Sunday, September 23, 2012

இஸ்ரா !!

தலைப்பைப் பார்த்ததும இது இஸ்ராவா இஸ்ரோவா .... இஸ்ரோ பற்றி இவுக  என்ன எழுதப் போறாக ன்னெல்லாம் யோசிக்காதீங்க ... அது பத்தி எழுத -ஹுசைனம்மா இருக்காங்க.... ஆக்கப்பூர்வமா என்ன எழுதன்னு தலைப்பு யோசிக்கிறாங்களே ... நம்ம சிராஜன்னே இருக்காக.. ஏன் நீங்களும் எழுதலாம்...ஆனா என் தோழி  இஸ்ராவைப் பற்றி நான் மட்டுமே எழுத முடியும்.... (ஹி ..ஹி ... இத மட்டும் தான் நான் எழுத முடியும் ;))


பெயரைச   சொல்லும்போதே மனதின் மகிழ்ச்சி  முகத்தில் புன்னகையாக வெளிப்படும்... அவளுடன் பேசிய தருணங்கள் ஒவ்வொன்றாக ஆழ்  மனதிலிருந்து நினைவில் எட்டிப்பார்க்கும்...  அந்த சிறிய பெண்ணின் கள்ளங்கபடமற்ற பேச்சுக்கள் என் கவலையைப் போக்கும்  ... அவளை நினைத்தாலே 'smiling beauty' என்று சொல்வார்களே அச்சொல்லாடல் தான் நினைவிற்கு வரும். அவளுடன் பேசுபவருக்குத் தவிர மற்றவருக்கு அவள் பேசுவது கேட்காது. அவ்வப்போது நாளை பரீட்சை இருக்கிறது என்று  சொன்னாலும் அவளது படிப்பு சம்பந்தமான எந்த வித அழுத்தத்தையும் முகத்தில் காட்டிவிட மாட்டாள். தன சந்தோஷத்தை மட்டுமே மற்றவருடன்  பகிர்ந்து தன கவலைகளை மறைக்கும் ம்ன்முதிர்ச்சியை இந்த வயதிலேயே பெற்றவள். அவள் தான் எனதருமைத் தோழி இஸ்ரா...

முதன் முதலில் அவளை சந்தித்த தருணம் இப்பொழுதும் என் நினைவில் இருக்கிறது.... வெள்ளிகிழமை தொழுகை முடிந்ததும் பள்ளியில் ஒரு அறிவிப்பு வர அதகுண்டான விளக்கத்தை என் அருகில் இருந்த பெண்ணிடம் கேட்டேன். பொறுமையாக தாழ்ந்த குரலில் விளக்கியவளின் முகத்தை அதுவரை பார்த்திராததால் ' புதிதாக அருகில் குடி வந்திருக்கிறிர்களா இதுவரை உங்களை இங்கு நான் பார்த்ததில்லையே' என்ற என் கேள்விக்கு 'நான் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதால் அடிக்கடி வர முடியவில்லை' எனத தெரிவித்தாள். அதன் பிறகு தான் அப்பள்ளி வாசலின் இமாமின் (தொழுகை நடத்துபவரின்) மகள் எனவும் தெரிவித்தாள் .  அவ்வறிமுகத்திற்குப் பிறகு அடிக்கடி சந்திப்பு தொடர்ந்தது. அங்கு நடத்தப்படும் வெள்ளிக்கிழமை குத்பா (உரை) பற்றிய விளக்கங்கள் பலவற்றை என்னிடம் விவரித்தாள். இதற்காக தொழுகை முடிந்த பின்பும் எனக்காக நேரம் ஒதுக்கி எனக்கு உதவினாள். இஸ்லாத்தைப் பற்றி அவளிடமிருந்து நானும் என்னிடமிருந்து அவளும் பகிர்ந்து கொண்டோம்.


இச்சந்திப்பிற்காகவே மதிய உணவு தயாரிப்பை  பள்ளிக்கு வரும் முன்பே ஓரளவு முடித்துவிட்டு கிளம்புவதற்காக காலையில் கொஞ்சம் சீக்கிரம் :(( எழும்ப வேண்டியிருந்தது .. பின்பு அதுவே நல்ல பழக்கமாக மாறிவிட்டிருந்தது (அதாவது இப்ப இல்லை....ஹி ஹி )...ஆனா ..... நல்ல வேளை ..சாப்பாடு....சாப்பாடுன்னு கிச்சனிலேயே  கிடக்காமல் இஸ்லாத்திற்காக நேரம் ஒதுக்க இறைவன் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தியதை நினைத்து இப்ப மனதிற்கு திருப்தியாக இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ் !


