Monday, January 17, 2011

பூமியில் கிடைக்கும் அமுது


யம்மா... தலை இடிக்குதும்மா!
 உலகில் கிடைக்கும் எந்த வித பாலுக்கும் ஈடிணையில்லாததென்றால் அது தாய்ப்பால்தான். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதைக் குடிக்காமல் வளரும் குழந்தைகளை விட அறிவாளிகளாக வளருவதாக் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்(ஐ..அப்ப நானும் அறிவாளிதான்னு விஞ்ஞானிகளே சொல்றாங்க...). பல வித நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறுகிறார்கள். எதிர்காலத்தில் எடை அதிகரிப்பதும்(reduces obesity) ஓரளவு மட்டுப்படுகிறது. ஆரம்பம் முதலே எனக்கு இந்த தாய்ப்பாலைப் பற்றிய வியப்பு அதிகமுண்டு. எப்படி ஒரு பெண்ணின் உடலில்  இத்தனை அதிசயங்களை உள்ளடக்கிய தாய்ப்பால் உண்டாகிறது; எந்த சக்தியுமில்லாத பச்சிளங்குழந்தையை அது எப்படி இவ்வளவு பலமுள்ளதாக மாற்றுகிறது; இப்படியெல்லாம் விஞ்ஞானிகள் செஞ்சு வச்ச ஆராய்ச்சியை நாம மேலும் ஆயலாமேனு ஸாரி (இன்னிக்கு மீன் ஆய்ஞ்ச ஞாபகத்தில சொல்லிட்டேன்)... ஆய்வு பண்ணலாமேன்னு தோணுச்சு..

குழந்தை வயிற்றில் உருவாகும்போதே அதற்கு உணவாகிய தாய்ப்பால் உருவாகத் தேவையான மாற்றங்கள் தாயின் உடலில் ஆரம்பிக்கின்றன. சொல்லப்போனால் இது எப்போ ஆரம்பிக்கிறது தெரியுமா? பெண் தன் தாயின் வயிற்றில் ஆறு மாதமல்ல...ஆறு வாரக் கருவாக இருக்கும்போதே கருவின் மார்பில் பால் சுரப்பிகள் உருவாகிவிடுகின்றன. எவ்வளவு பெரிய அற்புதம்! பெண்ணை இறைவன் எப்படி, எப்பொதே தாய்மைக்கு தயார்படுத்துகிறான்?!

தாயின் உடலில் பால் சுரப்பிகளின் அமைப்பு கருவுற்ற ஆறேழு மாதங்களில் முழுமையடைந்து விடுகின்றது.  இது எதற்கெனில் குறை மாதத்தில் குழந்தை பிறந்தால் சமாளிப்பதற்காக!

மார்பகத்தின் நிறம் மாறுதல், அதைச் சுற்றிலும் ஒரு வித வழுவழுத்தன்மை ஏற்படுதல் போன்றவை வெளியே தெரியும் மாற்றங்கள். மார்பகத்தில் ஏற்படும் அந்த சிறு நிறமாற்றத்திற்குக் கூட காரணம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.(பிறந்த சில நாட்களான) குழந்தைக்கு பாலூட்ட மார்பின் அரியோலா எனப்படும் (குழந்தையின் வாயும் இந்த அரியோலாவும் நேருக்கு நேராக இருக்க வேண்டும்)இடத்திற்கருகே கொண்டு செல்லும் போது மார்பின் நிறத்தைக் கண்டவுடன் அது தன் கண்களை மூடி பந்திக்குத் தயாராகிறது. வழுவழுப்புத்தன்மை மார்பகத்தில் வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இனி மார்பகத்தின் உள்ளே ஏற்படும் மாற்றங்கள்:
குழந்தைக்கும் தாய்க்கும் பாலமாகச் செயல்படும் ப்ளசெண்டா உருவாகும்போதே தாயின் ஹார்மோன்களாகிய எஸ்ட்ரஜன் மற்றூம் ப்ரஜஸ்ட்ரான் ஆகியவற்றின் அளவு மாறுகிறது. தாய்ப்பால் சுரப்பதில் இவ்விரு ஹார்மோன்கள் பெரும் பங்காற்றுகின்றன. குழந்தை வயிற்றிலிருக்கும்போது கடுமையாக உழைக்கும் எஸ்ட்ரஜன் மற்றும் ப்ரஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள்  குழந்தை பிறந்தவுடன் தங்களது பணியை ஆக்ஸிடாக்ஸின் மற்றும் ப்ரோலாக்டினிடம் ஒப்படைத்து ஒதுங்கிக் கொள்ள ஆரம்பிக்கின்றன. ப்ரோலாக்டின் அதிகளவில் மார்பில் பால் சுரக்கச் செய்கிறது. ஆக்ஸிடாக்ஸின் அதை குழந்தைக்கு ஏதுவாக மார்பகத்திற்கு கொண்டு வந்து "let-down" reflex எனப்படும் பாலூட்டியே ஆக வேண்டும் எனும் உணர்வைத் தாய்க்குத் தருகிறது.

