Thursday, November 29, 2012

போட்டி......போட்டி ........ போட்டா போட்டி!!!

ப்ளாக் ஆரம்பிக்க ஆசைப்பட்டு ஒரு ப்ளாக்கையும் ஆரம்பிச்சுட்டு அதுல பதிவுன்றதே அத்தி பூத்த மாதிரி இருக்கு...மைண்ட்ல நிறைய உருப்படியான சப்ஜக்ட் இருந்தும் அதை முறைப்படி கொஞ்சம் நெட்டில் ரெஃபர் செய்து ஆற அமர எழுத நேரமின்மையால் ஏதோ மொக்கை பதிவா போட்டு காலத்தை ஓட்டிக்கிட்டுருக்கேன்.... :((...


அதான் எல்லாருக்கும் தெரிஞ்ச கதை தானே....வேற மேட்டர் கிடைக்காததானால பதிவு போட முடியாததையே ஒரு பதிவா எழுதப் போறியான்னு கேட்டு எனக்கிருக்கிற கொஞ்ச நஞ்ச மானத்தையும் காற்றில் பறக்க விட்டுடாதீங்க.... அது உங்களால் முடியாது...ஏன்.... ஏன்னா நானே அதை கொஞ்ச நாள் முன்னாடிதான் ஒரு பதிவு போட்டு என் மானத்தை நாடு கடத்திட்டேன் ஹி..ஹி..ஹி..


இப்படியாக பொய்க்கிட்டுருந்த வேளையில் இஸ்லாமிய பெண்மணியில் ஒரு கட்டுரைப் போட்டி ஒன்று அறிவித்தார்கள். சரி.. நம்ம ப்ளாகில் தான் ஒண்ணும் உருப்படியாக எழுத முடியல... தானாக வந்த வாய்ப்பையாவது கொஞ்சம் உபயோகப்படுத்திக் கொண்டு வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுப்போம்னு ஒரு ஆர்வம் வந்தது. பரிசு வாங்கிற பேராசையெல்லாம் இல்லை (ஹி..ஹி..).. நமக்கு எப்பவும் மத்தவங்களுக்கு ....(அக்கா, தங்கை, கணவர் தவிர) விட்டுக்கொடுத்து தான் பழக்கம்..... ஏதாவது வேலையில் இருக்கும்போது இந்த கட்டுரை சம்பந்தமா சில பாயிண்ட்ஸ் தோன்றும்... அதற்கு எப்படி அழுத்து வடிவம் கொடுக்கறதுன்னு தெரியாம முழிச்சிட்டுருக்கறது வேற விஷயம்.


ஒக்கே..கமின் டு தி பாயின்ட்... இந்த கட்டுரையில் முக்கியமான அம்சம் என்னவென்றால் இஸ்லாமிய தளத்தில் இக்கட்டுரையை ஒரு முஸ்லிம் தான் எழுத வேண்டும் என்றில்லை..யார் வேண்டுமானாலும் எழுதலாம்.... பரிசுகளை வெல்லலாம். யாராயினும் கட்டுரையின் விவாதத்தில் பாசிட்டிவான விஷயங்கள் மட்டுமல்ல உண்மையான நெகடிவ் விஷயங்களையும் பகிரலாம். அவை கல்வித்துறையில் பின்தங்கியிருக்கும் முஸ்லிம்  சமுதாயத்தைக்  கொஞ்சம் முன்னேற்றப் பாதையில்  இட்டுச் செல்ல உதவும்.




இது தான்  அப்பரிசுப் போட்டிக்கான  தலைப்பு..... பங்கு பெறுங்கள்... வெல்லலாம்..., இன் ஷா அல்லாஹ் :-)

                          



ஒன்றரை மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.  வழக்கம்போல் மெதுவாக தூசு தட்டி எழுத ஆரம்பித்தால் நம்ம ஜலிலாக்கா ஒரு சமையல் போட்டி அறிவிச்சாங்க....  சரி...பெரிய சமையல் கலை வல்லுனர்கள் பங்கேற்கப்போற போட்டி... நாம போய் 'ஆஹா... சூப்பர் அக்கா...  போட்டியை வெற்றிகரமா நடத்த வாழ்த்துக்கள்' னு ஒரு வார்த்தை சொல்லிட்டு வரலாம்னு பார்த்தா இடையில என் பேரைப பார்த்ததும் ஷாக்காகிட்டேன்...