நான் பள்ளிக்கு செல்ல முடியாத போதும் அவள் எனக்காக வந்து காத்திருந்ததை என்னிடம் தெரிவித்தபோது மனம் வருந்தினேன். அவள் சொல்லும்போது சிறிதேனும் கோபப்பட்டிருந்தால் வருத்தப்பட்டிருக்கமாட்டேன். ஆனா வருத்தத்துடன்  சொன்னபோது என் தலையில் 'நங் நங்' நு கொட்டனும்போல இருந்துச்சு... ( உங்களுக்கு சந்தோஷமா இருக்குமே?!) ஆனா செய்யலை.... (எப்பூடி ?)அதன் பிறகு நான் செல்லாத நாட்களில் அவளுக்கு sms அனுப்பிவிடுவேன்.


கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆன பின் அவள் அந்த தகவலை  சொன்னாள் . அவளது தந்தைக்கு பணி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாகவும் அதனால் அவள் குடும்பத்தினர் அனைவரும் அவளது தாய் நாட்டிற்குத திரும்பி செல்லவிருப்பதாகவும் தெரிவித்தாள். அதைக் கேட்டதும் மனதிற்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. நெடுநாள் தொடர்ந்த நட்பில் பிரிவேற்படப்போவதை எண்ணி இருவருக்கும் மனம் கனத்து விட்டது. 


இந்த பிரிவு அவள் ஏற்கனவே எதிர்பார்த்து இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு உடனே நம்பமுடிவதாக இல்லை. சொல்லப்போனால் இந்நாட்பில் பிரிவு ஒன்று இருக்குமானால் அது நாங்கள் இந்தியா திரும்பும்போதுதான் அமையும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் என்றேனும் ஒருநாள் நான் சொல்லவிருந்த  அவ்வார்த்தைகள் அவளிடமிருந்து வந்தது எனக்கு ஏற்றுக்கொள்ள சிரமமாக இருந்தது ஏனெனில் அவள் வேற்று நாட்டை சேர்ந்தவள் என்பதே எனக்கு அப்போதுதான் தெரியவந்தது.   சிறிது நேரம் என்ன பேசுவது என்றே எனக்குத் தோன்றவில்லை. பிறகு சுதாரித்து உனது தாய் நாடு எது எனக் கேட்டேன்.. அது....


இன்ஷாஅல்லாஹ், அடுத்த பதிவில்....

படங்கள்  கஊகிளில் கிடைத்தவை 

14 comments:

ஆமினா said...

//ஆக்கப்பூர்வமா என்ன எழுதன்னு தலைப்பு யோசிக்கிறாங்களே ... நம்ம சிராஜன்னே இருக்காக..//

உங்க காமெடிக்கு அளவே இல்லையா பானு! சிரிச்சு மாளல ROFL

ஆமினா said...

அப்ப நீங்க எந்த நாட்ல இருந்தீங்க...

தமிழ்நாடுன்னு மொக்கை போடுவீங்களோ அடுத்த பதிவில்??? இருந்தாலும் வெயிட்டுறேன் :-)

ஹுஸைனம்மா said...

//இஸ்ரோ பற்றி இவுக என்ன எழுதப் போறாக ன்னெல்லாம் யோசிக்காதீங்க ... அது பத்தி எழுத -ஹுசைனம்மா இருக்காங்க//
அதானே, நானே அப்படி ஒரு சீன் காட்டிட்டுதான் காலத்த ஓட்டிட்டிருக்கேன். அதுக்கும் ஆப்பான்னு பயந்துட்டேன்!!

//ஆக்கப்பூர்வமா என்ன எழுதன்னு தலைப்பு யோசிக்கிறாங்களே ... நம்ம சிராஜன்னே இருக்காக..//

மருந்தைக் குடிக்கும்போது குரங்கை நினைக்கக்கூடாதுனு சொன்ன மாதிரி, எல்லாருக்கும் பதிவெழுதும்போது, வேலையே செய்யாத ’மந்தி’ரியாட்டம், பதிவே எழுதாம பதிவர்னு சொல்லிக்கிற சிராஜ் ஞாபகம் வருகிற மர்மம் என்னவோ!!

