Sunday, January 9, 2011

குழந்தைப் பேச்சு-2!

பிறந்த குழந்தைகள் பேசியதாக இஸ்லாமிய வரலாற்றில் கூறப்படும் இரண்டு ஆதாரங்களைப் பார்த்தோம். இப்போ மூன்றாவது ஆதாரம்:


ஒரு தாய் தன் குழந்தைக்கு பாலூட்டி கொண்டிருக்கும்போது ஒரு மனிதர் ப்ட்டாடையணிந்தவராக விலையுயர்ந்த ஒட்டகத்தில் செல்வதைப் பார்க்கிறாள். அப்பொழுது அவள் இவ்வாறு இறைவனிடம் ப்ரார்த்திக்கிறாள். 'இறைவா! என் குழந்தையையும் இவரைப்போல் ஆக்குவாயாக!'. அதைக் கேட்ட அக்குழந்தை பால் குடிப்பதை நிறுத்திவிட்டு 'இறைவா! தயவுசெய்து என்னை இம்மனிதனை போல் ஆக்கிவிடாதே' என்று சொல்லிவிட்டு பால் குடிப்பதைத் தொடர்கிறது.


அத்தாய் பின் சிறிது நேரத்தில் ஒரு அடிமைப்பெண் கொடுமைப்படுத்தப்பட்டு தெருவில் இழுத்துச் செல்லப்படுவதைக் காண்கிறாள். கண்டவுடன் 'இறைவா! என் குழந்தையை இவள் போல் ஆக்கிவிடாதெ!' என்று வேண்டுகிறாள். உடனே அக்குழந்தை பால் குடிப்பதைய நிறுத்திவிட்டு 'இறைவா! என்னை இந்த பெண்ணைப் போல் ஆக்குவாயாக!' என்று சொல்லிவிட்டு திரும்பவும் பால் குடிக்கிறது.


இதைக் கேட்ட அத்தாயானவள் ' உன்னைப் பணக்காரனாக ஆக்க இறைவனிடம் வேண்டும்போது மறுத்த நீ இந்த அடிமையைப் போல் ஆக வேண்டுகிறாயே! ஏன்' என்று தன் குழந்தையிடம் கேட்கிறாள். அதற்கு அக்குழந்தை ' பட்டாடை உடுத்தி வந்த மனிதன் மிகவும் மோசமான குணங்களைக் கொண்டவன். அதனால் இறைவனிடம் அந்த மனிதனைப் போல் ஆவதிலிருந்தும் பாதுகாவல் தேடினேன். அந்த அடிமைப் பெண் மேல் மக்கள் அவள் செய்யாத அவதூற்றைக் கூறினார்கள். அவள் மிகவும் நல்ல குணங்களைக் கொண்டவள். அதனால் அவளைப் போல் நல்ல குணங்களை எனக்குத் தருமாறு இறைவனிடம் வேண்டினேன்' என கூறுகிறது.

இந்த ஹதீஸின் மூலம் கிடைக்கப் பெறும் அறிவுரை:

மனிதர்களை அவர்களின் தோற்றத்தைக் கொண்டு எடைப் போடக்கூடாது.


இந்த மூன்று ஆதாரங்களுமே இஸ்ராயீல் மக்களிடையே நிகழ்ந்தவை என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4 comments:

enrenrum16 said...

test

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ..

ஹதீஸ்கள் புதிதாக கேள்விப்படுபவையாக இருக்கிறது...
அறிவிப்பாளர் பெயர் குறிப்பிடும் போது..ஹதீஸ் கிரந்தங்களின் பெயர்களும்,முடிந்தால ஹதீஸ் எண்களும் கொடுத்துவிடுங்கள்..

அதற்கு முன் அவை ஸஹீஹான ஹதீஸா என அறிந்து கொள்ளுங்கள்..
ஏனென்னில்..இட்டுக்கட்டப்பட்ட,மற்றும் பலகீனமான ஹதீஸ்கள் உள்ளன...

மாரல் ஆஃf தி ஸ்டோரி குறிப்பிட்டது சிறப்பு..

வாழ்த்துக்கள் பல உங்களுக்கு..

அன்புடன்
ரஜின்

enrenrum16 said...

@ ரஜின்

நம்மால் நம்பமுடியவில்லை என்பதற்காக ஸஹீஹான ஹதீஸ் இல்லை என்று ஒதுக்கிவிடக்கூடாதல்லவா... ஹதீஸ் எண் சொல்லாத என் தவற்றை சுட்டிக்காட்டியதற்கு நன்றி..

ஸஹீஹ் புகாரியில் பார்க்கவும்... எண்கள்: 1206,3435

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ..
தாங்கள் கொடுத்த ஹதீஸ் எண்களுக்கான ஹதீஸ் புஹாரியில் காணக்கிடைக்கிறது..நன்றி..

/நம்மால் நம்பமுடியவில்லை என்பதற்காக ஸஹீஹான ஹதீஸ் இல்லை என்று ஒதுக்கிவிடக்கூடாதல்லவா.../

உண்மைதான் சகோ...கருத்தை ஏற்கிறேன்.

/ஹதீஸ் எண் சொல்லாத என் தவற்றை சுட்டிக்காட்டியதற்கு நன்றி../

தவறொன்றும் இல்லை சகோ..

அன்புடன்
ரஜின்