Monday, January 3, 2011

குழந்தைப் பேச்சு!

சில நாட்களுக்கு முன் இந்த ஹதீஸை வாசிக்க நேர்ந்தது..அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

உலகில் மூன்று குழந்தைகள் பேசியதாக இஸ்லாமிய வரலாறு கூறுகிறது. அதில் முதலாவது ஆதாரம் ஈஸா நபி அவர்களைப் பற்றியது. மர்யம் நபி அவர்களுக்குப் பிறந்த குழந்தையை ஊரார் தூற்றியபோது ஈஸா நபி அவர்கள் அவர்களின் களங்கத்தைத் துடைக்கவும் அவர்களின் நபித்துவத்தை எடுத்துரைக்கவும் பேசிய வரலாறு அனைவரும் அறிந்ததே.

இரண்டாவது ஆதாரமானது ஜுரைஜ் என்பவரின் வாழ்வில் நடந்தது. இவர் தன் வாழ்வில் இறைவழிபாட்டை மட்டுமே எடுத்து கொண்டு அதிலேயே தன் வாழ்வைக் கழித்தவர்.

ஒரு நாள் அவரது தாயார் அவருடைய வீட்டுக்கு வந்து அவரை அழைக்கிறார். ஜுரைஜோ இறை வழிபாட்டில் இருக்கிறார். அதை அவரது தாய் அறியவில்லை.ஜுரைஜ் தன் மனதில் "என் இறைவா..நான் வழிபாட்டில் இருக்கும்போது என் தாய் அழைக்கிறாரே" என்று நினைத்துவிட்டு தன் தொழுகையைத் தொடர்கிறார். அவரது தாய் போய் விடுகிறார். மறுநாளும் வந்து அவரது தாயார் ஜுரைஜை அழைக்கிறார். அப்போதும் அவர் இறை வழிபாட்டில் இருக்கிறார். ஜுரைஜ் தன் மனதில் "என் இறைவா..நான் வழிபாட்டில் இருக்கும்போது என் தாய் அழைக்கிறாரே" என்று நினைத்துவிட்டு தன் தொழுகையைத் தொடர்கிறார். அவரது தாய் அறியவில்லை. அவர் போய் விடுகிறார்.

மூன்றாவது நாளும் வந்து ஜுரைஜை அழைக்கிறார். அப்போதும் அவர் இறை வழிபாட்டில் இருக்கிறார். அதை அவரது தாய் அறியவில்லை. ஜுரைஜ் தன் மனதில் "என் இறைவா..நான் வழிபாட்டில் இருக்கும்போது என் தாய் அழைக்கிறாரே" என்று நினைத்துவிட்டு தன் தொழுகையைத் தொடர்கிறார். இப்போது அவரது தாய் "என் இறைவா... விபச்சாரியின் முகத்தில் விழிக்காமல் இவனை மரணமடையச் செய்யாதே" என்று கூறுகிறார்.

பின் மெல்ல மெல்ல ஜுரைஜின் வழிபடுதல் இஸ்ராயீலின் மக்களின் மத்தியில் பரவுகிறது. அங்கு வசிக்கும் ஒரு விபச்சாரி அவ்வூர் மக்களிடம் ' நீங்கள் அனுமதித்தால் ஜுரைஜை என்னால் தீங்கின் பக்கம் அழைத்து காட்டுகிறேன்' என்று கூறுகிறாள். அவள் ஜுரைஜிடம் போய் அவரது கவனத்தைத் தொழுகையிலுருந்து திருப்ப எவ்வளவோ முயன்றும் தோற்கிறாள். அதற்குப் பின் அவளுக்கும் அங்கிருக்கும் ஒரு ஆடு மேய்ப்பாளனுக்கும் பிறந்த குழந்தையை ஊரார் முன் காட்டி அது தனக்கும் ஜுரைஜுக்கும் பிறந்த குழந்தை என கூறுகிறாள். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரது வழிபாட்டுத்தலத்தை அழித்து அவரையும் அடிக்க ஆரம்பிக்கின்றனர். அவர்களின் மாறுதலான நடவடிக்கைக்கு காரணமென்ன என்று அவர் மக்களிடம் கேட்கையில் அவர்கள் அவ்விபச்சாரி சொல்லியதை அவரிடம் சொல்கின்றனர். அவர் அகுழந்தையைக் கொண்டு வரச் சொல்கிறார். அகுழந்தை கொண்டுவரப்பட்டதும் அவர் இறைவனைத் தொழுது உதவி தேடுகிறார். பின்னர் அக்குழந்தையைத் தன் கையில் தூக்கி "குழந்தையே, உன் தகப்பன் யார்" என கேட்கிறார். அக்குழந்தையும் இன்னார் என அந்த ஆடு மேய்ப்பவனைப் பற்றி கூறுகிறது. இதைக் கேட்ட மக்கள் தங்கள் தவறை எண்ணி வருந்தி அவருடைய வழிபாட்டுத்தலத்தை மீண்டும் எழுப்புகின்றனர்.