கொலஸ்ட்ரம்:
தாய்ப்பால் என்றாலே மஞ்சள் நிற அடர்த்தி மிகுந்த கொலஸ்ட்ரம் பற்றி சொல்லாமலா? குழந்தை பிறந்த முதல் மூன்று நாட்களுக்கு சுரக்கும் இந்த கொலஸ்ட்ரத்தில் இருக்கும் சத்துக்களைச் சொல்லி முடியாது. அதிகளவு ப்ரோட்டின் கொண்ட கொலஸ்ட்ரம் குறைந்த அளவு கொழுப்பும் சர்க்கரைஉம் கொண்டது.குழந்தை தன் சுய எதிர்ப்பு சக்தியில் முழுமையடையும் வரை பலப் பல வித நோய்களிலிருந்து இந்த கொலஸ்ட்ரமே பாதுகாக்கிறது. மெகோனியம் எனப்படும் குழந்தையின் முதன்முதல் கழிவு (அதாங்க...ஆய்) வெளியேற உதவுகிறது. பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை வராமல் தடுக்க அல்லது குறைக்கவும் செரிமான உறுப்புகள் நன்கு வளர்ச்சியடையவும் உதவுகிறது.

வேறென்ன இருக்கு?!:
தாய்ப்பாலில் 0.8% -0.9% ப்ரோட்டினும் 4.5% கொழுப்பும் 7.1% கார்பொஹைட்ரேட்டும் 0.2% மினரல்களும் இருக்கின்றன.
ப்ரோட்டின் குழந்தைக்கு எதிர்காலத்தில் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

நினைத்தாலே இனிக்கும்:
குழந்தைக்குப் பசிக்குமோ என்று தாய் நினைத்தாலே பால் சுரக்க ஆரம்பிக்கிறது. குழந்தைக்கு எவ்வளவு பாலூட்டப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு பால் சுரக்கிறது. சிலர் பால் சுரக்கவில்லை... என்றெல்லாம் சொல்வார்கள்...அதற்குரிய காரணம் நாம் செய்யும் தவறில்தான் இருக்கிறதே ஒழிய இயற்கையின் மீது எந்த தவறுமில்லை. பால் சரியாக சுரக்காததற்கு காரணங்களாக பாலூட்டும்போது குழந்தையைச் சரியாக ஏந்தாமலிருப்பது, குழந்தை சரியாக குடிக்காமலிருப்பது, தாய் ஏதாவது அதிக வீரியமுள்ள மருந்து உட்கொள்வதின் அல்லது உட்கொண்டதின் பக்கவிளைவு ஆகியவையே தவிர, பால் சுரக்க உதவும் அமைப்பு குறையில்லாமலேயே படைக்கப்பட்டிருக்கிறது.

