Thursday, October 18, 2012

நாம எல்லாரும் விஞ்ஞானிதான்!!

நாம எல்லாருமே குடும்பம், குழந்தைன்னு ஆனத்துக்கப்புறம் நம் வாழ்வில் ஏங்குறதுனு ஒண்ணு இருந்ததுன்னா அது நம்முடைய இளமைப்பருவம்...அதுவும் நம் குழந்தைப்பருவம் என்பது ஒவ்வொருவரும் நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்வோம். நம் கணவரிடமும் நம் குழந்தைகளிடமும் நம் குழந்தைப்பருவத்தைப் பகிர்ந்து கொள்வோம். (நானெல்லாம் குழந்தையா இருக்கறச்சே.. அப்படீன்னு ஆரம்பித்தாலே அவங்க ஓடிடுவாங்க...அது வேற கதை :))

அப்படிப்பட்ட என் சிறுவயது காலங்களில் உலகில் நடக்கும் சில விஷயங்களை அது எப்படி நடக்கிறது என்று புரியாத பருவத்தில் அது பற்றி நானே கற்பனை செய்து நம்பிக் கொண்டிருந்ததை உங்களிடம் பகிர்ந்து உங்க பாராட்டை அள்ளிக்கலாம் என்று முடிவு செய்ததன் விளைவுதான் இந்தப்பதிவு. ஹி..ஹி..ஹி...

அந்தக் காலத்திலும் சரி இந்தக் காலத்திலும் சரி... குழந்தைகளை ஈர்க்க இந்த மீடியாக்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம்... விளம்பரங்கள். அந்த காலத்தில எங்க வீட்டில் தூர்தர்ஷன் மட்டுந்தான். சன் டீவி, கேபிள் டீவி எல்லாம வந்ததுக்கப்புறமும் தூர்தர்ஷனிலேயே மூழ்கி முத்தெடுத்துக்கிட்டு இருந்தோம் எங்க வீட்டில மட்டும். ஆங்... சொல்ல வந்த மேட்டர் இதுதான்.... இந்த விளம்பரத்தை எல்லாம் பார்த்து நான் முடிவு செய்தது..... இதுதான்... அட...நாம் டீவி ஆன் செய்யும்போதெல்லாம் இந்த விளம்பரத்தில் நடிக்கிறவங்க தயாராகி நேத்து நடிச்ச மாதிரியே இன்னிக்கும் நடிக்கிறாங்களே.... அதே மாதிரி கப்பை உடைக்கிறாங்க... அதே மாதிரி ஒட்ட வைக்கிறாங்க...  அதே மாதிரி காயம் ஏற்படுது.... அதே இடத்தில் பேன்ட்-எய்ட் ஒட்டறாங்க...அதே மாதிரி.... இதே மாதிரின்னு பலப்பல கற்பனைகள்....
 
 
அதுக்கப்புறம் ஒரு நாள் எங்க அம்மாக்கிட்ட ஒரு பிட்டை போட்டேன்..... "ஏம்மா, நிஜமாவே இந்த வீட்டுக்கு பெயின்ட் அடிபாங்களா" என்று... அம்மாவும் 'ஆமா... இதெல்லாம் ரெக்கார்ட் பண்ணதுதானே" அப்படீன்ற மாதிரி ஏதோ ஒண்ணு சொல்லீட்டு அவங்க வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.... அப்பத்தான் வீடியோ கேஸட் ஒண்ணு இர்க்கறதே ஞாபகம் வந்தது.... எனக்கு நானே பல்பு கொடுத்துட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பிச்சேன்.... அதான் அடுத்த கற்பனை.....
 
