Saturday, January 5, 2013

அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 1

இஸ்லாம் என்றால் இறைவனுக்கு மட்டுமே அடிபணிதல், இறைவனிடமிருந்து இறங்கிய வேதத்தையும் அவன் அனுப்பிய தூதர்களையும் மனதார ஏற்று நம்புவதும்  ஆகும்.

அவன் இறக்கிய தவ்ராத், ஜபூர், இன்ஜீல் ஆகிய வேதங்களை அவனது நான்காம் வேதமாகிய குர் அன் உண்மைப்படுத்துகிறது அவனுடைய எண்ணற்ற தூதர்களை இறுதி நபி முஹம்மது உண்மைப்படுத்துகிறார்.

இவ்வுலக மக்களில் முஹம்மது நபியை முதன்முதலில் மற்றவருக்கு உண்மைப்படுத்தியவராகிய அபூபக்ர் சித்திக் எனும் சஹாபா (நபித்தோழர்) வைப் பற்றி சிறிது பார்க்கலாம்.
புகாரி 3656. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மொழிந்ததாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் தெரிவிக்கிரார்கள்::
(இறைவனைத் தவிர வேறு) ஒருவரை நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூ பக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், அவர் (மார்க்கத்தில்) என் சகோதரரும், (இன்ப - துன்பம் யாவற்றிலும்) என் தோழரும் ஆவார்.
 
மாஷா அல்லாஹ் ... எவ்வளவு பெரிய சிறப்பு??  அபு பக்ர் (ரழி) அவர்கள் எந்த அளவிற்கு குணத்தில் சிறந்தவர்களாக இருந்திருந்தால் நபியவர்களின் வாயிலிருந்து இப்படிப்பட்ட ஒரு வெகுமதி கிடைக்கும்?
1897. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)' என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் 'ஜிஹாத்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் 'ரய்யான்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் 'சதகா' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க 'ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!" என்றார்கள். 
 
இத்தகைய சிறப்பு குணங்களைப் பெற்ற, உலகின் மேன்மையான மனிதரால் சுவன வாக்கு அளிக்கப்பெற்ற சஹாபாவின் வாழ்க்கை வரலாறில் சில முக்கிய தருணங்களை இப்பதிவில்  தெரிந்து கொள்வோம்.

573 கி.பி. யில் மக்காவில் உதுமான் எனும் அபூ கஹாஃபாவிற்கும் சலமா எனும் உம்முல்  ஃகைருக்கும் பிறந்தவர் அபூ பகர் (ரலி). அவரது இயற்பெயர் அப்துல்லாஹ்வாகும். அவரது குடும்பம் வணிகத்தில் சிறந்து விளங்கியது. அபூ  பகரின் வளமான செல்வம் அனைத்தையும் பின்னாளில் இஸ்லாத்திற்காகவே அளித்தார்.நபிகளாரைப் போலவே அபூ பகரும் அமைதியானவர், வாய்மையாளர், சிறு வயதிலேயே இருவரும் உற்ற தோழர்களாகத்  திகழ்ந்தனர். 

இன்றைய உலகில் குர்ஆனையும் இறைத்தூதர்களையும் மெய்ப்பிக்கவும்  அறுதியிட்டு சொல்லவும் சுய உணர்வுடன் ஆராய்ந்து பார்த்து நம்பவும்  ஆதாரங்களும் ஹதீஸ்களும் நிறைந்து காணப்படுகின்றன.

ஆனால் இது எதுவுமே வந்திராத காலகட்டத்தில்  நபியவர்கள் தனக்கு முதன் முதலில் வஹி  (இறை அறிவிப்பு)  வந்ததை தன் ஆருயிர் நண்பரிடம் பகிர்ந்த பொழுது மறு பேச்சில்லாமல் சிறிதும் யோசிக்காமல் "நான் உங்களை நம்புகிறேன் முஹம்மதே"  என எனக் கூறி இஸ்லாத்தை ஏற்றுகொண்டவர் அபு பக்ர் சித்திக் (ரலி).  இதன் மூலம் இஸ்லாத்தை ஏற்ற முதல் மனிதர் எனும் அந்தஸ்தைப் பெற்றார் (முதல் பெண்மணி - நபியவர்களின் மனைவி கதீஜா (ரலி) ஆவார்). முஹம்மது நபியின் நேர்மையும் அதற்கு ஒரு காரணம். நபியவர்களுக்கு வாய்மையாளர் எனும் அர்த்தம் கொண்ட சித்திக் எனும் பெயர் சூட்டப்படவில்லையே தவிர அவரது நேர்மையான குணத்தினால் மக்களிடம் அவர் சம்பாதித்த பெயர் சித்திக் ஆகும். ஒகே... முஹம்மது நபியைப் பற்றி பேசினால் பேசிக்கொண்டேயிருக்கலாமே...  அபூபக்ர் சித்திக் (ரலி) அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு அதன் மூலம் நம் இறைத்தூதர் மீது நமக்கிருக்கும் நம் நேசத்தை அதிகப்படுத்திக்கொள்ளலாமே!!

