Thursday, April 5, 2012

என்றென்றும் வற்றாக் கிணறு

நாட்டின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும் அரை-வறண்ட பாலைவனமும் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்மைக்கு உகந்த நிலமாக காணப்படும் மற்றும் குளிகாலங்களில் 0 டிகிரிக்கும் குறைவாக வானிலை நிலவும் (ஆதாரம் - விக்கி) சவூதி அரேபியாவில் என்றுமே வற்றாத என்றுமே உறையாத கிணறு ஒன்று உண்டென்றால் அது இறைவனின் அற்புதமேயல்லாமல் வேறென்னவாக இருக்கும்?! ஆம்...அது ஸம்ஸம் கிணறேதான்.
ஸம்ஸம் கிணறு உற்பத்தியாகுமிடம்
வருடந்தோறும் மில்லியன் கணக்கில் மக்காவிற்கு புனித பயணம் வந்து செல்லும் உலக முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் அள்ள அள்ள குறையாமல் ஊறிக்கொண்டிருக்கும் அந்த கிணறுதான் எத்தனை உண்மைகளைச் சொல்கிறது?!

67:30. (நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).

மழையும் இயற்கை குடிதண்ணீரும் இல்லாத பாலைவனத்தில் வற்றாத நீரூற்றைக் கொண்டு வர எல்லாம் வல்ல இறைவனைத் தவிர வேறு யாரால் முடியும்?!

ஸம்ஸம் கிணற்றின் ஆழம்

சுவையிலும் குணத்திலும் என்றும் மாறாத த்ண்ணீரைக் கொண்ட அக்கிணறு 98 அடி ஆழமுள்ளதாகவும் 3 அடி 7" லிருந்து 8 அடி 9" வரை அகலமுள்ளதாகவும் இருக்கிறது.

ஒரு நொடிக்கு பதினொன்றிலிருந்து 18 லிட்டர் வரை தண்ணீர் கிடைக்கிறது. சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 660 லிட்டரும் ஒரு நாளைக்கு 950,000 லிட்டரும் கிடைக்கும் கிடைத்துக் கொண்டேயிருக்கும் ஒரே கிணறும் ஸம்ஸம் கிணறு மட்டும்தான். அது மட்டுமல்ல, புனிதப்பயணத்திற்கு வருபவர்கள் தானும் குடித்து ஒவ்வொருவரும் அவரவர் இடத்திற்குத் திரும்பிச்செல்லுகையில் குறைந்தது 10 லிட்டராவது எடுத்துச்செல்லும் அதிசயமும் நடைபெறுகிறது.

பொதுவாக எந்த இடத்திலும் தண்ணீர் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் பாசி படிவது இயற்கையானதே. ஆனால் ஸம்ஸம் கிணற்றில் பாசியோ பாக்டீரியாவோ உருவாகவேயில்லை. சுத்தமான குடிதண்ணீராக விளங்கும் இக்கிணற்றின் தண்ணீர்  பலவித சத்துக்கள் நிறைந்ததாகவும் விளங்குகிறது. கால்ஷியமும் மக்னீஷியமும் அபரிமிதமாக இருக்கும் ஸம்ஸம் தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவல்லதாகவும் பலநாட்களுக்கு பசி தீர்க்கவல்லதாகவும் இறை நாடினால் நோய் தீர்க்க வல்லதாகவும்  நிரூபிக்கப்பட்டுள்ளது.

உலகில் கிடைக்கும் எந்த நிலத்தடி நீரை விடவும் ஸம்ஸம் கிணற்று நீருக்கு அதிக சோடியம், பொட்டாஷியம், ஐயோடின் சத்துக்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. உப்புத்தன்மையும் காரத்தன்மையும் அதிகமாக இருக்கிறது. பல ரசாயனங்கள் கலந்திருந்தாலும் இவ்வளவுகள் அனைத்தும் உலக நல அமைப்பு குடிநீருக்கென வகுத்து வைத்திருப்பதற்கும் குறைவாகவே இருக்கிறது.

