Monday, November 19, 2012

கேளுங்க சகோதரிகளே!!

எத்தனையோ விதமான நூதன திருட்டுக்களை கேள்விப்பட்டிருக்கோம்.  சேல்ஸ் ஆட்களாக வீட்டில் நுழைந்து திருடுவது, வீட்டில் உள்ளவர்களின் நம்பிக்கையை சம்பாதித்தபின் அவர்களுக்குத்  துரோகம் இழைப்பது, ரோட்டில் நடக்கும்போது நகைகளை அறுத்துவிடுவது, இப்படி நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் திருடர்கள் ரூம் போட்டு யோசித்து தினுசு தினுசான முறையில் கொள்ளையடிக்கின்றனர்.


ஒகே..... எந்த வகையான திருட்டானாலும் நாம் முதலில் மனக்கவலையில் இறைவனின் மீது பாரத்தைப் போட்டாலும் அவனே திருட்டுப் போனவைகளை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவான் என சும்மா இருந்து விடுவதில்லை. அல்லல்பட்டு சம்பாதித்த நகை, பணத்தை மீட்க நம்மாலான நடவடிக்கைகளை எடுக்கத்தான் செய்கிறோம்.... நாமே சுயமாக திருடனைப் பிடிக்க நிச்சயமாக முயல்வோம்.....காவல்துறையிடம் புகாரளிப்போம்....


ஆனால் அந்த காவல்துறையினரே நேரங்கெட்ட நேரத்திலோ, பெண்கள் தனியாக வீட்டிலிருக்கும் நேரங்களிலோ வீட்டுக் கதவைத் தட்டினால் திறக்கக்கூடாது என்ற அதிர்ச்சி தரும் உண்மையை உணர்த்தும், சமீபத்தில் (18-10-12 அன்று) துபாயில் நடந்த ஒரு திருட்டு சம்பவத்தைச் சொன்னால்  உங்களுக்கே புரியும்..


கணவன் அலுவலகம் சென்ற பின் தன இரண்டு வயது குழந்தையுடன் வீட்டில் இருந்திருக்கிறார் கேரளவைஸ் சேர்ந்த என்பவர். அழைப்புமணி ஓசைக் கேட்கவே 'அந்நியர் யார் வந்தாலும் கதவைத்  திறக்கக்கூடது' என்ற முடிவுடன் வாசலுக்கு சென்றவர் இரண்டு பேர் காவல்துரைஸ் சீருடையில் நின்றிருக்கவே திறக்கவா வேண்டாமா எனக் குழம்பியிருக்கிறார்..... அவரது அந்த குழப்ப மனநிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவரது வீட்டை சோதனையிட வந்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர் அவ்விருவர்.

டேய்.. நாந்தான்டா உன் கூட்டாளி...ஓடாதடா.....


போலீஸ் என்றதும் வேறு வழியின்றி கதவை திறந்தவர் 'எங்கும் போலீஸ் இது போன்று செய்ய மாட்டார்கள்' என்று கூறி  தடுத்து நிறுத்த முயற்சித்திருக்கிறார். (நானாகயிருந்தால் கொத்துச்சாவியை அவங்ககிட்ட கொடுத்துட்டு அவங்களுக்கு டி போட்டு  கொடுத்திருப்பேன்...ஹி .... ஹி )


அவர் சொல்வதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வீட்டிலிருக்கும் நகையனைத்தையும் தங்களிடம் கொடுத்து விடுமாறு கத்தி முனையில் மிரட்டியிருக்கிறார்கள். உயிர் பிழைத்தால் போதும் என்று அவரும் தன்னிடமிருந்த நகையனைத்தையும் அவர்களிடம் கொடுத்திருக்கிறார். அத்தோடு போக வேண்டியதுதானே ..... குழந்தை அணிந்திருக்கும் நகையையும் கேட்டு மிரட்டியிருக்கின்றனர்.


ஆனால் குழந்தையின் வளையல்கள் கழட்ட முடியாதபடி இறுக்கமாக இருந்ததால் அவளுடைய கைகளையே வெட்டுமளவுக்குத துணிந்திருக்கின்றனர். பதறிய அப்பெண், சோப் போட்டு கழுவிக் கழட்டி கொடுத்திருக்கிறார்.  அந்த பிஞ்சுக் கைகளை வெட்டுமளவிற்கு கேவலம் அந்த நகை அவன் கண்களை மறைத்துவிட்டது :-((.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன கதையாக உயிருக்கு எந்த பாதிப்புமின்றி தாயும் மகளும் தப்பித்தனர். 'எங்கே தம்மைக் காட்டிக் கொடுத்து விடுவாளோ' என நினைத்து அவர்களுக்கு வேறு எந்த வித சேதமும் விளைவிக்காமல் கிளம்பிவிட்டனர். (இறைவன்தான் அந்த எண்ணத்தை அவர்களுக்குக் கொடுக்காமல் தடுத்திருக்க வேண்டும்.... அல்ஹம்துலில்லாஹ் )


