ஐடி கார்ட் of பெரியத்துரை:
பள்ளியிலிருந்து வரும்போது பெரியத்துரை அன்னிக்கு புது ஐடி கார்ட் மாட்டியிருந்தான்.
நான்: அட...ஐடி கார்ட் நல்லாருக்கே....
அவன்: ம்மா..... இத ஸ்கூல் ஆஃபீஸ்ல கொடுக்கணுமாம்....
நான்: ஐடி கார்டுக்கு காசு வாங்கி மூணு மாசம் கழிச்சுத்தான் தந்துருக்காங்க... அத ஏன் அங்க குடுக்கணுமாம்?!
அவன்: இங்க பாரு... இதுல போட்டிருக்கு.... If found, please return to school office.
----------------------------------------------------------------------------------------------------
இதயத்தை திருடவில்லை..வில்லை...வில்லை...
தலைப்பைப் பார்த்து என்ன திடீர்னு கவிதை மாதிரி ஏதோ எழுதறாளேன்னு கனவிலயும் நினைக்காதிங்க. இப்போதைக்கு அப்படியெல்லாம் பண்ற மாதிரி ஐடியா எதுவும் இல்ல.... :-(..... நம்புங்க இது ஒரு உண்மையான சம்பவம்... இதயம் காணாமல் போன நிகழ்வு...காலத்தின் முன்னேற்றத்தைப் பாருங்க... ஒரு ஆஸ்பத்திரியிலிருந்து ஒருவருடைய இதயத்தை எடுத்து இன்னொரு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும் வழியில் இதயம் கீழே (?) விழுந்து விட்டது... அதை மறுபடியும் வந்து எடுத்துச செல்லும் காட்சி இதோ உங்கள் பார்வைக்கு... நல்ல வேளை யாரும் சைக்கிள் கேப்பில் அந்த இதயத்தைத் திருடிச செல்லவில்லை. ;))
------------------------------------------------------------------------------------------------
பெட்ரோலின் நிறம் பிங்க்
ஒரு முறை காரில் வெளியே போய்விட்டு வரும் வழியில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட காத்திருந்தோம் (பெட்ரோல் பங்கிற்கு எல்லாரும் பெட்ரோல் போடத்தான் போறோம்னு யாரோட மைன்ட் வாய்ஸோ கேட்குது .... அது வந்து...... குறுக்க பேசினா சொல்ல வந்தது மறந்து போயிடுதுல்ல..... என்ன சொல்ல வந்தேன்.....அப்பாடா ஞாபகம் வந்துடுச்சு....) அப்ப நம்ம பெரியத்துரை:
ம்மா... பெட்ரோல் எங்கிருந்து வருது?
எர்த்துக்கு அடியிலிருந்து வ.....
நாம பாத்ரூம் போறதிலருந்தா ?
இல்லடா அது வந் ......
அப்ப நாம எல்லாரும் பீட்ருட் சாப்பிட்டா பெட்ரோல் பிங்க் கலர்ல வருமா
டேஏஏஏஏ....
இனிமே பெட்ரோலைப் பார்த்து பீட்ருட் ஞாபகம் வந்தாலோ இல்ல பீற்றுட்டைப் பார்த்து பெட்ரோல் ஞாபகம் வந்தாலோ நான் பொறுப்பில்ல.... பெரியத்துரைதான் காரணம். என்னைக் கேட்கக்கூடாது...ஆமா .....
-------------------------------------------------------------------------------------------------
உலகம் உங்கள் கண்சிமிட்டலில்!!
முன்னொரு காலத்தில் கம்ப்யுட்டர் வந்த காலத்தில் அதை வாய்பிளந்து பார்க்காதவர் இல்லை.... ஆனால் பார்வை இல்லாதோருக்கு அது ஒரு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. விரைவில் அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்கள். கணினியில் பதியப்பட்ட குரல் மூலம் அவர்கள் கைகளால் டைப் செய்வதையும் க்ளிக் செய்வதையும் அவர்களால் தெரிந்து கொள்ள முடிந்தது.
அப்படீன்னா, கண்களைத் தவிர மற்ற அனைத்து உறுப்புகளும் பக்கவாதத்தால் (லாக்ட்-இன் சின்றோம் ) பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் என்ன தவறு செய்தார்கள்? அவர்களும் கணினி உபயோகப்படுத்துவது ஏன் இந்த ஒரு(?) காரணத்தால் தடுக்கப்பட வேண்டும்?! என்ன சொன்னீங்க.... கண்கள் செயல்படுகின்றனவா? அது போதுமே என்கின்றனர் லண்டனைச சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். அவர்களுடைய கருவிழி தான் மௌஸ்..... விருப்பத்தைத் தேர்வு செய்த பின் க்ளிக் பண்ணவேண்டுமா? கண்ணைச்சிமிட்டுங்கள். அவ்வளவுதான். அதாவது நினைத்ததைப் பார்த்தால் போதும் என்கின்றனர் இக்கணிணியைக் கண்டுபிடித்தவர்கள்.
இதே லாக்ட்-இன் சின்றோமால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் கணினியில்லாத காலத்திலேயே சாதனைகள் பல புரிந்திருக்கின்றனர். தன நினைவுகளைப் புத்தகமாகப் பதிவுசெய்ய ஜீன் டொமினிக் பாபருக்குத தன கண்களே போதுமானதாகயிருன்தது.
பின்குறிப்பு:
லாக்ட்-இன் சின்றோமால் பாதிக்கப்பட்டவர்களுக்குகே குரல் தசைகள் பாதிப்புக்குள்ளகாது என்றாலும் குரலுக்கும் மூச்சிற்கும் இடையே தொடர்பு பாதிக்கப்படுவதால் அவர்களால் சரியாக பேசமுடியாது.
(இவ்வனைத்து நோய்களிலிருந்தும் என்னையும் என் உற்றார்,உறவினர்களையும் பாதுகாத்த இறைவா உனக்கே புகழ் அனைத்தும். பாதிக்கப்பட்டவர்களையும் விரைவில் குணப்படுத்தித்தருவாயாக!!)
1 comment:
அருமையான பதிவு
Post a Comment