சும்மா வச்சு வச்சு குடிக்கலாம்:
தாய்ப்பலில் என்னை ஈர்த்த மற்றொரு சாராம்சம் அதை பம்ப் செய்து குளிரூட்டியில் சேமித்து வைத்து உபயோகப்படுத்தலாம் என்பது தான்.
அறை வெப்பத்தில் ஆறிலிருந்து எட்டு மணிநேரமும் குளிரூட்டியில் 4°C என்றால் ஐந்து நாட்களும் -15°C என்றால் இரண்டு வாரங்களும் இரண்டு கதவுகள் கொண்ட குளிரூட்டியில் -18°C என்றால் மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை வைத்திருந்து உபயோகப்படுத்தலாம்.
எப்பொழுதும் ஃப்ரெஷ்:
தாய்ப்பால் மட்டுமே ஊட்டப்படும் குழந்தைக்கு தாகமெடுக்காது. அதனால் தண்ணீர் புகட்ட தேவையில்லை. குழந்தைக்கு எந்தவித உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் தாய்ப்பாலை நிறுத்தக்கூடாது. அதிலேயே அந்த நோய்க்கான மருந்திருக்கலாம். அப்படியே குழந்தை சிறிது நாள்களுக்கு பால் குடிக்கவில்லையென்றால் தாய்ப்பால் சுரப்பது நின்றுவிடாது. மறுபடி தாய்ப்பாலூட்ட ஆரம்பிக்கும்போது மீண்டும் ஃப்ரெஷாகவே தரும் ஆற்றலுடையது தாயின் உடல். எந்த ஆறும் வற்றலாம் தாய்ப்பாலாறு குழந்தை குடிக்க குடிக்க வற்றாத ஆறு என்றே சொல்லலாம்.

இங்கு கூறப்பட்ட தகவல்கள் பெரும்பாலும் தாய்ப்பால் மட்டுமே புகட்டப்படும் குழந்தைகளுக்கே பொருந்தும்.

ஷ்..அப்பா.... இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்... குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் புற்றுநோயிலுருந்து பாதுகாப்பு போன்ற பல நன்மைகளைக் கொடுக்கும்  தாய்ப்பால் பற்றி நிறைய கண்டுபிடிச்சு வச்சிருக்காங்க... நான் முழு நேர விஞ்ஞானியாகும்போது அவங்களோட ஆராய்ச்சி முடிவுகளை இன்னும் கொஞ்சம் துருவிக்கலாம்னு (அட.. ஆமா..தேங்காய் துருவணும்..:( ) இத்தோட முடிச்சுக்கறேன்.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது தாய்ப்பாலுக்கு மட்டும் பொருந்தாதோ?!

25 comments:

ஆமினா said...

//நான் முழு நேர விஞ்ஞானியாகும்போது அவங்களோட ஆராய்ச்சி முடிவுகளை இன்னும் கொஞ்சம் துருவிக்கலாம்னு (அட.. ஆமா..தேங்காய் துருவணும்..:( ) இத்தோட முடிச்சுக்கறேன்.//

இதுக்கே தாங்க முடியல ;)

இதுல முழுநேர விஞ்ஞானி ஆகுற எண்ணம் வேர் இருக்கா??

ரொம்ப அறுமையா ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லியிருக்கீங்க பானு...!!

இன்ட்லியில் இணைச்சுட்டேன்

மாத்தி யோசி said...

useful informations....

ஆயிஷா said...

நல்லா சொல்லியிருக்கீங்க.

தோழி பிரஷா said...

அருமை... பயனுள்ள தகவல்

ஆமினா said...

உங்களுக்கு விருது வழங்கியுள்ளேன்

தயவு செய்து பெற்றுக்கொள்ளவும்.

http://kuttisuvarkkam.blogspot.com/2011/01/blog-post_17.html

எல் கே said...

நல்ல தகவல்கள்

enrenrum16 said...

வாங்க ஆமினா...
//இதுக்கே தாங்க முடியல ;)

இதுல முழுநேர விஞ்ஞானி ஆகுற எண்ணம் வேர் இருக்கா??
// ச்ச..ச்ச..சமூகத்துக்கு சேவை பண்ணனும்னு நினச்சா விடமாட்டீங்களே...நல்லதுக்கு காலமில்ல..;)

//ரொம்ப அறுமையா ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லியிருக்கீங்க பானு...!! //பாராட்டுக்கும் இ.இ.க்கும் (இன்ட்லியில் இணைச்சதுக்கும்) ரொம்ப நன்றிங்கோவ்...