போலீசுக்குத் தகவல் தெரிவித்த அப்பெண்ணை  இரு பெண் போலீசார் வீட்டில் வந்து சந்தித்துத் தைரியமாக இருக்கும்படி ஆறுதலளித்துள்ளனர். அவரளித்த விவரங்களையும் அருகிலிருக்கும் கடைகளிலுள்ளவர்களின் தகவல்களின் அடிப்படையிலும் விசாரித்து பாகிஸ்தானைச் சேர்ந்த அவ்விரு திருடர்களையும் போலீசார் கைது செய்துவிட்டனர்; திருடிய      நகைகளையும் மீட்டனர்.அவர்கள் வேலை செய்த கம்பனி இழுத்து மூடப்பட்டு இவர்கள் வேறு வேலை தேடி கொள்வதற்காக விசா கேன்சல் செய்யப்படாமல் விடப்பட்டுள்ளனர். நல்ல வேலையின்மை தானே  திருடர்கள் உருவாவதற்கு முதன்மையான காரணம்?!


இந்த சம்பவத்தில் மனதிற்கு பெரும் நிம்மதி தரும் விஷயம் அவர் உயிர் தப்பியதுதான். ஏனென்றால் இச்சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்தான் துபாயில் கிட்டத்தட்ட இதே முறையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் செயினைத் திருடியவன் அப்பெண்ணின் உயிரையும் பறித்துவிட்டான் :((((((....... நமது திருச்சியைச் சேர்ந்த அவரது நான்கு வயது குழந்தை இப்பொழுது தாயை இழந்து தவிக்கிறது.  இச்சம்பவத்தில் கைது செய்யப்பட அக்குற்றவாளி சொன்னான் பாருங்க ஒரு காரணம் "அந்தம்மா அன்னிக்கு நகை போட்டு வந்ததைப் பார்த்த பிறகுதான் அவரிடம் திருட நினைத்தேன்". அவனுடைய வாக்குமுலத்தைப் பார்த்ததும், இறைவன் நமக்கு கொடுத்திருக்கும் கொடைகளில் ஒன்றான, பெண்களைப் பலவிதங்களில் பாதுகாக்கும் புர்காதான் நினைவிற்கு வந்தது.


அந்த பெண்ணும் புர்கா அணிந்திருக்கவில்லை என்றாலும்.... குறைந்த பட்சம் அவருடைய அலங்காரத்தை மறைக்கும் விதமாக உடையணிந்து வெளியே சென்றிருந்தால் இந்நேரம் அவரது குழந்தை தாயில்லாக் குழந்தை ஆகியிருக்காது... :-((((((


வீட்டில் இருக்கும்போது உங்கள் விருப்பப்படி இருந்து கொள்ளுங்கள் சகோதரிகளே.....வெளியிடங்களுக்குச் செல்லும்போது உங்கள் ஆடையலங்கரங்களை மறைத்துக் கொள்ளுங்கள்...அது உங்களுக்கு மட்டுமல்ல...உங்கள் குடும்பத்தினருக்கே நன்மையை மட்டுமே கொண்டு வரும். புரிந்து கொள்ளுங்கள் சகோதரிகளே!!! 

17 comments:

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையான விழிப்புணர்வு பதிவு

F.NIHAZA said...

மாஷா அல்லாஹ்...நல்ல பதிவு..
வெளியே செல்லும்போது வாங்கிவைத்திருக்கும் அனைத்து நகைகளையும் போட்டு மினுக்கும் பெண்களுக்கு இதுவொரு நல்ல உதாரணமே....

NKS.ஹாஜா மைதீன் said...

விழிப்புணர்வு பதிவு...பெண்கள் விழிப்புடன் இருப்பதன் அவசியம் புரிந்தால் சரி

Anonymous said...

dubaiyelummaaah.............. intha mathiri....



http://sivaparkavi.wordpress.com/

Unknown said...

Theyvaiyaana post...

ஹுஸைனம்மா said...

பர்தா அணியாதவர்கள், கழுத்தை மறைத்தவாறு புடவை/சுடிதார் தலைப்பைப் போர்த்தி இருப்பது நல்லது. இந்தியாவிலும் இதனால்தான் ரோட்டில் நடக்கும் பெண்களிடம் செயின் அறுப்பது சுலபமாக இருக்கீறது.