இப்ப உதாரணத்திற்கு ஹமாம் சோப்பை எடுத்திட்டிங்கன்னா அந்த விளம்பரத்தில் நடிக்கிறவங்க நிஜமாவே அந்த சோப்பை மட்டும் தான் பயன்படுத்துவாங்க.... வேற சோப் உபயோகப்படுத்தமாட்டாங்கன்னு நினைத்தேன்.... ஏன்னா அந்த சோப் தான் மிக உயர்ந்ததுன்னு அவங்க தானே அந்த விளம்பரத்தில் சொல்றாங்க.... சரி.... இவங்க ஹமாம் சோப் தான் யூஸ் பண்ணுறாங்கன்னு விளம்பரம் எடுக்கிறவங்களுக்கு எப்படி தெரியும்னு ஒரே யோசனை... அப்பத்தான் என் மூளைக்கு தோணுச்சு... (அடிக்க வராதீங்க.... கோபப்படாம வாசிக்கணும் :))) அதாவது அந்த விளம்பர கம்பனி வாசலில் ஒரு போர்டு மாட்டுவாங்கன்னு முடிவு பண்ணேன்... அந்த போர்டில் "ஹமாம் சோப் உபயோகப்படுத்துபவர்கள் தொடர்பு கொள்ளவும்" ன்னு எழுதியிருக்கும்னு நான் முடிவு பண்ணேன்....ஹி...ஹி.. அப்புறமாத்தேன் தெரிஞ்சுது... காசு கொடுத்த யார் வேணா என்ன வேணா சொல்லுவாங்கன்னு..... (ஆனாலும் ரொம்ப வெள்ளந்திங்க நான் :)))
 
அடுத்த ஆராய்ச்சி என்னன்னு பார்த்தீங்கன்னா....
 

சினிமாவில் நடிக்கிறாங்களே ஹீரோவும் ஹீரோயினும்.... அவங்க குரலுக்கு நான் அப்படியே அசந்து போய்ட்டேன்... (உண்மையான வாய்ஸுக்கு இல்ல....)... அதுவும் சினிமாவில் அழகான குரலில் பாட்டு படிக்கிறாங்களே... அதுவும் என்னமா கவிதையா பொழியுறாங்க.... கொஞ்சங்கூட யோசிக்காம அழகான வரிகளா போட்டு படிக்கீறாங்களேன்னு ஒரே ஆச்சரியம்தான் போங்க.... இந்த மாதிரி ஆச்சரியத்தில் வாய் பிளந்துட்டிருக்கிற ஸ்டேஜில் தான் ஒரு நாள் அந்த பேட்டியைப் பார்க்தேன்...
 
எஸ்.பி.பி. அப்ப்டீன்றவரோட பேட்டியை பார்த்தேன்... (இப்பத்தான ஒரு படத்துக்கு டைட்டில் வச்சவுடனேயே அந்த படத்தோட ஹீரோ,ஹிரோயின், டைரக்டர், ப்ரொட்யூஸர், கேமராமேன், லைட் பாய்னு எல்லாரையும் அழைத்து வந்து பேட்டி எடுக்கிறாங்க.... அவங்க என்னமோ நாட்டுக்காக போரில் பங்கெடுத்த மாதிரி அவங்க அனுபவத்தை எடுத்து விடுறாங்க.... இதுல தொகுப்பாளரோட கேள்வி வேற தாங்க முடியாது... அந்த பாட்டுல நடிச்ச உங்க அனுபவம் எப்படி இருந்தது.... இந்த படத்துக்காக, இந்த நாட்டு மக்களுக்காக அந்த கிராமத்தில போய்த் தங்கி கஷ்டப்பட்டு நடித்த உங்க அனுபவத்த கொஞ்சம் சொல்லுங்க'ன்னு இப்படியெல்லாம் சொல்லி அந்த ஹிரோவை அப்படியே தேசிய வீரர் ரேஞ்சுக்கு ஆக்கிவிடுறதே இவங்கதான்... இதெல்லாம் நமக்கு எழுத வராது...ஆமினாதான் இது பத்தி நல்லா விலாசித்தள்ளுவாங்க... :)))
 
ஓக்கே.. மேட்டருக்கு வர்றேன்... எஸ்.பி.பியின் பேட்டியைப் பார்த்தேன்... அவரும் ஏதோ ஒரு படத்தில் ஒரு டூயட் சாங்கில் ஹீரோவுக்காக படித்த பாட்டை படித்துக் காட்டி கொண்டிருந்தார்....அப்பத்தான் புரிந்தது.... அடப்பாவி மக்கா... அப்ப அந்த ஹீரோவும் ஹீரோயினும் படத்தில் பாட்டு படிக்கிறதில்லையா... வெறும் உப்புக்குச் சப்பாணிதானா....சரி...சரி.... இப்பவாவது தெரிய வந்ததேன்னு எனக்கு நானே சமாதானப்படுத்திக்கிட்டேன் :((.... அப்ப எனக்கு ஒரு டவுட்டு.... அப்ப அந்த ஹீரோயினுக்கு பதில் யார் பாட்டு படிச்சிருப்பாங்கன்னு.... பக்கத்தில் இருந்த அக்காகிட்ட கேட்டேன்... ' அப்ப அவளுக்கு பதில் யார் வாய்ஸ் கொடுத்தாங்கன்னு எதுவும் சொன்னாங்களா"ன்னு கேட்டதுதான் தாமதம்... "அத தெரிஞ்சு நீ என்ன பண்ண போறே"ன்னு ஒரே வரியில ஒரு இளம் விஞ்ஞானியை, அவளோட ஆராய்ச்சிகளை வார்த்தை கங்குளால் எரித்து சாம்பலாக்கிட்டா எங்க அக்கா... அவளுக்கு அந்த நேரத்தில் என்ன கவலையோ....:((
 