விருதுக்கு நன்றி...நன்றி..நன்றி...

enrenrum16 said...

மாத்தி யோசி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

உங்க வலைப்பக்கம் போய்ப் பார்த்தேன்... லேடீஸ் நாட் அல்லோட் போர்ட் மாட்டியிருந்துச்சா... திரும்பி வந்துட்டேன்... :(

தொடர்ந்து ஆதரவு தாங்க....

enrenrum16 said...

ஆயிஷா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

தொடர்ந்து வருகை தாங்க.

enrenrum16 said...

தோழி பிரஷா... பெயர் புதுமையா இருக்கு... வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா... அடிக்கடி வாங்க..

enrenrum16 said...

வாங்க எல்கே... உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி... உங்கள மாதிரி பெரியவங்க வாழ்த்து எங்களுக்கு அவசியம் தேவை. தொடர்ந்து ஆதரவு தாங்க.

FARHAN said...

நேரடியாக கேக்க கூச்சப்படும் சந்தேகங்களை அருமையாக தெளிவுபடுத்தி பதிவிட்டதற்கு நன்றிகள்..


என்னை போல் முழு நேர விஞ்ஞானி ஆவதற்கு வாழ்த்துக்கள்

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ..
நல்ல டாப்பிக்..

தாய்பாலுடைய அவசியம் குறித்து விரிவான விளக்கம்..பயனுள்ளது..

/ஆறு வாரக் கருவாக இருக்கும்போதே கருவின் மார்பில் பால் சுரப்பிகள் உருவாகிவிடுகின்றன/

இதில் வாக்கியப்பிழை இருப்பதாக உணர்கிறேன்..திருத்திக் கொள்ளவும்.

/ப்ரோட்டினும் 4.5%/...ஆரோக்கியா பால்தா நாலரை பால்னு சொல்ராங்க..அதும் தவிர அர்ஜூன் அம்மா மட்டும்தா அத குடுக்குறதா சொல்வாங்க..ஆனா இங்க எல்லா அம்மாக்களும் நாலரை பால்தான் கொடுக்குறாங்கன்னு இப்போதா தெரியுது...

/நான் முழு நேர விஞ்ஞானியாகும்போது அவங்களோட ஆராய்ச்சி முடிவுகளை இன்னும் கொஞ்சம் துருவிக்கலாம்னு/

துருவி துருவியே விஞ்ஞானியானது நீங்க ஒருத்தராத்தா இருக்கும்ன்னு நெனைக்கிறேன்...

பாராட்டுக்கள் பல உங்களுக்கு...

அன்புடன்
ரஜின்

அன்புடன் மலிக்கா said...

முழு நேர விஞ்ஞானி வாழ்க வாழ்க

மிகவும் நல்ல பயனுள்ள குறிப்பு..

சில லூசுங்க தாய்பால்கொடுத்தா தன்னழகு கெட்டுவிடுமுன்னு கொடுப்பதை நிறுத்திடுதுங்க.
சிலது குழந்தை பெற்றுக்கொள்வதையே தள்ளிபோடுதுங்க என்னதச்சொல்ல..

ஸாதிகா said...

அருமையான,அவசியமான தகவல்.பகிர்வுக்கு நன்றி.

அஸ்மா said...

நல்ல தகவல்கள் பானு, வாழ்த்துக்கள்!

enrenrum16 said...

ஃபர்ஹான்... முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...


//என்னை போல் முழு நேர விஞ்ஞானி ஆவதற்கு வாழ்த்துக்கள்//
அட...நீங்களும் நம்ம ஃபீல்டா... உங்கள மாதிரி சீனியரோட வாழ்த்து கிடச்சதே பெரிசுங்ணா...:)

enrenrum16 said...

ஸலாம் ரஜின்..