மற்றபடி இங்கும் மற்ற நாடுகளிலும்கூட, இந்தியர்கள் தம் வீட்டு வாயிலில்/கதவில் கோலம், மாவிலை, ஸ்டிக்கர் போன்றவை ஒட்டி வைப்பதால் எளிதில் அடையாளம் கண்டுகொள்கின்றனர் திருடர்கள். எதுக்கா? இந்தியர்கள்தான் தங்கம் அதிகம் வைத்திருப்பார்களாம், அதுக்காம். ஒரு பவுன் கிடைத்தாலும், விற்றால் நோகாமல் 25,000 ரூபாய் கிடைக்குமே!!

சேக்கனா M. நிஜாம் said...

விழிப்புணர்வைத் தூண்டும் பதிவு !

தொடர வாழ்த்துகள்...

Flavour Studio Team said...

சலாம் அக்கா :)


இவங்க எல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோ?? :(


இங்க எனக்கு தெரிந்த ஒரு இந்திய பெண்ணுக்கு வாக்கிங் போகும் பொது இதே போல நடந்தது... ஆனா அந்த சமயம் அவர் எந்த நகையும் அணியலன்னு சொன்னதுக்கு இல்ல நீங்க இந்தியா காரங்க தாலி போடுவின்களே அப்படின்னு கேட்டு இருக்கான் அந்த வழிப்பறி திருடன் அதுக்கு அவங்க இல்ல நாங்க வெறும் கயிறுதான் போட்டு இருக்கோம் ன்னு சொன்னதுக்கு.. இல்ல நீங்க குண்டுமணி அளவு தங்கமாச்சும் போட்டு இருப்பிங்க தரியா இல்ல கத்திய சொருகவான்னு கேட்டு இருக்கான்

இவ்வளவுக்கும் அந்த திருடன் இந்தோனேசியாவை சேர்ந்தவன்...!! :(

இந்திய பெண்கள் கண்டிப்பா தாலில தங்கம் போட்டு இருப்பாங்கன்னு அவன் தெரிஞ்சி வச்சு இருக்கான்னு சொல்லி அந்த சகோதரி ரொம்ப பொலம்புனாங்க... ஹ்ம்ம் :(

enrenrum16 said...

@ஹைதர் அலி பாய்

வாலைக்கும் ஸலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

enrenrum16 said...

@நிஹாஷா

நிறைய நகைகளை போட்டுக்கிட்டு வெளியிடங்களில் சிலரைப் பார்க்கும்போது எனக்குத்தான் பயமா இருக்கும். இப்படி திருடர்களை ஆசை காட்டிவிட்டு அப்புறம் அவங்க மேல குற்றம் சொல்வதிலும் அர்த்தமில்லை.

enrenrum16 said...

ஹாஜா மைதீன், பாயிஸா, சேக்கனா நிஜாம்பாய்

கருத்துக்கு மிக்க நன்றி.

enrenrum16 said...

@சிவபார்கவி

துபாயானாலும் சரி.. லண்டன்,அமெரிக்காவானாலும் சரி.... எல்லா விதக் கொடுமைகளுக்கும் பஞ்சமில்லை :-((...

enrenrum16 said...

@ஹுஸைனம்மா

//பர்தா அணியாதவர்கள், கழுத்தை மறைத்தவாறு புடவை/சுடிதார் தலைப்பைப் போர்த்தி இருப்பது நல்லது./// அப்புறம் எப்படி நகையை மற்றவர்களுக்கு காட்டுவதாம்?? :-))

//இந்தியர்கள் தம் வீட்டு வாயிலில்/கதவில் கோலம், மாவிலை, ஸ்டிக்கர் போன்றவை ஒட்டி வைப்பதால் எளிதில் அடையாளம் கண்டுகொள்கின்றனர் திருடர்கள்/// பெரிய அளவில் இழப்பைத் தடுக்க இது மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்களை இழப்பதை தவிர வேறு வழியில்லை :-((

enrenrum16 said...

@சர்மிளா

/நீங்க குண்டுமணி அளவு தங்கமாச்சும் போட்டு இருப்பிங்க தரியா இல்ல கத்திய சொருகவான்னு கேட்டு இருக்கான் // யம்மாடீ... கேக்கறதுக்கே கதி கலங்குதே... :-((

போகிற போக்கைப் பார்த்தால் வாங்கின தங்கத்தை எல்லாம் பேங்கில் வைத்துவிட்டு ஆசைக்குக் கவரிங் நகைகளைப் போட்டுக்க வேண்டியதுதான் :-((

Unknown said...

Thanks for sharing a very useful and informative mail.

enrenrum16 said...

@M.F.Rahman

Thanks for your encouraging comments & pls. visit again.

semmalai akash said...

நல்லதொரு பதிவு.