பாதுகாப்பு கருதி இக்கிணறு கண்ணாடிக் கதவுகளால் மூடப்பட்டிருக்கிறது. இக்கிணற்றின் நீர் பம்ப் செய்யப்பட்டு ஆங்காங்கே மக்காவிற்கு வருபவர்கள் எடுத்துச் செல்லவும் உபயோகிக்கவும்  வசதியாக dispenserல் சேமிக்கப்படுகிறது. இக்கிணற்றில் பொருத்தப்பட்டிருக்கும் கருவியால் அதன் நீரினளவு, மின்சார கடத்துந்திறன், போன்ற பல தன்மைகளின் இலக்கமுறைத் தரவுகளை (அதொண்ணுமில்லை...digital values)நேரடியாக இணையத்தின் மூலமே அறிந்து கொள்ளலாம். இக்கிணற்றின் அடியில் இருக்கும் நீர்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.நிலத்தடி நீரை இதே அளவில் தொடர்ந்து பராமரிக்க, இக்கிணறு அமைந்திருக்கும் இப்ராஹிம் பள்ளத்தாக்கில் கிடைக்கப்பெறும், மழைநீரை வீணாக்காமல் சேமித்துவைப்பது, சுற்றத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு கடுமையான விதிமுறைகள் வகுத்து பின்பற்றப்படுவது போன்ற நடவடிக்கைகளும் சீராக கடைப்பிடிக்கப்படுகின்றன.


எந்த ஒரு மத சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் அது அந்த குறிப்பிட்ட மதத்தவர்கள் மட்டுமே நம்பும்படியாகவும் மற்ற மதத்தவர்களுக்கு சந்தேகத்திற்குரியதாகவுமே இருக்கிறது. அது இஸ்லாத்தின் மற்ற எந்த நம்பிக்கையான சம்பவமுமேயானாலும் மற்ற மதத்தினருக்கு நாம் விளக்கினாலே அன்றி புரியவைக்க முடியாது.

ஆனால் ஸம்ஸம் கிணறும் அதன் தண்ணீரும் அப்படிப்பட்ட விவாதங்களுக்கு இடமளிக்காதவைகளில் ஒன்று. ஸம்ஸம் தண்ணீரின் நற்குணங்களை உலகின் அனைத்து மக்களும் சந்தேகத்திற்கிடமின்றி ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் ஸம்ஸம் கிணறு உருவான இஸ்லாமிய வரலாறும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

ஸம்ஸம் கிணறு உருவான விதம், அதைக் கண்டெடுத்த கனவு பற்றிய விபரங்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் காண்போம்.

20 comments:

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மிக அழகான பதிவிற்கு ஜசாக்கல்லாஹ் சகோதரி. தொடருங்கள். உங்கள் கல்வி அறிவை மென்மேலும் அதிகரிக்க இறைவன் போதுமானவன்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

சிராஜ் said...

சலாம் சகோ பானு,

ஸம்ஸம் கிணறு பற்றி பல அறியாத தகவல்கள் தந்ததற்கு நன்றி. வறண்ட பாலைவனத்தில் பல நூற்றாண்டுகளாக வற்றாமல் வரும் அந்த நீர் நிச்சயம் இறைவனின்
அத்தாட்சிகளில் உள்ளது தான்.

VANJOOR said...

Zamzam water: the power drink

One of the miracles of Zamzam water is its ability to satisfy both thirst and hunger.

One of the Companions of the Prophet said that before Islam, the water was called "Shabbaa'ah" or satisfying.

It was filling and helped them nourish their families.

After Islam, this powerful ability to quench thirst and fill stomachs remained.

Prophet Muhammad said: "The best water on the face of the earth is the water of Zamzam; it is a kind of food and a healing from sickness."

According to the Muslim collection of Hadith, Abu Dharr al-Ghifari, a Companion (Sahabi),

noted that when he first arrived in Makkah during the early days of Islam,

not only did he satisfy his hunger and thirst but he survived only on Zamzam water for a whole month.

More recently, in the last few decades, scientists have collected samples of Zamzam water and they have found certain peculiarities that make the water healthier, like a higher level of calcium.

Zamzam water: a cure for sickness

Apart from its ability to serve as satisfying food and drink, Zamzam water's health benefits are also commended.

Prophet Muhammad (peace and blessings be upon him and his family) said it was a healing from sickness.

This is why pilgrims to Makkah to this day collect it in bottles to bring for relatives and friends back home who are ill.

Prophet Muhammad (peace and blessings be upon him and his family) used to carry Zamzam water in pitchers and water skins back to Madinah.

He used to sprinkle it over the sick and make them drink it.

Wahab Ibn Munabbah, who was from the second generation of Muslims, said 'I swear by Him in whose possession my life is, Allah Ta'ala will relieve the person of all illnesses who drinks Zamzam to his fill and will also grant him good health.'