சரி... நம்மள சுத்தி இருக்கிறவங்களுக்கு நம்ம ஆராய்ச்சியைப் பார்த்து ரொம்ப பொறாமை... வழக்கம்போல இதையும் நாமளே முடிவு பண்ணுவோம்னு களத்தில் குதிச்சாச்சு.... அதாவது எஸ்.பி.பி.யே ஹீரோயினுக்காகவும் கீச்சு குரலில் பிண்ணனி குரல் கொடுத்திருக்கார்னு (எஸ்.பி.பி.க்கு தெரிந்தால்...நொந்து போய்டுவார்) ரிஸர்ச் ரிப்போர்ட் ரெடி பண்ணிட்டு நிம்மதியா தூங்கியாச்சு.... பின்னாளில் ஒரு நாள் ஃபீமேல் ப்ளேபேக் சிங்கர்ஸ் பற்றி வேறொரு ஆராய்ச்சியில் அறியப்பெற்று ரிஸர்ச் ரிப்போர்ட்டை மாற்றி எழுதினது தனி கதை.
 
 
இப்படியாக நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்.... இதுவரை நான் சொன்ன ரிஸர்ச் பற்றியும் அதன் ரிப்போர்ட் பற்றியும் உங்க குழந்தைகளுக்கு சொல்லி அவங்க அறிவை வளர்த்து விடுங்க... அல்லது அவர்களையே நேரில் இந்த தளத்தைப் படித்து உலகத்தை புரிந்து கொள்ளச் சொல்லுங்க... ஏதோ என்னால் ஆனது....
 
என்ன இவ... இவ மானத்தை இவளே கப்பலேத்தி விடுறாளேன்னு நீங்க நினைக்கலாம்... என்ன பண்றது... எனக்கு ஒரு ஆளுக்காக கப்பல் கிளம்பாதாம்.... அதனால் உங்களையும் துணைக்கு அழைக்கிறேன்... ஃப்ரீ டிக்கட்.... இந்தப் பதிவைத் தொடர்ந்து எழுதி உங்க அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கப்பலில் ஏறிக்கோங்க...:))))
 
இந்த பதிவைத் தொடர நான் இவர்களை அழைக்கிறேன்....;))
 
1. ஆமினா (இந்த பதிவை நீங்க எழுதியே ஆகணும்னு உங்கள மிரட்டறேன்....:)))
2. சிட்டுக்குருவி
 

17 comments:

ஹுஸைனம்மா said...

வாசிச்சுகிட்டே வந்தப்போ, தொடர்பதிவு அழைப்ப்பைப் பாத்து மிரண்டுட்டேன். நல்லவேளை, அழைப்பு... எனக்கில்லை... எனக்கில்லை... ஹப்பாடா!!

ஆமா, இந்த அரிய பெரிய ஆராச்சிலாம் எப்ப செஞ்சீங்க... ஒரு மூணு, நாலு வயசிருக்கும்போதா? பரவால்லையே, அந்த வயசில நடந்ததையும் இப்ப ஞாபகம் வச்சிருக்கீங்களே!!

//வார்த்தை கங்குளால் எரித்து சாம்பலாக்கிட்டா எங்க அக்கா...//
ம்க்கும்.. இந்த வெட்டி ஆராச்சீயை வளத்துவிடாம, “முளையிலேயே கிள்ளி” எறிஞ்சதுக்காக அந்த அக்காவுக்கு நீங்க நன்றிக்கடன் பட்டிருக்கீங்க என்பதை மறக்க வேண்டாம்!! :-)))))

ஆமினா said...