அக்காவோட கையில கால்ல விழுந்தாவது இந்தப் போட்டியில இருந்து எஸ்கேப்பாகலாம்னு கமண்ட் பாக்ஸ் போனா அங்க ஏற்கனவே நான் சொல்ல நினைத்ததையெல்லாம் ஹுசைனம்மா ஜலிலாக்காகிட்ட சொல்லி நல்லா டோஸ் வாங்கி கட்டியிருந்தாங்க.. ஆனானப்பட்ட ஹுசைனம்மாவுக்கே இந்த கதின்னா நமக்கு எதுக்கு வம்புன்னு சத்தம் காட்டாமல் வந்தாச்சு.. :-((


யாராவது கொஞ்சம் குண்டான ஆண்களைப் பார்த்தால் நான் நினைத்துக் கொள்வேன்..... நல்லா சமைக்கத் தெரிந்த மனைவி அமையப் பெற்ற இவர் ரொம்ப அதிர்ஷ்டக்காரர்தான்னு..... அதே சமயம் வத்தலும் தொத்தலுமாயிருக்கிற எங்க ஐயாத்துரையைப பார்த்துக் கொஞ்சம் பரிதாபமாகவும் இருக்கும்... இவர் கொடுத்து வச்சது அவ்வளவுதான்.... நம்ம மேல எந்தத் தப்புமில்லன்ற  உண்மையை நினைத்துக்  கொஞ்சம் சமாதானப்படுத்திக்குவேன். ;-))


இந்த நிலைமையில இருக்கிற என்னை... இந்த உண்மையெல்லாம் தெரியாத அப்பாவி ஜலிலாக்கா என்னையும் ரொம்ம்ம்ப நல்ல்ல்ல்லவன்னு நினச்சு அழைப்பு கொடுத்துட்டாங்க....  நமக்குத் தெரிந்த ரசம் ரெசிப்பியையும்  உப்புமா போடுற ரெசிப்பியையும்   அனுப்பி வைக்கிற முடிவுல இருக்கிறேன்.... அக்கா கோச்சிக்கக்கூடாது, ப்ளிஸ்....




ஆக, எப்பவும் போட்டியும் நினைவுமாக  ஒரு மாதிரி யோசனையிலயே கழிந்து கொண்டிருக்க (ஒண்ணும் செயல்வடிவம் பெறவில்லை ...அது வேற விஷயம்)... அப்புறம் கொஞ்ச நாட்கள்ல என் இனிய இல்லம் பாயிஸாவின் தளத்தில் மற்றொரு போட்டி...... இதில் நிறைய விஷயங்கள் புதுமையாக இருந்தது எனக்கு.... ரொம்ப யோசித்து குழந்தைகளுக்குப போட்டி வைத்திருக்காங்க...  ஆனா... பெற்றோருக்கும் பங்கு உண்டு....  அதாவது, பெற்றோர், இப்போட்டியினைப் பற்றி அவங்க தளத்தில் ஷேர் செய்தால் சுளையாக 20 மார்க்குகள் நோகாமல் கிடைக்கும்ன்ற மாதிரி நிறைய புது விதிகள் சொல்லியிருந்தாங்க....