Zamzam water and Hajj pilgrimage

During Hajj and Umra, pilgrims are recommended to drink Zamzam water to their fill to quench their thirst.

They also continue the tradition of bringing it back for family and friends.

For example, despite tight US laws forbidding the import of foreign liquids and fruits,

there is an exception made for pilgrims returning from Makkah, who bring water of the Zamzam home for loved ones.
.

suvanappiriyan said...

சலாம் சகோ! சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்.

ஆமினா said...

சலாம் பானு


மாஷா அல்லாஹ்...

அருமையான ஆக்கம்! பல தெரியாத விஷயங்கள் பலரும் அறியும் படி செய்திருக்கிறீர்கள்

ஜஸக்கல்லாஹ் ஹைர்

ஹுஸைனம்மா said...

சும்மாவே சவூதியில் பாலாறும் தேனாறும் ஓடுதுன்னு வயிறெறிஞ்சுகிட்டு இருக்கவங்களுக்கு இந்தக் கிணறு கூடகொஞ்சம் எரிய வைக்கும். அவங்ககிட்ட “தண்ணியக் குடி, ஸம்ஸம் தண்ணியக் குடி”ன்னு சொல்லணும்!! :-)))))

ஹுஸைனம்மா said...

சும்மாவே சவூதியில் பாலாறும் தேனாறும் ஓடுதுன்னு வயிறெறிஞ்சுகிட்டு இருக்கவங்களுக்கு இந்தக் கிணறு கூடகொஞ்சம் எரிய வைக்கும். அவங்ககிட்ட “தண்ணியக் குடி, ஸம்ஸம் தண்ணியக் குடி”ன்னு சொல்லணும்!! :-)))))

போதிவர்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
உலகம் முழுவதும் எங்கு தோண்டினாலும் கிடைக்கும் நீரைக்கூட உங்கள் மக்காவில் ஒரே ஒரு கிணறில் மட்டுமே கொடுத்திருக்கிறது இயற்கை ஏனெனில் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள். எனது இந்த பின்னூட்டத்திற்கும் பதில் உரைப்பதற்கு உங்களிற்கு வல்லமை தரமாட்டார் உங்கள் அல்லா. ஆதலால் இந்த பின்னூட்டமும் வெளியே தெரியாமல் மறைக்கப்படும்.
பாடம் புகட்ட மீண்டும் வருவான் போதிவர்மா.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

நல்லதொரு ஆக்கம் சகோதரி, இறைவன் உங்களின் பணிக்கு நற்கூலி வழங்குவானாக!.

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும்..சகோஸ்,
சம்சம் நீரினை எவ்வளவு குடித்தாலும் நமக்கு திகட்டவில்லையோ அதுபோல
சம்சம் பற்றி எவ்வளவு படித்தாலும், செய்திகள் நமக்கு திகட்டாமலும், புதுமையாகவும், சுவாரச்சியமாகவும் இருக்கிறது...
இச்செய்தியை படித்தவுடன் போதிவர்மா , "பேதிவர்மா" ஆயிட்டாரு ....!!!

enrenrum16 said...

@ Aashiq Ahamed

வாலக்கும் ஸலாம் உங்கள் பாராட்டிற்கும் துஆவிற்கும் மனமார்ந்த நன்றி சகோ.

enrenrum16 said...

ஸம்ஸம் நீர் பற்றிய மேலதிக தகவல்கள் அருமை... ஸஹாபா ஒருவர் 40 நாட்கள் ஸம்ஸம் நீர் மட்டுமே அருந்தி உயிர்வாழ்ந்ததாக ஹதீஸ் பார்த்தேன்... பெயர் தெரிந்தால் அடுத்த பதிவில் இடுகிறேன்.

அமெரிக்கா ஸம்ஸம் தண்ணீரை மட்டும் அனுமதிக்கும் தகவல் - இது மாதிரி அமெரிக்காவே அனுமதிக்கிறது என்று சொன்னால்தான் 'ஓ..அமெரிக்காவே அனுமதிக்கிறதா...அப்படியெனில் இதில் ஏதோ விஷயமிருக்கிறது' என்று மற்றவர்கள் நம்பியே ஆகவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

தகவல்களை எங்களோடு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.

enrenrum16 said...

