Monday, January 24, 2011

திறந்து பார்..

இந்த வலன்டைன்ஸ் வலன்டைன்ஸ் டே ஒண்ணு வருஷத்துக்கு ஒருநாள் வரும் பாருங்க.... அந்த நாளுக்கு கொஞ்ச முன்னாடியே பள்ளி, கல்லூரி மாணவிகள் (மாணவங்க என்ன பண்ணுவாங்க நிஜம்மா தெரியாது:( )ஒரு தினுசா நடக்க (நடக்கன்னா காலால நடக்கறதில்லீங்க... பிஹேவியர சொன்னேன்)ஆரம்பிப்பாங்க... அவங்களுக்குள்ளேயே கிசுகிசுன்னு ஏதாவது பேசி சிரிச்சுக்கறது... பல சமயங்கள்ல ஒண்ணும் பேசாமலேயே சிரிக்கிறது... கர்ர்ர்ர்ர்...இவங்க நடந்துக்கறத பார்த்தா நாம ஏதோ பேக்கு மாதிரி இருக்கோமோன்னு நமக்கே ஒரு ஃபீலிங்கா இருக்கும்... அவங்க சிரிக்கும்போது நாம சிரிக்காம பைத்தியக்காரி (நோட் பண்ணுங்க.. சிரிக்கிறவங்க நார்மலா தெரிவாங்க... சிரிக்காத நாம் பைத்தியக்காரி மாதிரி தெரிவோம்) மாதிரி ஒரு குற்றவுணர்ச்சியோட உக்காந்திருப்போம்.:(

அதுவும் அந்த வலன்டைன்ஸ் டே வந்துச்சு...அவ்வளவுதான்... உலகத்துல என்னமோ அவங்க மட்டுமே இருக்கிறா மாதிரி ஒரு நினப்புல மிதப்பாங்க... அன்னிக்கு அவங்ககிட்ட நாம பேசறதே வேஸ்ட்... என்ன சொன்னாலும் கேக்காது...கேட்டாலும் சம்பந்தா சம்பந்தமில்லாம எதையாவது உளர்றது...உதாரணத்துக்கு... 'எடி... இந்த ஆஸிட்ல எதை ஆட் பண்ணினா பச்ச கலர்ல மாறும்?'னு கேட்டொம்னு வைங்க... 'இல்லடி..இந்த பச்ச ட்ரஸ் எங்க அப்பா வாங்கிக் கொடுத்தாங்க... அதான் இன்னிக்கு போட்டுட்டு வந்தேன்'னு சொல்வாங்க... நமக்குத் தலையும் புரியாது..வாலும் புரியாது... நாம என்ன கேட்டோம்னே மறந்துடும்....:(

இப்படித்தான் நான் கல்லுரியில படிக்கும்போது அதே வலன்டைன்ஸ் டே வந்துச்சு... நாமளும் அதே வெகுளித்தனத்தோடயே (நம்புங்க...:)) இருந்தோம். ஆனா நம்மள மாதிரி எல்லாரும் பேக்காவே இருப்பாங்களா? எங்க குரூப்ல ஒரு பொண்ணுக்கு ஒரு ஸீனியர் பையன் கிஃப்ட் கொடுத்தான். எங்க காலேஜ் வாத்தியாரெல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்டு... ஸ்ட்ரிக்டு... பசங்க கூட பொண்ணுங்க பேசவே கூடாது.... வகுப்பு முடியுற சமயம் பெண்களுக்கு 5 நிமிஷம் முன்னாடியே பெல் அடிச்சுடுவாங்க... பொண்ணுங்க ரெஸ்ட் ரூமுக்குபோனதுக்கப்புறம் லாங் பெல் அடிப்பாங்க... அப்பதான் பசங்க வகுப்பறையை விட்டு வெளிய வரணும்.

