Saturday, March 26, 2011

வந்துட்டேன்..ஆனா வரலை ;)

என் வலைப்பூவில் புதிய பதிவுகள் தேடித் தேடி உங்க எல்லாரோட கண்களும் பூத்துப் போனதைப் பார்த்து எனக்கு மனசே கேட்கலை (?)...ம்ஹும்..அப்படியெல்லாம் சொல்லக்கூடாது... நீங்க தேடினது எனக்குத் தெரியும்...அதான் பதிவு போட ஓடி வந்தேன். (ஹி..ஹி..சமாளிப்பு எப்பூடி..?);)

எங்க வீட்டு பெரியதுரையைப் பற்றி சில பதிவுகள் போட்டிருக்கிறேன்..(இருக்கிற பதிவுகளே சிலதுதான்னு நீங்க சொல்றது எனக்கு கேட்கலை ;)) ...இனிமே சின்னத்துரையைப் பற்றியும் பதிவுகள் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ்... அதென்ன இவ்வளவு நாள் போட முடியாத பதிவு இனிமேல் மட்டும்? இறைவன் அருளால் என் சின்னத்துரை பூமியில் காலடி எடுத்து வைத்து இன்றோடு இரண்டு வாரங்கள் ஆகிறது(சின்னத்துரைதான்னு ஸ்கேன்ல பார்த்துட்டோம்ல;)). அவனுடைய ஈருலகு நல்வாழ்விற்கும் துஆ செய்யுங்கள்.

ஆகையினால் புன்னகை வலைக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கப்படுகிறது. ரொம்ப நல்லதுன்னு நீங்க நினைக்கிறதுக்குள்ள இன்னொன்னு சொல்லிடறேன்...என் வலையை மூட்டை கட்டி வைத்தாலும் உங்கள் வலைப்பூக்களுக்கு மட்டுமாவது அப்பப்ப வந்து பின்னூட்டி அட்டன்டன்ஸ் கொடுப்பேன் (ஏதோ சமூகத்துக்கு என்னாலான தொண்டு);)

இன்ஷா அல்லாஹ், கடையை...சாரி..வலையை மீண்டும் திறக்கும்போது மஹியோட தொடர்பதிவோடு தொடர்கிறேன்.

15 comments:

தம்பி கூர்மதியன் said...

எனக்கு தான் பஜ்ஜி..

தம்பி கூர்மதியன் said...

ஓ ரொம்ப சந்தோசம். வாழ்த்துகள்.. இப்ப தான் கொஞ்ச கொஞ்சமா ஒரு நட்பு உருவாச்சு.. படக்குனு அதுக்கு லீவா..??? சரி சீக்கிரமாய் வர வேண்டுகிறேன்.. அந்த சின்னதுரைக்கு வாழ்த்துக்கள்.. வாடா கண்ணா வா.. வந்து உலகத்த பாரு..

enrenrum16 said...

இப்பல்லாம் வடைன்னு சொல்றது போய் பஜ்ஜின்னு சொல்றதுதான் ஃபேஷனா?...

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி மதி... என் வலைப்பூவிற்குத்தான் சிறிதுநாள் விடைகொடுத்திருக்கிறேன்... நட்பூவிற்கு இல்லை... பின்னூட்டங்களில் நட்பூ இனிதே தொடரும்.

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... ஓ..புது வரவுக்கான லீவா? நானும்கூட இந்த பானு போனவழி தெரியலயேன்னு நினைத்துக் கொண்டிருந்தேன் :)) சந்தோஷம், உங்களுக்கும் குட்டிப் பயலுக்கும் வாழ்த்துக்கள்! :) ரெஸ்ட் எடுத்துட்டு பொறுமையா வாங்க பானு. பையன் பெயர், ஃபோட்டோ முடிந்தால் கொடுங்கள், பார்க்கலாம் :)

ஹுஸைனம்மா said...

இது வேற நடக்குதா? ரெஸ்ட் எடுக்காம? பிரம்பு எடுத்துட்டு வர்றேன்...

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் பானு.நன்கு ரெஸ்ட் எடுத்துவிட்டு மெதுவா வாருங்கள்.

மகி said...

உங்களுக்கும்,குட்டிப்பையனுக்கும் வாழ்த்துக்கள் பானு! டேக் கேர்!

அந்நியன் 2 said...

வாழ்த்துக்கள்,ரொம்ப சந்தோசம்.

Jaleela Kamal said...

நலமா பெரிய துரை பதிவு இனி தான் படிக்கனும்
என்ன வடை போய் இப்ப பஜ்ஜி ஆகிவிட்டதா?

enrenrum16 said...

வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அம்பலத்தார் said...

வாழ்த்துக்கள் ரெஸ்ட் எடுத்து மெதுவா வாருங்கள்

enrenrum16 said...

@ அம்பலத்தார்

வாழ்த்துக்கும் முதல் வருகைக்கும் மனமார்ந்த நன்றி.

அன்புடன் மலிக்கா said...

புது வரவே வருக சீக்கிரமாய் வந்து சந்தோஷங்களை பகிர.. வாழ்த்துகள்

PUTHIYATHENRAL said...

தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

VANJOOR said...

சுட்டியை சொடுக்கி படியுங்கள்

*******
ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1 மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம்.
********


.