Wednesday, March 2, 2011

அவனா?இவனா?

படிக்கும் பருவத்தில்
பதக்கங்கள் குவித்த போதும்
கைநிறைந்த சம்பளத்தில்-பல
கண்களை விரியச் செய்த போதும்
மனதிற்கேற்ற மங்கை
மனைவியாய் வாய்த்த போதும்
அவளளித்த தேவதையால்
எண்ணிலடங்கா இன்பங்களை
எளிதாய் எட்டிய போதும்
இறைவனை மறந்தான்;
தன்னையே மகிழ்ந்தான்;
பிஞ்சு உடலில் அனல்
வலிப்பாய் வெளியான போது
'கடவுளேஏஏஏஏஏஏஏஏஏ' என்ற
தன் அலறலால்
தன்னை உணர்ந்தான் முதன்முதலாய்.


மக்கா...இத கவிதைன்னெல்லாம் சொல்லி உங்களை நோகடிக்க மாட்டேன்... அப்புறம் மலிக்கா சண்டைக்கு வந்துடுவாங்க... இதையெல்லாம் கவிதைன்னு சொன்னா நாங்கள்லாம் ரூம் போட்டு யோசிச்சு எழுதறமே அது என்னன்னு கேட்டுடுவாங்க... அதுக்காக 'கட்டுரையை ஏன் இப்படி பிச்சு பிச்சு எழுதியிருக்க'ன்னுலாம் கேட்கக்கூடாது.. :( 

27 comments:

அரபுத்தமிழன் said...

அதுக்காக 'கட்டுரையை ஏன் இப்படி பிச்சு பிச்சு எழுதியிருக்க'ன்னுலாம் கேட்கக்கூடாதுன்னு ஏன் கேட்கக் கூடாது அப்படீன்னு கேட்கலாமா வேணாமா

அரபுத்தமிழன் said...

கடவுளேஏஏஏஏஏஏஏஏஏ' 'ஏன் இப்படிச் செய்தாய்' என்று கேட்க நினைத்திருக்கலாம். 'போதை வந்த போது புத்தியில்லையே
புத்தி வந்த போது சக்தியில்லைஏஏஏஏஏஏஏ' :)

ஜெய்லானி said...

தலைப்புதான் கொஞ்சம் இடிக்குது...!! எதுக்கும் ஒரு ரூம் போட்டு யோசிச்சிட்டு வரேன் ...!!

ஜெய்லானி said...

ஓஹ் குழந்தைக்கு ஜுரமா...????
ஒரு குழந்தையின் மனநிலை இன்னொரு குழந்தைக்குதான் தெரியும் ((நா என்னைய சொன்னேன் ஹி..ஹி.. ))

ஹுஸைனம்மா said...

கவிதை (அல்லது பிய்த்துப் போட்ட கட்டுரை) சொல்ல விழையும் முக்கியமான கருத்தை விட்டு, உங்கள் டிஸ்கி கவனத்தைத் திசைதிருப்புகிறது.


//ஜெய்லானி கூறியது...
தலைப்புதான் கொஞ்சம் இடிக்குது...//
தலைப்பை இப்படி வாசியுங்கள, புரியும்: அவனா? இ(றை)வனா?

ஹுஸைனம்மா said...

இப்ப டிஸ்கிக்கான பின்னூட்டம்: பதிவெழுத வந்துட்டா, கவிதையும் எழுதியே ஆகணும்னு கை அரிக்கத்தான் செய்யும். கவிதைங்கிற பேர்ல ஒண்ணு (ஒண்ணே ஒண்ணுதான் - அதுக்கு மேலே எங்களைச் சோதிக்கக்கூடாது) எழுதிட்டா, அதுக்கப்புறம் கவனம் மற்றதில திரும்பிடும். இது நார்மலானதுதான், புதுப் பதிவர்களுக்கு. (நாங்களும் எழுதினம்ல, அந்த அனுபவந்தான்!!) ;-)))

அந்நியன் 2 said...

நாட்டு நடப்பைத்தான் எழுதி இருக்கியே....

கவிதைக்கு ஏற்ற வரிகளே இவை,பணம் வந்ததும் நம் மனத்திற்கு தினம் விலங்கிடாவிட்டால் வாழ்க்கை நிலையற்றாதாகிவிடும்.

இறைவன் செல்வத்தை தருவதே சோதிப்பதர்க்குத்தான்.

வாழ்த்துக்கள் !

மகி said...