இந்த ஹதீஸ் முஹம்மது நபியவர்களிடமிருந்து கூறப்பெற்றதாக அபு ஹுரைரா அவர்கள் பதிவு செய்தது.

இதன் மூலம் கிடைக்கப் பெறும் அறிவுரை:

1. கடமையில்லாத தொழுகையில் ஈடுபட்டிருக்கும்போது பெற்றோர் அழைத்தால் அவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.

2. எத்துணை பெரிய துன்பம் நேர்ந்தாலும் மனம் தவளாமல் இறைவனிடம் உதவி தேடினால் பலன் நிச்சயமே!

இந்த ஹதீஸில் ஜுரைஜின் தாய் அவருக்கு சாபம் விடும்போது 'என்னடா இது..அவர் நன்மை தானே செய்கிறார்..அந்த அம்மா ஏன் சாபமெல்லாம் கொடுக்கிறாங்க..அதுவும் பலிச்சிடுச்சேன்னு நினைச்சேன். அப்புறம் தான் (அதாவது கொஞ்சம் லேட்டா) புரிஞ்சது. அந்த அம்மா அவ்வளவு நல்லவங்களா இருந்திருக்காங்க... அதான் அவங்க கொடுத்த சாபம் பலிச்சிடுச்சு. அதுவும் அவங்க ஆழ் மனசின் படி அவங்க மகனுக்கு அந்த சாபம் எந்த தீங்கையும் விளைவிக்கவில்லை. அவருடைய இறை பக்தியின் காரணமாக அவருக்கு மேலும் புகழையே தேடித் தந்தது.

மூன்றாவது ஆதாரம் அடுத்த பதிவில்.

9 comments:

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ..
நாங்களும் முதல் பின்னூட்டம் போடுவோம்ல..

சம்பவங்களில் இருந்து கிடைக்கப்பெரும் பயனுள்ள படிப்பினை..
முதல் விஷயம் தெரியும் இரண்டாவது சம்பவம்,இப்போதான் தெரிகிறது,,

நல்லா எழுதுரீங்க..தொடருங்கள்..

அன்புடன்
ரஜின்

ஸாதிகா said...

நான் அறிந்திராத ஹதீஸ்.பகிர்ந்தமைக்கு நன்றி!

ஆமினா said...

முதல் விஷயம் தெரிந்ததே....

2ம் விஷயம் அறியாதது....

பகிர்வுக்கு நன்றி பானு

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்

ஸாதிகா சொன்னது போல்

நான் அறிந்திடாத ஹதிஸ்.

தொடருங்கள்.

என் பிளாக் படித்து பார்க்கவும்.

//எத்துணை பெரிய துன்பம் நேர்ந்தாலும்மனம் தவளாமல் இறைவனிடம்உதவி தேடினால் பலன் நிச்சயமே!//

enrenrum16 said...

முன்னயெல்லாம் 'மீ த ஃபர்ஸ்டூ' ன்னு சொல்றவங்களை ஏன் இப்படி அல்பமா இருக்காங்கன்னு நினைப்பேன். ஹி.ஹி.. எனக்கு அந்த வாய்ப்பு கிடச்சதுக்க்கப்புறம் தான் முதல் பின்னூட்டத்தின் ஆவல் புரிகிறது.

//முதல் விஷயம் தெரியும் இரண்டாவது சம்பவம்,இப்போதான் தெரிகிறது,,// நானும் இதைக் கேள்விப்பட்டபோது புதியதாக இருந்ததால் தான் இடுகையிட்டேன்.

//நல்லா எழுதுரீங்க.. தொடருங்கள்.. // பாராட்டு உற்சாகமளிக்கிறது.நன்றி ரஜின்.

enrenrum16 said...

ஸலாம் அக்கா..

//நான் அறிந்திராத ஹதீஸ்.பகிர்ந்தமைக்கு நன்றி!// இஸ்லாத்தைப் பற்றி பல விஷயங்களை அறிந்த உங்களுக்கே ஒரு புதிய ஹதீஸைப் பகிர்ந்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி அக்கா.

enrenrum16 said...

வாங்க ஆமினா.

//பகிர்வுக்கு நன்றி பானு// நீங்கள் அறியாத ஒரு ஹதீஸ் மூலம் உங்களோடு நானும் நன்மைகள் பெற்றுக்கொண்டதற்கு நானும் உங்களுக்கு நன்றி சொல்கிறேன் ஆமினா.Alhamdulillah.

enrenrum16 said...

வ அலைக்கும் ஸலாம் ஆயிஷா... உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

//நான் அறிந்திடாத ஹதிஸ்.
// யான் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற்றதில் பேரின்பம்.

//என் பிளாக் படித்து பார்க்கவும்.// மிகவும் அருமையான ப்ளாக்... பின் தொடர்ந்தாச்சு.

Anonymous said...

மொத்தம் மூன்று குழந்தைகள் அதில் இரண்டு கூற பட்டுள்ளது இன்னும் ஒரு குழந்தை யார்??