சின்னபுள்ளையில சாப்பிடாட்டி பூச்சாண்டிட்ட பிடிச்சுக் கொடுத்திருவேன்னு பயங்காட்டுனதால, வளந்தப்புறமும் பூச்சாண்டி நெனப்பு வருமே அதுமாதிரியோ??!! :-)))))))

இஸ்ராகிட்ட ஆங்கிலத்துல பேசினீங்களா? அவ அரபுப் பொண்ணா? அதெல்லாம் சொல்லணும்ல? கதை அபுதாபில நடக்குதுங்கிறது ஒரு நிமிட் மறந்துட்டதால, இரு சின்ன க்ன்ஃப்யூஸன். ஓகே, கண்டினியூ!!

// என் தலையில் 'நங் நங்' நு கொட்டனும்போல இருந்துச்சு//
இனி இதுமாதிரி உதவி வேணுன்னா, தயங்கவே கூடாது!! நாமல்லாம் அப்படியா பழகிருக்கோம்? ஒரு உதவின்னா கூப்பிட்டா ஓடி வரமாட்டேன்?

சிராஜ் said...

// ஆக்கப்பூர்வமா என்ன எழுதன்னு தலைப்பு யோசிக்கிறாங்களே ... நம்ம சிராஜன்னே இருக்காக..//

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் ஒளி மறைவதில்லைங்கிற மாதிரி.... ஆக்கப்பூர்வம்னு சொன்ன உடனே என் பெயர் நியாபகம் வந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை... இது பதிவுலகிள் எனது உழைப்பிற்க்கு கிடைத்த பரிசு என்றே நினைக்கிறேன்(என்ன சிரிப்பு? ஆமினா , ஹூஸைனம்மா... என்ன சிரிப்புன்னு கேட்கிறேன்)

சிராஜ் said...

// பிறகு சுதாரித்து உனது தாய் நாடு எது எனக் கேட்டேன்.. அது.... //

என்னோட கெஸ்..அந்த பொண்ணோட நாடு பாகிஸ்தான், நீங்க பேசிகிட்டது உருது..... ஹி..ஹி..ஹி

Jaleela Kamal said...

இஸ்ரா வை பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்சி,
ஓ சஸ்பன்ஸ் வேறையா??

enrenrum16 said...

ஏன் ஆமினா... என்னாச்சு..... ஏன் சிரிக்கிறீங்க... நான் நிஜமா சீரியஸாதான் சொன்னேன்.... எனக்கெல்லாம் சிராஜண்ணே தான் முன்மாதிரி....அவரு 100 பதிவு போட்டாத்தான் நான் 1 பதிவாது போடுவேன்....;))) எங்க தலைவரைப் பார்த்து சிரிக்கிறீங்க......அப்புறம் நானும் உங்கள பற்றி வஞ்சப்புகழ்ச்சி பதிவு போட்டுடுவேன்....ஆமா...... கர்ர்ர்ர்ர்ர்ர்....(ஆமினாவைப் பற்றி எதிர்ப்பதிவு போட்டா ஃபேமஸாயிடலாமோ::))))

/அப்ப நீங்க எந்த நாட்ல இருந்தீங்க... /// அடுத்த கர்ர்ர்ர்ர்..... இப்படிப்பட்ட ஒரு பிரபல பதிவர பற்றி எதுவுமே தெரியாம இருக்கீங்க.... நான் அபுதாபியில் தாங்க இருக்கேன்...... 'அது நாங்கள் இந்தியா திரும்பும்போதுதான்' இந்த வரியை வாசிக்கலையோ....... ;((

enrenrum16 said...

@ ஹுஸைனம்மா.....

/அதானே, நானே அப்படி ஒரு சீன் காட்டிட்டுதான் காலத்த ஓட்டிட்டிருக்கேன். அதுக்கும் ஆப்பான்னு பயந்துட்டேன்!!/// உங்களை கரக்டா புரிஞ்சிருக்கேன் பாத்தீங்களா...ஹி..ஹி...

///வேலையே செய்யாத ’மந்தி’ரியாட்டம், பதிவே எழுதாம பதிவர்னு சொல்லிக்கிற சிராஜ் ஞாபகம் வருகிற மர்மம் என்னவோ!!'///// அடுத்த கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்................ இதெல்லாம் நல்லதுக்கில்ல... ஒரு மனுஷன் எவ்வளவுதான் தாங்குவான்..... சிராஜ் மட்டும் வீறு கொண்டு எழுந்துட்டாரு....அப்புறம் பதிவுலகம் தாங்காதூஊஊஊஊஊஊ.......