:)

பிச்சுப் போட்ட கட்டுரை..ம்ம்,நல்லா இருக்குங்க!

////
வழங்குக
@@@@@@@@@ காசா பணமா... நல்லதா ஒரு பின்னூட்டமும் ஓட்டும் போட்டுடுங்க....;)//// காசு பணமெல்லாத்தையும் விட ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகமுங்கோ! :)
ஓட்டுப்போட என்னிடம் அக்கவுண்ட் இல்லை,டோன்ட் மைண்ட்! ;)

முஹம்மத் ஆஷிக் said...

அஸ்ஸலாமு லிக்கும் வரஹ்...

'இறை சிந்தனை இயலாமையின் போதுதான் வருகிறது. அது எப்பொதும் இருக்க வேண்டும்' -என்று சொல்ல வருகிறீர்கள். நல்ல கருத்து சகோ. நன்றி.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ...

ம்ம்..கவிதையா...இது சகோ ஹுஸைனம்மா சொன்னதுமாதிரி,..ஆரம்பத்துல இப்டித்தா இருக்கும்..போக போக சரியாயிடும்..
அடிக்கடி கவிதை எழுத தோனும்,,ஏதாச்சும் ஒரு வார்த்தைய படிச்சா கூட டக்குன்னு மனசுல கவிதை வர்ரமாதிரி இருக்கும் ஆனா வராது...இது கவியோபோபியாவோட ஸ்டாடிங் ஸ்டேஜ்..இதோட கவிதை எழுதுரத பத்தின சிந்தனைய விட்டுடீங்கன்னா..தப்பிச்சீங்க..
அப்ப்பரோ ரெம்ப சிக்கலாயிடும்..இப்டித்தா என் ஃபிரண்டு ஒருத்தன்......

(ம்ம்..என்னால்லா சொல்லி கவிதை எழுதுரத தடுக்க வேண்டிதா இருக்கு,..எல்லாரும் கவிதை எழுதீட்டா..அப்ரோ நாம என்க போரது...ம்ம்.இதெல்லா ஆரம்பத்துலையே,இப்டி எதாச்சும் சொல்லி பயம்புருத்தி வைக்கனும்..)

ஆ..இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே,,கவிதை எழுதுனா வீட்டு தாழ்ப்பாள் லூஸாயிடுமாம்...

(இப்பையாச்சும் நிறுத்தாமையா போயிடுவாங்க..பாக்கலாம்..)

just kidding...

அன்புடன்
ரஜின்

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ...
முதல்ல போட்ட பின்னூட்டம் ச்சும்மா...
கவிதை உண்மையிலேயே நல்லா இருக்கு..வாழ்த்துக்கள்ஸ்..

தொடர்ந்து எழுதுங்க..இன்னும் சிறப்பாக..
தலைப்பு..எனக்கு புரியல..அதென்னமோ கவிதைய வுட்டு தனியா நிக்கிறமாதிரி இருக்கு..

நீங்க நெரைய யோசிச்சு தலைப்பு வச்சுருப்பீங்க..

ஓக்கே..

அன்புடன்
ரஜின்

enrenrum16 said...

@அரபுத்தமிழன்

/அதுக்காக 'கட்டுரையை ஏன் இப்படி பிச்சு பிச்சு எழுதியிருக்க'ன்னுலாம் கேட்கக்கூடாதுன்னு ஏன் கேட்கக் கூடாது அப்படீன்னு கேட்கலாமா வேணாமா/ நீங்க எப்டி கேட்டாலும் எனக்கு பதில் தெரியாது... ஹி..ஹி..

/கடவுளேஏஏஏஏஏஏஏஏஏ' 'ஏன் இப்படிச் செய்தாய்' என்று கேட்க நினைத்திருக்கலாம்./ கஷ்டம் வரும்போது மட்டுமில்லாமல் சந்தோஷத்தை இறைவன் தரும்போதும் இப்டி யோசித்தால் எந்நாளும் நலம்தானே?! :)

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

enrenrum16 said...

@ஜெய்லானி
/தலைப்புதான் கொஞ்சம் இடிக்குது...!! எதுக்கும் ஒரு ரூம் போட்டு யோசிச்சிட்டு வரேன் ...!!/ ரொம்ப யோசிச்சு அப்புறம் சந்தேகம் கேட்டுட்டீங்கன்னா எனக்கு பதில் சொல்லத் தெரியாது :(

/ஒரு குழந்தையின் மனநிலை இன்னொரு குழந்தைக்குதான் தெரியும் ((நா என்னைய சொன்னேன் ஹி..ஹி.. ))/... கரக்ட்... ரொம்ப வயசானவங்களை குழந்தைக்கு சமமாத்தான் இந்த உலகம் பார்க்குது...;)

enrenrum16 said...