அவ்வளவு கண்டிப்புக்கு நடுவுலயும் இந்த பரிமாற்றமெல்லாம் நடக்குது...:() எவ்வளவு தெனாவட்டு... இவங்கெல்லாம் செய்றத பார்த்தா நமக்குத்தான் பகீர்னு இருக்கும்.அதுனால கிஃப்ட் கொடுத்த பையன்கிட்ட அவ ஒண்ணும் சொல்ல முடியாம கொடுத்த வேகத்தில அவளும் வாங்கிட்டு வந்துட்டா...
முதல்ல ஆங்கிலப்பாடம்..வாத்தியார் எங்களுக்கு முன்னாடியே வந்து காத்திட்டிருக்காங்க... இந்த வாத்தியாருக்கு ஒரு பழக்கம்... வகுப்பு எடுக்க ஆரம்பிக்குமுன்ன கொஞ்சம் வாழ்க்கை தத்துவ வகுப்பெடுப்பாங்க... நமக்கு அந்த நேரம் ஏதோ ஓய்வு நேரம் மாதிரி... அடுத்த வகுப்புக்கு படிக்க வேண்டியத அப்பதான் படிக்கத் தோணும்... இந்த மாதிரி வேலைய செய்றதுக்கு அந்த 10 நிமிஷத்த உபயோகப்படுத்திக்குவோம்.

அன்னிக்கு எங்க தோழிக்கு வந்த கிஃப்ட் கையில இருந்ததால அந்த பொன்னான நேரத்தை அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க உபயோகப்;)படுத்திக்கலாம்னு முடிவு செஞ்சாச்சு... கிஃப்ட் வாங்கினவ வேற பெஞ்ச்... மீதி நாங்க அஞ்சு பேரும் கிஃப்ட கையில வச்சுக்கிட்டு திறக்கவா வேண்டாமான்னு பட்டிமன்றமே நடத்திட்டுருக்கோம்... ஒருத்தி திறக்கக்கூடாது..வாத்தியார்கிட்ட மாடினோம் தொலஞ்சோம்னு பூச்சாண்டி காட்றா... நானும் இன்னொரு தோழியும் திறந்தேயாகணும்னு ஒத்தக்காலில் பெஞ்சில (ஹி..ஹி) உக்காந்துட்டிருக்கோம்... ரெண்டு நிமிஷமாயிடுச்சு... இன்னும் கிஃப்டைத் திறந்த பாடில்லை.

திடீர்னு வாத்தியார் "திறந்து பார்..திறந்து பார்" னு சொல்றாங்க... நிமிர்ந்து பார்த்தா எங்க அஞ்சு பேரையும் பாத்துட்டிருக்காங்க... அப்பா.... பகீர்னு ஆயிடுச்சு... ஆகா... மாட்டிக்கிட்டோம்... இன்னிக்கு அவ்வளவுதான்... அஞ்சு பேரும் எந்திரிக்க எத்தனிக்கிறோம்...அவங்க கேஷுவலா அடுத்த பக்கமும் பார்த்து அதே "திறந்து பார்" னு கன்டின்யு பண்றாங்க... அப்பதான் ந்ம்ம மண்டைக்கு புரியுது... அவர் ஏதோ மனசைத் திறந்து பார்னு ஏதோ தத்துவத்தை பொழிஞ்சுட்டு இருந்திருக்கார்னு... அப்பா... போன உசுரு திரும்பி வந்துது... அந்த பிப்ரவரி 14 மட்டும் எந்த தப்புமே பண்ணாம பேயறஞ்ச மாதிரி நாங்க அஞ்சு பேரும் திரிஞ்சது வேற கதை... (நாங்கெல்லாம் ரொம்ப வெகுளி... சின்ன அதிர்ச்சியைக் கூட தாங்க முடியாத இதயம் படச்சவங்க...:() ...)


நல்லா யோசிச்சு  நல்ல
பதிலைச் சொல்லுங்க....
 (எவ்வளவு பெரிய அருவாளை உங்க கழுத்துல போட்டாலும் சரி... நாம கஷ்டப்பட்டு டைப் பண்ணினத மொக்கைனு நம்ம வாயால சொல்லிடக்கூடாதுன்னு ஒரு தீர்மானத்தோட தான் ப்ளாகுலகத்துக்கே வந்தோம்ல..;)))அப்பாடா...  இந்த பதிவைப் போட்டதுக்கப்புறந்தான் வலைப்பூல எழுதறதுக்கு எனக்கு தகுதி வந்தா மாதிரி ஒரு பீலிங்கு;)..நீங்க என்னா நினைக்கிறீங்க? ?? 

15 comments:

அரபுத்தமிழன் said...