@சிராஜ்... வாலைக்கும் ஸலாம். /வறண்ட பாலைவனத்தில் பல நூற்றாண்டுகளாக வற்றாமல் வரும் அந்த நீர் நிச்சயம் இறைவனின்
அத்தாட்சிகளில் உள்ளது தான்./ இதே வார்த்தைகளை என் கணவரும் நேற்று கூறியது நினைவிற்கு வருகிறது. கருத்துக்கு மிக்க நன்றி

enrenrum16 said...

வாலைக்கும் ஸலாம். ஆமினா, சுவனப்பிரியன்

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

enrenrum16 said...

ஸலாம் ஹுஸைனம்மா../அவங்ககிட்ட “தண்ணியக் குடி, ஸம்ஸம் தண்ணியக் குடி”ன்னு சொல்லணும்!! /.இதுபற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் சொல்கிறேன்.

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

enrenrum16 said...
This comment has been removed by the author.
enrenrum16 said...

வாலைக்கும் ஸலாம் செய்யது இப்ராம்ஷா, நாஸர்... தங்கள் வருகைக்கும் துஆவிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வருகை தந்து கருத்து தெரிவியுங்கள்.

enrenrum16 said...

வாலைக்கும் ஸலாம் போதிவர்மன்

/உலகம் முழுவதும் எங்கு தோண்டினாலும் கிடைக்கும் நீரைக்கூட உங்கள் மக்காவில் ஒரே ஒரு கிணறில் மட்டுமே கொடுத்திருக்கிறது இயற்கை./ இயற்கை கொடுத்திருக்கா...? :((.... ஓ..கே... அப்படியே வச்சுக்கிட்டாலும் அது ஏன் முஸ்லிம்களின் புனித இல்லமான கஃபா அமைந்திருக்கும் மக்காவில் கொடுக்க வேண்டும்? உலகில் தோன்றிய எத்தனையோ படைப்பினங்கள் மத்தியில் கால மாற்றத்தினால் எத்தனையோ முன்னேற்றங்கள்/பாதிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்க, உலக முஸ்லிம்களால் மட்டும் அருந்தப்படும் ஸம்ஸம் நீர் மட்டும் அதன் தன்மையில் குன்றாமல் ஏக இறைவனிடத்தில் கையேந்தும் மக்களுக்காக ஏன் அள்ள அள்ள குறையாமல் சுரந்து கொண்டிருக்கிறது? சிந்தியுங்கள்... ஒவ்வொரு அணுவையும் படைத்தது இயற்கை அல்ல..அதைப் படைத்த இறைவனே என்று உணருங்கள்.

/ஏனெனில் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்./ மனிதன் உயிர்வாழ அடிப்படைத் தேவையே குடி தண்ணீர்... அதையும் சாதாரணமாக அல்லாமல் பலவித சத்துக்கள் நிறைந்ததாக வழங்கப்பட்டிருக்கும் முஸ்லிம்கள் எந்த வகையில் சபிக்கப்பட்டவர்கள்?

/இந்த பின்னூட்டத்திற்கும் பதில் உரைப்பதற்கு உங்களிற்கு வல்லமை தரமாட்டார் உங்கள் அல்லா. ஆதலால் இந்த பின்னூட்டமும் வெளியே தெரியாமல் மறைக்கப்படும்./ சரியாகச் சொன்னீங்க... இறைவனின் உதவின்றி என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதைஏற்றுக்கொள்கிறேன். இறையருளால் இந்த பின்னூட்டம் மட்டுமின்றி எல்லா பின்னூட்டத்திற்கும் கருத்து தெரிவித்து விட்டேன்.

/பாடம் புகட்ட மீண்டும் வருவான் போதிவர்மா./ இந்த மாதிரி டயலாக்ஸ் நிறைய கைவசம் வச்சிருக்கீங்க போல... இபடியெல்லாம் சொல்லக்கூடாது.. பயம்மா இருக்குல்ல....;))

அன்புடன் மலிக்கா said...

எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழனைத்தும் அனைத்தும் அறிந்தவன் அவனே! அவனின் ஆற்றலின்றி அணுவும் அசையாது.

ஜம் ஜம் என உலகம் அழியும் நாள்வரை ஊற்றெடுத்து பொங்கிக்கொண்டேயிருக்கும் இது இறைவன் முஃமீன்களுக்கு கொடுத்த அருட்கொடை..

enrenrum16 said...

ஸலாம் மலிக்கா... கண்டிப்பாக...உலகம் அழியும் வரை இறைநாடினால் நமக்காக இக்கிணறு ஊறிக்கொண்டேயிருக்கும். இதை பற்றி ஆச்சரியமும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மலிக்கா.