அபூபக்ர்  சிறிதும் தாமதிக்காமல் இஸ்லாத்தை தனக்கு தெரிந்தவர்களிடம் ரகசியமாக எடுத்துரைத்து அழைப்புப்பணியை மேற்கொள்ளலானார்கள். அவரது ரத்தத்தில் ஊறிய குணங்களாகிய  அவரது பெருந்தன்மையும், நம்பகத்தன்மையும் வாய்மையும் பொறுமையும்  அழைப்புப்பணிக்கு பெரிதும் உதவின (of  course , இறைவனின் உதவியோடு :)).

சிறிது காலம் கழித்து  இஸ்லாத்தை வெளிப்படையாக பரப்ப விரும்பினார்கள். நபியின் அனுமதியோடு முதன் முதலில் கஃபாவில் உரையாற்றினார்கள். ஏக இறைவனை தொழுதல் வேண்டும் எனவும் நபிகளுக்கு கிட்டிய இறை அறிவிப்பு பற்றியும் எடுத்துரைக்கலானார்கள். 
அவர்களின் அழைப்பால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள்:
  • உதுமான் இப்ன் அபான் 
  • அல்  ஜுபைர் 
  • தல்ஹா இப்ன் உபைதுல்லாஹ்
  • அப்துர்ரஹ்மான் பின் அவப் 
  • ஸாது இப்ன் அபி வக்காஸ்
  • அபு உபைதாஹ் இப்ன் அல்  ஜர்ராஹ் 
  • அபு சலாமா
  • காலித் இப்ன் சயீத் 
  • அபு ஹுதைபாஹ் இப்ன் அல்  முகிராஹ் 

ஒரு முறை நபியவர்கள் கஃபாவினருகில் தொழுதுகொண்டிருக்கும்போது  உக்பா இப்னு அபீ முஐத் என்பவன் அவர்களது கழுத்தில் துணியைக்கட்டி இழுத்து வேதனை செய்தான். அதனை தூரத்தில் இருந்து பார்த்த அபூபக்ர் அவர்கள் விரைந்து வந்து அக்கொடியவனைக் கடிந்து கொண்டார்கள். "இறைவன் ஒருவனே  எனும் உண்மையைச சொன்னதற்காகவா இவரைக் சொல்ல முனைகிறீர்கள்" என வாக்குவாதம் செய்தார்கள். இதனால் ஆத்திரமடைந்த உக்பாவும் அவனது கூட்டாளிகளும் அபூபக்ரை அடித்து உதைக்கலானார்கள். இதனால் மயக்கமடைந்த அபுபக்ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து  விழித்தெழுந்ததும் தன உடல்நிலையைப் பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் அவர்கள்  கேட்ட முதல் கேள்வி "முஹம்மது எப்படியிருக்கிறார்கள்" என்பதேயாகும். (புகாரி 3678)

மாஷா அல்லாஹ்.... தன்னுடைய உயிர் உடைமைகளை உள்பட அனைத்தையும் விட அல்லாஹ்வையும் நபியையும் நேசித்து இறைநம்பிக்கையின் சுவையை அறிந்ததனால் (புகாரி-21) நபியவர்களால் சுவனத்தை வாக்களிக்கப்பட்ட பத்து சஹாபாக்களில்  அபூபக்ருக்குத்தானே முதலிடம் கிடைத்தது. (புகாரி 3674, திர்மிதி 3680).

அழைப்புப்பணியின் பத்தாவது ஆண்டில் அல்லாஹ் இறைத்தூதரை விண்வெளிப்பயணம் மேற்கொள்ளச்செய்தான். இதனை மக்களுக்கு எடுத்துரைத்த நபியவர்களை பலரும் ஏளனம் செய்ய, மறு பேச்சில்லாமல் சிறு சந்தேகமும் கொள்ளாமல் நம்பியவர்தான் அபூபக்ர் (ரலி). தக்க சமயத்தில் கிடைக்கப்பெற்ற அபூபக்ரின் நம்பிக்கை தரும் இவ்வார்த்தைகள் நபியவர்களுக்கு பெரிதும் ஆறுதலும் நம்பிக்கையும் மகிழ்வையும் கொடுத்தன; ஏனைய மக்களுக்கும் நல்வழி காட்டி நபியின் விண்வெளிப்பயணத்தை ஏற்றுக்கொள்ள வழிவகுத்து கொடுத்தது. எத்தனையோ மக்கள் அவ்விண்வெளிப்பயனத்தை கேலி கிண்டல் செய்து தமது நிராகரிப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்க , உண்மையை முதன் முதலில் மனதார  ஏற்ற அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் சித்திக் எனும்  பெயர் சூட்டி அழகுப்படுத்தினார்கள். 