///ஆறு வாரக் கருவாக இருக்கும்போதே கருவின் மார்பில் பால் சுரப்பிகள் உருவாகிவிடுகின்றன/
//
அதாவது பெண் தன் தாயின் வயிற்றில் சிசுவாக இருக்கும்போதே சிசுவுக்கு நடைபெறுவதைத் தான் சொல்லியிருக்கிறேன்...சரிதானே...உங்களுக்கு புரியுதா...எனக்கு புரியறதுக்கு கொஞ்சம் டைமாச்சு...:(

//எல்லா அம்மாக்களும் நாலரை பால்தான் கொடுக்குறாங்கன்னு இப்போதா தெரியுது...// ;)

பாராட்டுக்கு நன்றியோ நன்றி.

enrenrum16 said...

வாங்க மலிக்கா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

/சில லூசுங்க தாய்பால்கொடுத்தா தன்னழகு கெட்டுவிடுமுன்னு கொடுப்பதை நிறுத்திடுதுங்க.
சிலது குழந்தை பெற்றுக்கொள்வதையே தள்ளிபோடுதுங்க என்னதச்சொல்ல..//

திருடனுங்க மட்டுமில்ல.. இவங்களும் தானா (கண் கெடும் முன்) திருந்தினா தான் உண்டு...

enrenrum16 said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸாதிகா அக்கா..

enrenrum16 said...

வாழ்த்திற்கு மிக்க நன்றி அஸ்மா..

அரபுத்தமிழன் said...

இவ்வளவு சொன்ன பிறகு இத்துணை கிருபை செய்த‌
இறைவனைப் புகழ்ந்து இருந்தால் இப்பதிவு நிறைவாக இருக்குமே.

நல்ல ப்ளாக் மற்றும் நல்ல பதிவுகள் (நல்ல பானு சாரி நல்ல பதிவர்)

பேரு 'சொந்த கதை நொந்த கதை' நல்லாயில்லையே.
ஒரு நல்ல பேரா வையுங்களேன் :)

சகோ இன்றுதான் வருகிறேன், ஓவர் உரிமை எடுத்திருந்தால் மன்னிக்க.
(அஃப்வன், நானும் அபுதாபிதான்)

enrenrum16 said...

//இவ்வளவு சொன்ன பிறகு இத்துணை கிருபை செய்த‌
இறைவனைப் புகழ்ந்து இருந்தால் இப்பதிவு நிறைவாக இருக்குமே.//

தாய்ப்பாலைப் பற்றி ஒவ்வொரு விஷயத்தையும் நான் கிடைக்கப்பெற்றபோது மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் என்று நான் வியந்ததன் விளைவே இந்த பதிவு தோழரே. இந்த வரியை நான் இணைத்ததை நீங்கள் கவனிக்கவில்லையோ?
/எவ்வளவு பெரிய அற்புதம்! பெண்ணை இறைவன் எப்படி, எப்பொதே தாய்மைக்கு தயார்படுத்துகிறான்?!/

நல்ல ப்ளாக் என்று பாராட்டியதற்கு மிக்க நன்றி.

நல்ல பேர் தேடிட்டு இருக்கேன். புதுசு இல்லையா... ஒவ்வொண்ணா தோன்ற மாற்றங்களைச் செய்துட்டிருக்கேன். எனக்கும் பெயரை மாற்ற வேண்டும் என்றுதான் எண்ணம். இன்ஷா அல்லாஹ்..

உங்கள் /ஓவர் உரிமை / யை மிகவும் ரசித்தேன்... அடிக்கடி என் ப்ளாக்கிற்கு விஜயம் செய்யுங்கள். கமெண்டுங்கள்.

அஃப்வன்??? நான் அபுதாபி என்று எப்படி தெரிந்தது...அவ்வ்வ்வ்....:(

raji said...

அவசியமான அருமையான தகவல்கள்

தாய்ப்பாலுக்கு இணையா உங்க பதிவும் இருக்கு

enrenrum16 said...

வாங்க ராஜி... உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... ஒரு வரி சொன்னாலும் நச்சுன்னு சொல்லிட்டீங்க...:)