//(இந்த பதிவை நீங்க எழுதியே ஆகணும்னு உங்கள மிரட்டறேன்....:)))//

அடப்பாவிமக்களா....

Unknown said...

முதல் முறையாக உங்களின் தளத்துக்கு வந்து இருக்கிறேன் சகோ .........தொடந்து உங்களை பின் தொடர்வேன்

Unknown said...

சும்மா மொக்கை போட்டு கொண்டு இருந்த என்னை ..எழுத்தாளர் .ரேஞ்சுக்கு கொண்டு போயடிங்கலே ..சொந்தமாக நான் ஏதாவது எழுதுனா அதுல ஏகப்பட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்..இதுல வேற உங்களை பின் தொடரும்னு சொன்ன கொஞ்சம் கஷ்டம் தான் ..........இருந்தாலும் உங்களின் அப்ரோச் எனக்கு ரொம்ப பிடுச்சு இருக்கு

ஆத்மா said...

ஏங்க நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவ எடுத்தீங்களா......
மறுபடியும் யோசிச்சு பாருங்க...
பின்னாடி பீல் பண்ணுவீங்க......:)

ஆத்மா said...

உங்கள விஞ்ஞானியாகாம அக்கா தடுத்தா.
எங்கள விஞ்ஞானியாகாம அண்ணன் தடுத்தான்..
நமக்கு மூத்தெதெல்லாம் ஆப்புத்ட்தான் வைக்குதுகளோ...
அருமையான பதிவு ரசித்துப் படித்தேன்

Flavour Studio Team said...

இம்புட்டு அப்பாவியா நீங்க???


நான் எல்லாம் என்னோட ஆராய்ச்சிய சொன்னா உலகம் அழிஞ்சிடும் ஹிஹிஹி... வெயிட் அண்ட் சி... :)

என்ன எழுதன்னு தெரியாம மண்ட காஞ்சு போயி இருந்த எனக்கும் ஆமிக்கும் ஒரு ஐடியா தந்த வள்ளலே வாழ்க வாழ்க.. ஹிஹிஹி :)

Unknown said...

உங்களின் அழைப்புக்கு மிக்க நன்றி.. நேரம் கிடைக்கும் பொழுது தொடர்கிறேன். இன்ஷா அல்லாஹ்

enrenrum16 said...

@ஹுஸைனம்மா
ஏற்கனவே உங்க ப்ளாகில் நீங்க வாங்கின பல்புகள் பற்றின பதிவுகள் தான் அதிகமிருக்கு. இதுமாதிரி சிறுவயது ஆராய்ச்சிகளில் பல்புகளே அதிகம் கிடைக்க வாய்ப்புண்டு என்பதனால் நானும் உங்களைத் தர்மசங்கடப்படுத்த வேண்டாமேன்னு அழைக்கவில்லை. :))

3,4 வகுப்பு படிக்கும்போது நடந்ததாக இருக்கலாம் ஹி..ஹி..;))

உங்களுக்கு நான் சொல்ல வர்றது புரியல...எங்க அக்கா நான் கேட்டதுக்கு பதில் சொல்லியிருந்தானா அப்படியான்னு கேட்டுட்டு மறந்திருப்பேன்...அவ சொல்லாததுனால் பாருங்க.... நான் என் மூளையைக் கசக்கி பிழிய வேண்டியதாயிடுச்சு... (எப்பூடீ?:)))

@ஆமினா

வொய்?? நீங்கள்லாம் மிரட்டி எழுதவைக்கப்படும் பதிவர்தானே...இல்லையா பின்ன? ;))

enrenrum16 said...

@ரினாஸ்

/தொடந்து உங்களை பின் தொடர்வேன் / நன்றி.

/சொந்தமாக நான் ஏதாவது எழுதுனா அதுல ஏகப்பட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்./ எழுத எழுத பிழைகள் குறையும். அதுக்கு இந்த மாதிரி உருப்படியான பதிவுகள் தான் உதவும்...ஹி..ஹி...

enrenrum16 said...