'திறந்து பார்' மட்டும் சொன்னதால் தப்பித்தார்.அதனோடு 'திரவியம் கிட்டும்'னு சொல்லியிருந்தால் ஏதாவதொரு 'ஆனந்தா'வாயிருப்பார். :)
(சும்மா லுலுயாயிக்கு . ஏதாவது கமெண்டெனுமேன்னு கமெண்டியதால்)

சரி சொ.க.நொ.கதைக்குப் பதிலாக 'என்றும் குறும்புடன்' அல்லது
'என்றென்றும் அன்புடன்' என்று வைக்கலாமே.

வலையுகம் said...

சகோ. அவர்களுக்கு
நல்ல இயல்பான எழுத்து நடை
தொடந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

enrenrum16 said...

@அரபுத்தமிழன்

ஆத்தீ... இந்த தலைப்புல இப்பூடி ஒரு வில்லங்கமிருக்கா... நமக்கு அப்படியெல்லாம் தோணலீங்க.... ;).... அந்த வாத்தியாரும் ரொம்ப நல்லவங்க.... எப்பவும் IAS,IPS பரீட்சை,அவற்றில் எப்படி பங்கு பெற்று வெற்றி கொள்வது பற்றியெல்லாம் அடிக்கடி மாணவர்களிடயே பேசுவார்... நாம தான் இந்த காதில் அந்த காதில் விட்டாச்சு... (அப்பாடா நாடு தப்பித்தது...அப்ப்டீங்கிறீங்க?)

பெயரை உடனடியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது....;))

enrenrum16 said...

@ஹைதர் அலி...

உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி... பாராட்டைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சியெடுக்கிறேன்...

கோலா பூரி. said...

சுவாரசியமான எழுத்து. நிறைய எழுதவும்.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ..

நீங்க பளீச்சுன்னு பல்பு வாங்குன மேட்டர...இப்டி ஈகோ இல்லாம பகிர்ந்துக்கிறதுக்கும் ஒரு பெரியமனசு வேணும்...

என்ன நா சொல்ரது சரிதானே...

அன்புடன்
ரஜின்

enrenrum16 said...

@கோமு

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமு.. அடிக்கடி வாருங்கள்.

enrenrum16 said...

Salam Rajin.
//நீங்க பளீச்சுன்னு பல்பு வாங்குன மேட்டர...இப்டி ஈகோ இல்லாம பகிர்ந்துக்கிறதுக்கும் ஒரு பெரியமனசு வேணும்.../// இப்டியெல்லாம் பல்பை டப்புனு போட்டு உடச்சிடக்கூடாது... ஃப்யூஸ் போயிடும்ல அவ்வ்வ்வ்வ்...

enrenrum16 said...

@ Rajin

Pls. chk https://www.blogger.com/comment.g?blogID=4256128568236632193&postID=5547143992024610124

Mahi said...

//பெயரை உடனடியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது....;))

27 ஜனவரி, 2011 12:11 pm// ஓக்கை,சீக்கிரம் மாத்துங்கோ!

கடேசில கிப்ட் பாக்ஸைத் திறந்துபாத்தீங்களா இல்லையான்னு சொல்லவே இல்ல? :)

அஸ்மா said...

//இந்த பதிவைப் போட்டதுக்கப்புறந்தான் வலைப்பூல எழுதறதுக்கு எனக்கு தகுதி வந்தா மாதிரி ஒரு பீலிங்கு;).. நீங்க என்னா நினைக்கிறீங்க???//

நான் நினைக்கிறது என்னன்னா... உங்க ஃபீலிங்கு தப்பு, செம தகுதியோடதான் சந்திர மண்டலத்துல.. ச்சே... வலைப்பூவுல காலடி எடுத்து வெச்சிருக்கீங்கன்னு (நினைக்கல), உறுதியா முடிவே பண்ணிட்டேன் :))

enrenrum16 said...

மஹி...
ஆமா... ரெஸ்ட்ரூமிற்குப் போனதுக்கப்புறம் திறந்து பார்த்ததாக ஞாபகம்.. என்ன இருந்துச்சுன்னு மறந்துடுச்சு...:(

enrenrum16 said...

அஸ்மா...நல்ல முடிவெடுத்திருக்கீங்க... இனி அந்த முடிவை நீங்களே நினச்சாலும் மாத்திடாதீங்க....;)

வேண்டாம் வரதட்சணை said...

nice

ஆத்மா said...

மிக அருமையாக உள்ளது...பதிவு எழுதும் விதம் மிகவும் பிடிக்கும் வண்ணமாக உள்ளது....
தொடர்ந்தும் எழுதுங்கள்