க்கும்போது, ஏதோ அற்புதம் போல இருக்கு.

கொஞ்ச நாள் முன்னாடி ஒருத்தர் பதிவில், அமெரிக்காவில் இந்த மாதிரி தாய்மார்களிடமிருந்து அதிகப்படியான பாலை சேகரித்து, நலிவடைந்த அல்லது பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்குக் கொடுக்கீறாங்கன்னு படிச்சேன். அதுமாதிரி பல இடங்களில் இருந்தா நல்லாருக்கும்.

ஹைதர் அலி said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

பகிர்வுக்கு நன்றி சகோ

குழந்தைகளுக்கு பாலூட்டும் காலம் இரண்டு ஆண்டுகள் பார்க்க:

وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَىٰ وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ

அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”
(குர்ஆன்31:14)

وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا ۖ حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا ۖ وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا ۚ حَتَّىٰ إِذَا بَلَغَ أَشُدَّهُ وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي ۖ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ

46:15. மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.
(குர்ஆன் 46:15)

என் தாய் நான் பால் குடிப்பதை மறக்கடிப்பதற்காக வேப்பஎண்ணெயை தடவி மறக்கடிக்க வைத்தது எனக்கு இன்னும் கசப்பும் சம்பவமும் நினைவிருக்கிறது.

ஸ்ரீராம். said...

மனதை நெகிழ வைத்த பதிவு. தாய்ப்பாலின் மகத்துவம்தான் என்னே? இறைவன் மிகப் பெரியவன்.

enrenrum16 said...

வாங்க ஜலிலா அக்கா ... விகடனில் கூறப்பறிருந்த அவ்வாசகம் எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிக்கா

enrenrum16 said...

இரு படங்களையும் பார்க்கும்போது இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அதிசயம் ஆனால் உண்மை என்பது போல் தான் எனக்கும் தோன்றியது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆமினா

enrenrum16 said...

/அந்த டாக்டர்.ஜெயின்லால் பிரகாஷ், நர்ஸ்கள் உட்பட அந்த தர்ம சீதேவிதாய்மார்கள் அனைவருக்கும் இறைவன் அருள் புரியட்டும். / சரியாக சொன்னீர்கள். அந்த நல்மனதை அவர்களுககு கொடுத்த இறைவன் அவர்களுக்கு நற்கூலியும் கொடுக்க வேண்டுவோம்

enrenrum16 said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகி, சாதிகாக்கா

மேற்கத்திய நாடுகளைப் பார்த்து எதைதையோ செய்றோம் ... இந்த ஐடியாவும் பின்பற்றப்பட்டால் எத்தனையோ குழந்தைகளைக் காப்பாற்றலாமே ஹுசைனம்மா.. கருத்தைப் பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி.

enrenrum16 said...

வாலைக்கும் சலாம் ஹைதர்

ஜசாக்கல்லாஹ ஹைர் ... சூப்பர் துஆவை எங்களோடு பகிர்ந்ததுக்கு. இனி இத்துஆவை தினமும் கேட்க விரும்புகிறேன். (அது என் 40 வயது கணக்கு?) ம்.. மலரும் நினைவுகளில் வேப்பங்காய் குஉட இனிக்கிறது இல்லையா ? வருகைக்கு நன்றி ஹைதர்.

enrenrum16 said...

ஸ்ரீராம்....வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

விச்சு said...

தாய்ப்பாலின் சக்தியை இன்றைய பெண்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சுப்ஹானல்லாஹ்..படிக்கும் போதே சிலிர்ப்பு ஏற்படுகின்றது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...ஆமீன்.

ஜசாக்கல்லாஹு க்ஹைரன் கதிரா சிஸ்டர்...

நட்புடன் ஜமால் said...

சுப் ஹானல்லாஹ், உதவிய அத்தனை தாய்களுக்கும் நன்றிகள்.

சிராஜ் said...

நல்ல பஹிர்விர்க்கு நன்றி சகோ.

இரண்டு படங்களிலும் இருக்கும் குழந்தை ஒரே குழந்தை என்பதை நம்பவே முடியவில்லை.

சுவனப்பிரியன் said...

ஆண்டவன் படைப்பில் இதுவும் ஒரு அற்புதமே! பகிர்வுக்கு நன்றிங்க!

VANJOOR said...