இந்தப்  போட்டிக்கு முழுதாக ஒரு மாதம் அவகாசமுண்டு. அவங்க ப்ளாக்கில் பின்தொடர்பவர்களுக்கு   மட்டுமே அழைப்பு.... மற்றவர்கள் பங்கு பெற விருப்பப்பட்டால் பாலோவராகிக் கொள்ளுங்கள்னு அவங்க சொல்லியிருந்த டெக்னிக் எனக்கு ரொம்பப்  பிடிச்சிருக்கு....;))


ஆக மொத்தத்தில் இந்த டிசம்பர் மாதம் போட்டி மாஆஆஆதம்..... வெற்றி பெறுவதை விட, பங்கு பெறுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இதன் முலம் பதிவர்களுக்கிடையே நல்ல அறிமுகமும் பழக்கமும் வாழ்க்கையில் ஒரு மாற்றமும் கிடைக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. 


வாழ்க பதிவர்கள்...... வாழ்க போட்டிகள்..... வளர்க தோழமை.... !!!! போட்டிகளில் பங்கு பெறுபவர்களுக்கு வாழ்த்துக்கள்..... வெற்றி பெறுபவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :-)))

10 comments:

ஹுஸைனம்மா said...

//மத்தவங்களுக்கு ....(அக்கா, தங்கை, கணவர் தவிர) விட்டுக்கொடுத்து தான் பழக்கம்//

ஐ ஸீ!! மைண்ட்ல வச்சுக்கிறேன்!! :-)

//இந்த கட்டுரை சம்பந்தமா சில பாயிண்ட்ஸ் தோன்றும்... அதற்கு எப்படி எழுத்து வடிவம் கொடுக்கறதுன்னு தெரியாம //

உங்க வருத்தம் புரியுது.... அந்த பாயிண்ட்ஸை மட்டும் கொஞ்சம் சொல்லுங்க, நான் எழுத்து வடிவம் கொடுத்து... என் கட்டுரையில் சேத்துக்கிறேன்!!! (சமூகத்துக்கு உங்க நல்ல கருத்துக்கள் சேராமப் போயிடக்கூடாதேங்கிற ஒர்ரே நல்லெண்ணம்தான், வேற எதுவ்வுமேயில்லை)

//ஹுசைனம்மாவுக்கே இந்த கதின்னா நமக்கு எதுக்கு வம்புன்னு சத்தம் காட்டாமல்//

மனசுக்குள்ள சத்தம் போட்டு சிரிச்சதெல்லாம் எனக்கும் டெலிபதில கேட்டுது!! :-)

//... கிடைக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
வாழ்க பதிவர்கள்...... வாழ்க போட்டிகள்..... வளர்க தோழமை.... !!!! போட்டிகளில் பங்கு பெறுபவர்களுக்கு வாழ்த்துக்கள்..... வெற்றி பெறுபவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்//

நீங்க பேச்சாளராக ஆக டிரை பண்ணலாமே!! இந்த வரிகளே ஒளிமயமான எதிர்காலத்தைக் கன்ஃபர்ம் பண்ணுதே.... :-)))

Unknown said...

Asathalana post... Unga pechi nadai ennaku romba pidithu iruku...

En blog add ku thanks .10 mark serthaachu

enrenrum16 said...

//உங்க வருத்தம் புரியுது.... அந்த பாயிண்ட்ஸை மட்டும் கொஞ்சம் சொல்லுங்க, நான் எழுத்து வடிவம் கொடுத்து... என் கட்டுரையில் சேத்துக்கிறேன்!!! (சமூகத்துக்கு உங்க நல்ல கருத்துக்கள் சேராமப் போயிடக்கூடாதேங்கிற ஒர்ரே நல்லெண்ணம்தான், வேற எதுவ்வுமேயில்லை)

உங்க ஆதங்கம் எனக்குப் புரியுது... ஆனா, என்ன பிரச்சினைன்னா.... என் சிந்தனைகளுக்கு எழுத்து வடிவம் மட்டுமல்ல.... பேச்சு வடிவமும் கொடுக்க முடியல :((.... நீங்க அப்படியே டெலிபதி மூலமா அந்த பாயிண்ட்ஸை எடுத்துக்கங்க...உங்களுக்கு முழு காப்பிரைட் தர்றேன்.... :))

//மனசுக்குள்ள சத்தம் போட்டு சிரிச்சதெல்லாம் எனக்கும் டெலிபதில கேட்டுது!! :-)//

கேட்டுடுச்சா...ஹி...ஹி....


