Saturday, February 6, 2016

மீண்டும் மீண்டும் அதே பல்லவி

பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் நெய்மர் வருமானவரி கட்டாமல் ஏமாற்றிய செய்தி காண நேர்ந்தது. இதுதான் நேரம் என்று ஷாகிருக்கு லெக்சர் கொடுத்தாச்சு.

நானும் ஒரு காலத்தில் அனைத்து கிரிக்கெட் டீம் மெம்பர்ஸ் பெயர்களும் இதோ இந்த விரல் நுனியில் தான் வைத்திருந்தேன்.. ஃபிக்சிங் என்ற பெயரை என்று கேள்விப்பட்டேனோ... அன்று உதறித்தள்ளிவிட்டேன். இன்று ஷாகிர், கிரிக்கெட், ஃபுட்பால் வீரர்களைக் கொண்டாடும்போது கடும் கோபம் வருகிறது. எவ்வளவு சொல்லியும் அவனது ஆர்வம் குறையவில்லை. அவர்களது விளையாட்டைக் காண்பதும் கற்றுக்கொள்வதும் தவறில்லை. அதற்காக... குறிப்பிட்ட வீரர்களுக்காக உற்சாகப்படுவதைக் கண்டால் பொறுக்க முடியவில்லை. 

“நீங்கள்லாம் இப்படி அளவுக்கதிகமாகக் கொண்டாடுவதால் தான் இவன் போன்ற ப்ளேயர்ஸ் ஃபேமஸ் ஆகிறார்கள். அவர்களுக்குக் காசும் கூடுகிறது. இவ்வளவு கூச்சல் போடுக்றீர்களே.. அவர்களுக்குக் கிடைக்கும் பணத்தில் புகழில் கிஞ்சித்து லாபமாவது உனக்குக் கிடைக்குமா? அவன் விளையாடுகிறான். அவனுக்குக் காசு கிடைக்கிறது. நீ ஏன் சந்தோஷப்படுகிறாய்? நீ யாரென்றாவது அவனுக்குத் தெரியுமா?

(சைக்கிள் கேப்பில்)  உன்னையும் என்னையும் பார்க்காமலே... உனக்காகவும், எனக்காகவும் அழுது துஆ கேட்ட நபியைப் பின்பற்று.. உன்னை யாரென்றே தெரியாத இவன் போன்றோரைப் பிரபலமாக்காதே.. 

அவனது விளையாட்டில் இருந்து டெக்னிக்ஸ் மட்டும் கற்றுக்கொள். “ என்று பலமுறை கூறியாகிவிட்டது. அந்த சமய்த்தில் சரி சரியென்பான். எல்லாம் குடிகாரன் பேச்சு ஆகிவிட்டது.



இன்று ஒரு பாயிண்ட் ஆதாரத்துடன் சொல்லியாகிவிட்டது. “நீங்கள் கொடுக்கும் வரவேற்பில் அவனுக்குக் கிடைத்த சொத்துகளில் கவர்ன்மெண்டுக்குக் கொடுக்க வேண்டிய இன்கம் டேக்ஸ் கட்டாமல் ஏமாற்றி இருக்கிறான். இவனைப் போன்ற ஏமாற்றுக்காரர்களையா உனக்குப் பிடிக்கிறது? அவன் ஒரு விளம்பரத்தில் வந்தால் கோடிக் கணக்கில் பணம் கேட்பான்.. ஏன் கேட்கிறான்? அவன் வந்தால் நீங்கள்லாம் வாய் பிளந்து அந்த விளம்பரத்தைப் பார்ப்பீர்கள்... எல்லாம் உங்களால் அவனுக்குக் கிடைத்த பணம்”

பதிலில்லை. கவர்ன்மெண்டை ஏமாற்றி விட்டானா? என்று மட்டும் கேட்டான். அதே நாளில் பூலோகம் என்ற படமும் பார்த்தோம்... ஏதாவது மாற்றம் வருமா?

ம்ம்/... என்ன சொல்லி என்ன கேட்டு என்ன பார்த்து என்ன பயன்... மீண்டும் நாளை நான் இதே பல்லவியைப் படிக்க வேண்டும்.  

http://www.gulf-times.com/story/477955/Neymar-fined-112-000-for-Brazil-tax-evasion

3 comments:

ஹுஸைனம்மா said...

//இதோ இந்த விரல் நுனியில் தான் வைத்திருந்தேன்..//

ம்ம்... தாயைப் போல பிள்ளை!!

//இன்று ஷாகிர், கிரிக்கெட், ஃபுட்பால் வீரர்களைக் கொண்டாடும்போது கடும் கோபம் வருகிறது//

அது சரி!! நமக்கு ஞானம் வர ஒரு போதி மரம் கிடைக்க எத்தனை வருஷமாச்சு? பையனுக்கு மட்டும் உடனே கிடைக்கணும்னா??

//இவன் போன்ற ப்ளேயர்ஸ்//
/அவன் விளையாடுகிறான். அவனுக்குக் காசு கிடைக்கிறது. .... அவனுக்குத் தெரியுமா?
//அவனுக்குக் கிடைத்த ... ஏமாற்றி இருக்கிறான். இவனைப் போன்ற ... அவன் ஒரு ... கேட்பான்.. ஏன் கேட்கிறான்? அவன் வந்தால் ... அவனுக்குக் கிடைத்த பணம்” //

சகட்டு மேனிக்கு அவநிவன் என்று திட்டியிருப்பதில் இருந்து கோபத்தின் அளவு புரிகிறது. ஆனால், அந்த வீரரின் வயசுக்காகவாவது ‘அவர்’ என்று சொல்லிருக்கலாம். குழந்தைகளின் முன் இது ரொம்ப அவசியம் கடைபிடிக்க வேண்டியது.

//அதே நாளில் பூலோகம் என்ற படமும் பார்த்தோம்... /

இந்த டாபிக்குக்கும் இந்தப் படத்துக்கும் என்ன சம்பந்தம்? புரியலையே... இதுக்காகவே இந்தப் படத்தைப் பார்த்தாகணுமோ...

அப்புறம், உங்க பதிவுகளை ரோபோட்டெல்லாம் கூட வந்து படிக்கும் என்கிற அதீத தன்னம்பிக்கை கொஞ்சம் ஓவராத்தான் தெரியுது எனக்கு!! :-)

பானு said...

//நமக்கு ஞானம் வர ஒரு போதி மரம் கிடைக்க எத்தனை வருஷமாச்சு?// தப்புன்னு எனக்கு யாரும் சொல்லல.. நானாதான் ஒதுங்கினேன்... அது மாதிரி எதிர்பார்க்குறேன்.

பூலோகம் பாருங்க :P


/ உங்க பதிவுகளை ரோபோட்டெல்லாம் கூட வந்து படிக்கும் என்கிற அதீத தன்னம்பிக்கை கொஞ்சம் ஓவராத்தான் தெரியுது எனக்கு!! :-)/

சுத்தமா புரியலீங்.... எனக்குப் புரியுற மாதிரி சொல்லுங்க...அவ்வ்வ்

பானு said...

ஓ.. புரிஞ்சுடுச்சு.... அது நான் கேட்கலீங்... அது தானா கேட்குதுங்.... எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லீங்....