@சிட்டுக்குருவி

/பின்னாடி பீல் பண்ணுவீங்க......:) / நாங்கள்லாம் அடுத்தவங்கள ஃபீல் பண்ண வச்சுத்தான் பழக்கம்..... நானாவது பீலிங்காவது.....:)

/நமக்கு மூத்தெதெல்லாம் ஆப்புத்ட்தான் வைக்குதுகளோ.../ ஒரு வரி சொன்னாலும் ரத்தினச்சுருக்கமா சொன்னீங்க.... நாம இதுக்குன்னு குடும்பத்தின் இளையகுழந்தைகள் சங்கம்னு ஒண்ணு உருவாக்கி நமக்கு ஏற்பட்ட கதி யாருக்கும் இனி ஏற்படாதவாறு பாடுபடுவோம். ;)))

enrenrum16 said...

@சர்மி

/நான் எல்லாம் என்னோட ஆராய்ச்சிய சொன்னா உலகம் அழிஞ்சிடும்/ ஆத்தீ..... ஏற்கனவே 2012ல் உலகம் அழியப்போறதா சொல்லிட்டிருக்கானுக... ..தெரியாத்தனமாயில்ல உங்களைத் தொடர சொல்லிட்டேன். ஹ்ம்... என்ன நடக்குமோ தெரியலயே....;))

/எனக்கும் ஆமிக்கும் ஒரு ஐடியா தந்த வள்ளலே வாழ்க வாழ்க.. ஹிஹிஹி :) / என்னை போல் வள்லல்களால தான் மழையே பெய்யுது.... (நானே மண்ட காய்ஞ்சுபோய்த் தான் ராப்பகலா யோசித்து இதுமாதிரி பதிவு போட்டு வாழ்க்கைய ஓட்டறேன்... ச்ச...ச்ச.... கம்பனி சீக்ரட்ட சொல்ல வச்சிட்டீங்களே....)

@சினேகிதி..

கருத்திட்டதுக்கு நன்றி ஃபாயிஸா...

Mahi said...

:) நல்லாவே சிந்திச்சிருக்கீங்க பானு!:)

//இவ மானத்தை இவளே கப்பலேத்தி விடுறாளேன்னு நீங்க நினைக்கலாம்... என்ன பண்றது... எனக்கு ஒரு ஆளுக்காக கப்பல் கிளம்பாதாம்.... அதனால் உங்களையும் துணைக்கு அழைக்கிறேன்... ஃப்ரீ டிக்கட்.... இந்தப் பதிவைத் தொடர்ந்து எழுதி உங்க அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கப்பலில் ஏறிக்கோங்க...:))))// ஐ..கத நல்லாருக்கே! நீங்க ஃப்ரீ டிக்கட்டே குடுத்தாலும் நான் கப்பல்ல ஏறமாட்டேன், ஏனா எனக்கு ஸீ-ஸிக்னஸ் நெறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய உண்டு! ஹாஹ்ஹாஹா! :))))

Mahi said...

நானு இப்பவும் விளம்பரங்களை ரசிக்கற ஆளு, இப்புடி கொசுவர்த்தியெல்லாஞ் சுத்தச் சொன்னீங்கன்னா கொஞ்சம் கஷ்டம், செலக்டிவ் அம்னீஷியாவையெல்லாம் ஒதுக்கி, ஞாபகப்படுத்தி எழுத முயற்சிக்கிறேனுங்க பானு! அழைப்புக்கு நன்றி! :)

Jaleela Kamal said...

ஹிஹி இது போல் நானும் நிறைய ஆராய்ச்சி செய்து இருக்கேன்.
இப்ப அத பற்றி நினைத்தால் சிரிப்பு தான் வரும்..


”அத தெரிஞ்சு நீ என்ன பண்ண போறே"
அப்ப உங்க அக்காளுக்கு இவ என்ன நம்ம ள மிஞ்சுடுவாளுன்னு பயமா இருந்து இருக்கும்

அதான் அப்படி.சொல்லி இருப்பாங்க

enrenrum16 said...

@மஹி

கவலையே படாதீங்க மஹி...இந் கப்பல்ல உங்களுக்கு ஸீ-ஸிக்னெஸ் வராது... அதுக்கு நான் கியாரன்டி.... :))

@ஜலீலாக்கா

ஜலீலாக்கா.... கரக்டா சொன்னீங்க... உங்களுக்கும் இதே மாதிரி அக்கா இருக்கிறாங்கன்னு நினைக்கிறேன்... அதான் கரக்டா புரிஞ்சிக்கிட்டீங்க....

ஆமினா said...

எழுதிட்டேன் பா

http://www.kuttisuvarkkam.com/2012/11/blog-post_25.html