அனைத்துப் போர்களிலும், அது வெற்றி பெற்றதாயினும் படுதோல்வி அடைந்த உஹதுப்போர் போன்றதாயினும் நிராகரிப்பாளர்களுடன்  நபிகள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்கள் இட்ட நேரங்களாயினும் என நபியின் சுகமான, துக்கமான நேரங்கள் அனைத்திலும் உடனிருந்து ஆதரவு அளித்துள்ளார்கள்.
இஸ்லாம் சிறுக சிறுக பரவ ஆரம்பித்த காலத்தில் அடிமைகளாக வாழ்ந்து வந்த பலர் தம் எஜமானர்களுக்குத் தெரியாமல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். தம் எஜமானர்களுக்குத் தெரியாமல் தமது இறைக்கடமைகளை நிறைவேற்றுவதென்பது அவர்களுக்கு பெரும் சிரமமாகயிருந்தது, அவர்களுடைய முதலாளிகளும் முஸ்லிம்களாக இருந்தால் தவிர. இறைவனை நிராகரிக்கும் முதலாளிகளாக இருந்தால் முஸ்லிம்களான தமது அடிமைகளை, அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்திற்காக அவர்களை கொளுத்தும் வெயிலில் மணலில் படுக்க வைத்து அவர்கள் மீது பெரும் பாறைகளை வைத்து அவர்களை அசைய விடாமல் கொடுமைப்படுத்துவது போன்ற பல அக்கிரமங்கள் நிகழ்ந்து வந்தன. அபு பகர்(ரழி) அவர்கள் தம் செல்வத்தில் பெரும்பகுதியை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, இஸ்லாத்தை ஏற்காத தம் எஜமானர்களிடம் சித்ரவதை அனுபவித்த பல அடிமைகளை விடுவிக்க செலவு செய்துள்ளார்கள். அவ்வாறு அவர்களால் விடுதலையடைந்த அடிமைகளுள் சிலர்:
  • பிலால் இப்னு ரிபாஹ்
  • அபு பகிஹ் 
  • அம்மார் இப்ன் யாசிர்
  • அபு புஹைராஹ்
  • லுபைனாஹ்
  •  அழ நாதியாஹ் 
  • உம்மு உபைஸ் 
  • ஹாரிதாஹ் பின்த் அல்  முஅம்மில் 

நிராகரிப்பாளர்கள்  பல வேளைகளில் அபூபக்ருடைய உடலுக்கும் மனதிற்கும் கடுமையான வேதனை செய்யத் தொடங்கினார்கள். இதனால் மனவேதனை அடைந்த அபூபக்ர் நபியவர்களின் அனுமதியுடன் அபிசினியாவிற்கு அடைக்கலம் பெற விரும்பி பயணம் மேற்கொண்டார்கள். ஆனால் இறைவனது நாட்டமோ வேறாகவல்லவா இருந்திருக்கிறது....
இன்ஷா அல்லாஹ் விரைவில்.....

11 comments:

Aashiq Ahamed said...

மாஷா அல்லாஹ்

Unknown said...

மாஷா அல்லாஹ்

ஆமினா said...

சலாம் பானு

அழகான வரலாறு

ஜஸக்கல்லாஹ் ஹைர்

mohamed said...

சலாம் சகோதரி,

மாஷா அல்லாஹ் அருமையான வரலாறு.தொடர்ந்து இது போன்ற வரலாறுகளை எங்களுக்கு அறிய தாருங்கள்.அல்லாஹ் உங்களுக்கு நர்க் கூலி வழங்குவானாக.

enrenrum16 said...

சகோ ஆஷிக், ஜஸ்லன் முஹம்மது
அபூபக்ர்(ரலி) அவர்கள் போன்ற சஹாபாக்களின் இஸ்லாமியப்பணிகள் அளவிடமுடியாதவை... அல்ஹம்துலில்லாஹ். கருத்திற்கு மிக்க நன்றி.

enrenrum16 said...

வாலைக்கும் ஸலாம் ஆமினா.... இஸ்லாத்திற்காகவும் நபிக்காகவும் ஒவ்வொரு நொடியையும் சிந்தித்து செயல்பட்ட அவர்களின் வரலாறு நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை தாம். வருகைக்கு நன்றி ஆமினா.

enrenrum16 said...

வாலைக்கும் ஸலாம் முஹம்மது... /தொடர்ந்து இது போன்ற வரலாறுகளை எங்களுக்கு அறிய தாருங்கள்.// இன்ஷா அல்லாஹ் சகோ. கருத்திற்கு மிக்க நன்றி.

Unknown said...

மாஷா அல்லாஹ்

Unknown said...

ஓட்டு லிங்கே காணோம் சகோ நான் எப்புடி ஓட்டு போடுவது ??????

enrenrum16 said...

#Rinash

தவறாக எடுத்துக்காதீங்க.... திரட்டிகளின் ஓட்டுக்களை விட உங்களுடைய பின் தொடர்தலும் பின்னூட்டமுமே முக்கியமாக எண்ணுகிறேன். உங்களுடைய வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரினாஷ்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நபித் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களின் வாழ்வின் சில பகுதிகளை அறிய முடிந்தது. அடுத்த பதிவைத் தாருங்கள் சகோ!