/நீங்க பேச்சாளராக ஆக டிரை பண்ணலாமே!! இந்த வரிகளே ஒளிமயமான எதிர்காலத்தைக் கன்ஃபர்ம் பண்ணுதே.... :-))) /

கொஞ்சம் தப்பித்தவறி தூயதமிழ்ல எழுதிட்டா உங்களுக்கெல்லாம் பொறுக்காதே... இப்படியா கிண்டல் பண்றது...??!! அவ்வ்வ்வ்.....

enrenrum16 said...

@பாயிஸா

10மார்க் போட்டுட்டீங்களா...ஓக்கே... உங்க கருத்து எனக்கு பிடிச்சிருக்கு. ;-))

சிராஜ் said...

சலாம்..

மாஷா அல்லாஹ்.. அருமையான எழுத்து நடை... கலக்கலா இருக்கு...

அடுத்து டீக்கடை ஒரு குரான் பரிசுப் போட்டி நடத்த இருக்கு... 3000 ரூபாய் பரிசு.. ஒவ்வொரு மாதமும் நடக்கும் இது...

enrenrum16 said...

ஊக்கம்கொடுக்கும் கருத்துக்கும் போட்டி பற்றிய தகவலுக்கும் மிக்க நன்றி சிராஜ்.

ஸாதிகா said...

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..சமைக்கத்தெரியாது சமைக்கவே தெரியாது என்று அபுதாபியில் இருந்து ஒருகூக்குரல் எப்பவும் கேட்டுட்டே இருக்கும்.அதே மாதிரி இப்ப நீங்களும் குரல் கொடுக்க ஆரம்பிச்சாச்சா...இப்படி யெல்லாம் சொல்லி தப்பிக்க கூடாது.முதலில் நல்ல சமைக்க கற்றுக்கொண்டு வெகு சீக்கிரமா ஒரு சமையல் பிளாக்கை ஆரம்பிங்கோ.நாங்கள்ளா நெஜமாலும் உங்களுக்கு சமைத்தெரிஞ்சுடுச்சேன்னு உங்க வீட்டுக்கு விருந்துக்கு வந்துட மாட்டோம்.அதை உறுதியா சொல்லிகறேன்.ஹி..ஹி..

enrenrum16 said...

@shadiqah அக்கா...

//...இப்படி யெல்லாம் சொல்லி தப்பிக்க கூடாது//
நான் உண்மையைத் தான் சொல்கிறேன்...உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.... நம்புங்க ப்ளீஸ்.... என்னது... சமையல் ப்ளாகா? ஒரு டீஸ்பூன் 4 டேபிள்ஸ்பூன் என்று பாரபட்சமெல்லாம் என் சமையலில் கிடையாது....ஹி..ஹி... எல்லாமே என் பாஷையில ஸ்பூன்... அவ்வளவுதான். நானாவது சமையலைப் பற்றி எழுதறதாவது....;))

ஒண்ணு வேணா செய்றேன்.... நீங்க எங்க வீட்டுக்கு விருந்துக்கு வர்றேன்னு வாக்கு கொடுங்க..... நான் சமையல் ப்ளாக் ஆரம்பிக்கிறேன்.... (அப்படா...;))

ஸாதிகா said...

//நீங்க எங்க வீட்டுக்கு விருந்துக்கு வர்றேன்னு வாக்கு கொடுங்க..... நான் சமையல் ப்ளாக் ஆரம்பிக்கிறேன்.... (அப்படா...;))// யம்மாடி..இந்த கில்லாடிக்கு அந்த கில்லாடி எவ்வளவோ பெட்டருப்பா!!!!!

enrenrum16 said...

/யம்மாடி..இந்த கில்லாடிக்கு அந்த கில்லாடி எவ்வளவோ பெட்டருப்பா!!!!!/ ஹி..ஹி.. என்னக்கா பண்றது...எல்லாம் ஒரே குட்டை ஆகிடுச்சே ;-))