.
.
.
CLICK TO >>>>> புற்றுநோய் தீர்க்கும் தாய்ப்பால். தாய்பாலின் அதிசயங்கள். <<<< READ

.
.

Syed Ibramsha said...

நல்ல விழிப்புணர்வூட்டும் பதிவு.

எம் அப்துல் காதர் said...

தாய்ப்பால் தந்த அனைத்து தாய் மார்களும் பெருமைக்குரியவர்கள். டாக்டர்.ஜெயின்லால் பிரகாஷ், நர்ஸ்கள் உட்பட அனைவர்களும் போற்றுதலுக்குரியவர்கள். அவர்கள் அனைவர்களுக்கும் இறைவன் அருள் புரிவானாக!

எனக்கு இரண்டு வருடத்துக்கு மேல் தாய்ப்பால் தந்ததாக எங்க அம்மா சொல்வாங்க:-)) இறைவன் அனைத்து(பால்தரும்/தராத)தாய்மார்களையும் சிறப்பாக வைக்க பிரார்த்திக்கிறேன்- பதிவிட்ட உங்களுக்கும் சேர்த்து தான். ஜசாக்கல்லாஹைரன்.

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

தாய்பாலின் அருமையே உணர்த்த நிதர்சனமாக ஒரு பதிவு!

அதிலும் அந்த படம்
நமக்கெல்லாம் ஒரு பாடம்.,

சுபஹானல்லாஹ்... இறைவனுக்கே எல்லா புகழும்

பகிர்ந்த பதிவிற்கு ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

enrenrum16 said...
This comment has been removed by the author.
enrenrum16 said...

லேப்டாப்பில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையால் ப்ளாக்குகளைப் பார்க்கமுடியவில்லை. இன்னும் பிரச்சினை முழுவதும் சரியாகவில்லை.

முதல் முறையாக வலையைப் பார்வையிட்ட, ஓட்டளித்த
விச்சு
ஆஷிக் அஹமது
ஜமால்
சிராஜ்
சுவனப்பிரியன்
வாஞ்ஜூர் அவர்கள்
செய்யது இப்ராம்ஷா
அப்துல் காதர்
குலாம்
அனைத்து தோழர்களுக்கும் எனது நன்றிகலேப்டாப்பில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையால் ப்ளாக்குகளைப் பார்க்கமுடியவில்லை. இன்னும் பிரச்சினை முழுவதும் சரியாகவில்லை.

முதல் முறையாக வலையைப் பார்வையிட்ட, ஓட்டளித்த
விச்சு
ஆஷிக் அஹமது
ஜமால்
சிராஜ்
சுவனப்பிரியன்
வாஞ்ஜூர் அவர்கள்
செய்யது இப்ராம்ஷா
அப்துல் காதர்
குலாம்
அனைத்து தோழர்களுக்கும் எனது நன்றிகலேப்டாப்பில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையால் ப்ளாக்குகளைப் பார்க்கமுடியவில்லை. இன்னும் பிரச்சினை முழுவதும் சரியாகவில்லை.

முதல் முறையாக வலையைப் பார்வையிட்ட, ஓட்டளித்த
விச்சு
ஆஷிக் அஹமது
ஜமால்
சிராஜ்
சுவனப்பிரியன்
வாஞ்ஜூர் அவர்கள்
செய்யது இப்ராம்ஷா
அப்துல் காதர்
குலாம்
அனைத்து தோழர்களுக்கும் எனது நன்றிகள். இறைவன் நம் கண் முன்னே நிகழ்த்தி கொண்டிருக்கும் அதிசயங்களில் இதுவும் ஒன்றே. இந்நிகழ்ச்சிகளின் மூலம் நமது இறையச்சம் அதிகமாக இறைவன் உதவி செய்வானாக. ஆமீன்.. இறைவன் நம் கண் முன்னே நிகழ்த்தி கொண்டிருக்கும் அதிசயங்களில் இதுவும் ஒன்றே. இந்நிகழ்ச்சிகளின் மூலம் நமது இறையச்சம் அதிகமாக இறைவன் உதவி செய்வானாக. ஆமீன்.. இறைவன் நம் கண் முன்னே நிகழ்த்தி கொண்டிருக்கும் அதிசயங்களில் இதுவும் ஒன்றே. இந்நிகழ்ச்சிகளின் மூலம் நமது இறையச்சம் அதிகமாக இறைவன் உதவி செய்வானாக. ஆமீன்.