@ ஹுஸைனம்மா
///ஜெய்லானி கூறியது...
தலைப்புதான் கொஞ்சம் இடிக்குது...//
தலைப்பை இப்படி வாசியுங்கள, புரியும்: அவனா? இ(றை)வனா? /

கரக்ட்டா புரிஞ்சிக்கிட்டீங்க... என் சார்பா விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி...

/பதிவெழுத வந்துட்டா, கவிதையும் எழுதியே ஆகணும்னு கை அரிக்கத்தான் செய்யும்./ மறுபடியும் கரக்ட்டா புரிஞ்சிக்கிட்டீங்க.... அனுபவசாலில்லா... அதான் புட்டு புட்டு வக்கிறீங்க.. ஹி..ஹி...

/கவிதைங்கிற பேர்ல ஒண்ணு (ஒண்ணே ஒண்ணுதான் - அதுக்கு மேலே எங்களைச் சோதிக்கக்கூடாது)/ அடுத்த பதிவு கூட கவிதைன்னு முடிவு பண்ணியிருக்கேன்... என்ன இப்டி சொல்லிட்டீங்க...ரொம்ப பயந்திட்டீஙகளோ??? சரி.. நேயர்களின் விருப்பத்தின் பேரில் கவிதை இடுகை சிறிது நாள்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது..:(

enrenrum16 said...

@ அய்யூப்

/நாட்டு நடப்பைத்தான் எழுதி இருக்கியே....

கவிதைக்கு ஏற்ற வரிகளே இவை,/ அடா...அடா...என்ன ஒரு பின்னூட்டம்... அப்படியே நானும் ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டா மாதிரி ஒரு ஃபீலிங்கு...

/பணம் வந்ததும் நம் மனத்திற்கு தினம் விலங்கிடாவிட்டால் வாழ்க்கை நிலையற்றாதாகிவிடும்.இறைவன் செல்வத்தை தருவதே சோதிப்பதர்க்குத்தான்.வாழ்த்துக்கள் !/ கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

enrenrum16 said...

@ மஹி

/பிச்சுப் போட்ட கட்டுரை..ம்ம்,நல்லா இருக்குங்க! // ரொம்ப நன்றி மஹி.

/ காசு பணமெல்லாத்தையும் விட ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகமுங்கோ! :) /..கண்டிப்பா.. நீங்க என் இடுகைக்கு ஒரு வரி பின்னூட்டம் போட்டாலே என் மனதில் ஆயிரம் சந்தோஷம் எட்டிப் பார்க்குது.. (அய்யயோ கணக்கு இடிக்குதுன்னு ஜெய்லானி ரூம் போட்டுடக்கூடாதே!:( )

enrenrum16 said...

@ஆஷிக்
/அஸ்ஸலாமு லிக்கும் வரஹ்...

'இறை சிந்தனை இயலாமையின் போதுதான் வருகிறது. அது எப்பொதும் இருக்க வேண்டும்' -என்று சொல்ல வருகிறீர்கள். நல்ல கருத்து சகோ. நன்றி/

வ அலைக்கும் ஸலாம் வரஹ்..

ஹப்பாடா.. நீங்களும் க.பு. (கரக்ட்டா புரிஞ்சிக்கிட்டீங்க..). கவிதை எழுதறத விட அதை மற்றவங்களுக்கு புரியுற மாதிரி எழுதறதுதான் கஷ்டம்னு நல்லா புரிஞ்சிக்கிட்டேன்... ஹி..ஹி.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

enrenrum16 said...

@ ரஜின்

/ம்ம்..என்னால்லா சொல்லி கவிதை எழுதுரத தடுக்க வேண்டிதா இருக்கு/.. ஐ...இப்டியெல்லாம் சொல்லிட்டா விட்டுடுவேனா...இந்த வார்த்தைகள் என்னை மேலும் மேலும் கவிதை எழுத தூண்டுது... (எப்பூடி... நாங்கள்லாம் பாஸிட்டிவ்வா எடுத்துப்போம்ல..ஹி..ஹி)

/இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே,,கவிதை எழுதுனா வீட்டு தாழ்ப்பாள் லூஸாயிடுமாம்.../ ..நிஜமாவா... கவலையில்லையே.. வீட்டுக்கு திருடன் வந்தா என் கவிதைல ஒண்ணை எடுத்து விட்டு அவனையும் லூஸாக்கிடுவோம்ல...