ஆமாங்க..... அபுதாபியில் நடந்தது... அவ அரபுப்பொண்ணு.... ஆங்கிலத்துல பேசினோம்... கிளியரா?? சாரி பார் த கன்பூஷன்.....

/இனி இதுமாதிரி உதவி வேணுன்னா, தயங்கவே கூடாது!! நாமல்லாம் அப்படியா பழகிருக்கோம்? ஒரு உதவின்னா கூப்பிட்டா ஓடி வரமாட்டேன்?/ஏன் இந்த கொலவெறி... ஏதாவது பிரச்சினைன்னா பேசித்தீர்த்துக்கலாம்.... இதென்ன வடிவேலு தலையா....???? அவ்வ்வ்வ்வ்வ்வ்......

enrenrum16 said...

@சிராஜ்

//என்ன சிரிப்பு? ஆமினா , ஹூஸைனம்மா... என்ன சிரிப்புன்னு கேட்கிறேன்)///// சாரிங்க்ணா... நானும் சிரிச்சுட்டேன்..... ஹி.....ஹி....

/என்னோட கெஸ்..அந்த பொண்ணோட நாடு பாகிஸ்தான், நீங்க பேசிகிட்டது உருது..... ஹி..ஹி..ஹி/

ஹி...ஹி.... உங்க கெஸ் புஸ்வாணமாயிடுச்சே..... அவ பாகிஸ்தானியுமில்ல...எனக்கும் உருதும் தெரியாது.....ஹி..ஹி..

enrenrum16 said...

@ஜலீலாக்கா....

சும்மா ...... ஒரு குட்டி சஸ்பென்ஸ் வச்சேன்க்கா..... என் மகிழ்ச்சி உங்களையும் தொற்றிக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சிக்கா.....

அஸ்மா said...

சலாம் பானு! அவசரமா படித்தேன், அதுவே அருமையா இருக்கு ;)

எதேர்ச்சையா dashboard வந்தா அதுல உங்க பதிவு தெரிகிறது. follower ல என்னைக் காணுமேன்னு செக் பண்ணுனா.. எப்படியோ உள்ளே போயிருந்திருக்கு என் லோகோ :( நல்லவேளை இப்பவாச்சும் வெளியில் கொண்டு வந்துட்டேன், அதுவும் உங்களுக்கு அடுத்த முதல் follower ராக :-)

அன்புடன் மலிக்கா said...

அடடா. சஸ்பென்ஸா தாங்கலடா சாமி..

இனி இதுமாதிரி உதவி வேணுன்னா, தயங்கவே கூடாது!! நாமல்லாம் அப்படியா பழகிருக்கோம்? ஒரு உதவின்னா கூப்பிட்டா ஓடி வரமாட்டேன்?/வரமாட்டோமுன்னு சேத்து சொல்லமாட்டியலா அபுதாபி மேடம்.. இப்பவெல்லாம்தான் மறந்துட்டோமே எப்புடி நியாபகம் வரும்.. சரி சரி பானு நங்குன்னு இல்லாட்டியும் டொங்குன்னு கொட்டவாவது நா ரெடி! தலைய காட்ட நீங்க ரெடியா..

enrenrum16 said...

வஸ்ஸலாம் அஸ்மாக்கா... உங்கள் வேலைகளுக்கு மத்தியிலும் என் பதிவைப் படித்து கருத்து தெரிவித்ததுக்கு நன்றிக்கா.

/என் லோகோ :( நல்லவேளை இப்பவாச்சும் வெளியில் கொண்டு வந்துட்டேன், / ரொம்ப நன்றிக்கா.

enrenrum16 said...

//சரி சரி பானு நங்குன்னு இல்லாட்டியும் டொங்குன்னு கொட்டவாவது நா ரெடி! தலைய காட்ட நீங்க ரெடியா..//
அம்மாடி...தெரியாத்தனமா மனசுல நினச்சத உங்களயெல்லாம் நம்ம்ம்பி பகிர்ந்துகிட்டேன்..... எத்தன பேர் இந்த மாதிரி கிளம்பியிருக்கீங்க..... "சரியான ஓட்ட வாய்...யாருகிட்ட என்ன பேசுறதுன்னு தெரியாது?"ன்னு என்னை நானே திட்டிக்கிட்டு என் தலையில நானே கொட்டிக்கறேன்.... போதுமா..... என்னாஆஆஆஆ வெறி....:(((...அவ்வ்வ்வ்வ்வ்