/(இப்பையாச்சும் நிறுத்தாமையா போயிடுவாங்க..பாக்கலாம்..)/ இந்த இடத்துல நீங்க த.பு. (தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க)... ஹா...ஹா

enrenrum16 said...

@ ரஜின்

/முதல்ல போட்ட பின்னூட்டம் ச்சும்மா.../...ரிப்பீட்டு...

/கவிதை உண்மையிலேயே நல்லா இருக்கு..வாழ்த்துக்கள்ஸ்../ நன்றிஸ்

/தலைப்பு..எனக்கு புரியல..அதென்னமோ கவிதைய வுட்டு தனியா நிக்கிறமாதிரி இருக்கு..
நீங்க நெரைய யோசிச்சு தலைப்பு வச்சுருப்பீங்க../அதெப்டி க.பு.? மற்ற வரிகளை விட தலைப்புக்குத்தான் ரொம்ப யோசிச்சேன்... ஹி..ஹி..

எம் அப்துல் காதர் said...

// சரி.. நேயர்களின் விருப்பத்தின் பேரில் கவிதை இடுகை சிறிது நாள்களுக்கு ஒத்தி வைக்கப் படுகிறது..:( //

கரக்ட். இதையும் நீங்க ஹுசைனம்மா சொன்னதை போல் கரக்ட்டா புரிஞ்சிக்கிட்டீங்க!! ஆனா அழாம நல்ல பிள்ளையா இன்னொரு கவிதை எழுதிபுட்டு, பொட்டிய கட்டி வச்சிபுட்டு, ...ச்சும்மா கலக்கலா... அசத்தலா ஒரு பதிவ போட்டுட்டு எனக்கு தெரியப்படுத்தனும் ஆமா சொல்லிபுட்டேன்!!

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும்

கவிதை நல்லா இருக்கு.நல்ல கருத்து.வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

//கட்டுரையை ஏன் இப்படி பிச்சு பிச்சு எழுதியிருக்க'ன்னுலாம் கேட்கக்கூடாது.. :(// ஒரு பாதுக்காபூனர்வுடன் இந்த வரிகளை எழுதி விட்டீர்களோ?இருந்தாலும் உங்கள் பிச்சுப்போட்ட கவிதை ரசிக்கும் படியாகத்தான் இருக்கு பானு.இனியும் தொடருங்கள்.படிக்க ஆர்வமாக இருக்கிறோம்.

enrenrum16 said...

@ அப்துல் காதர்
ஹ்..ம்..நான் கவிதை எழுதறத தடுக்க உள்நாட்டு சதியே நடக்குது...இந்த சதியை என் மதியால் முறியடித்து என் விதியை வென்று காட்டுவேன்...(அப்ப்டின்னெல்லாம் வசனம் பேச ஆசைதான்... இருந்தாலும் இந்த கவிதைக்கு கிடைக்கிற ரியாக்ஷன பார்த்துட்டு முடிவு பண்ணலாம்னு நினைச்சேன். கவிதை எழுதவா வேண்டாமான்னு இல்ல ;) ;) உடனே அடுத்த கவிதை போடுறதா இல்ல கொஞ்சம் ஆறப்போடலாமான்னு (எப்பூடி..))... அடுத்த கவிதை ரெடியாகிற வரை எல்லாரும் பிழைச்சுபோங்க... :)

enrenrum16 said...

வ அலைக்கும் ஸலாம் ஆயிஷா

உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஆயிஷா...

enrenrum16 said...

வாங்க ஸாதிகா அக்கா

உங்கள் ஆர்வத்துக்கு கொஞ்சமாவது தகுதியோட அடுத்த கவிதை தோணியதும் பதிவிடுறேன். உங்க பாராட்டுக்கு மிக்க நன்றிக்கா.

Mahi said...

என்றென்றும் 16,இந்த தொடர்பதிவுக்கு அழைத்திருக்கேன். தொடருங்கோ! :)

http://mahikitchen.blogspot.com/2011/03/blog-post.html

ஏதோ என்னால முடிஞ்சது!! ;)

தம்பி கூர்மதியன் said...

எங்க எங்க எங்க.. ஆளையே காணோம்..