என்னைக் கண்டால் என் பையன் பயப்படுவான்னு சொல்லியிருந்தேன் இல்லையா.... (அப்படியான்னெல்லாம் கேக்கக்கூடாது...) அவனைப் பார்த்து நான் பயந்த நிகழ்வுகளில் ஒண்ணைப் பத்தின பதிவுதானிது.
எங்கவீட்டு அய்யாதுரை (என் ரங்க்ஸ்க்கு நான் வச்ச பேரு..பெரியவன் பெரியதுரை,சின்னவனுக்கு சின்னதுரை) டீவிக்குள்ள (No.. no questions) போயிருந்த சமயம் ...நான் கிச்சனில் பிஸி... பெரியவன் சத்ததையே காணோமேன்னு திடீர்னு ஞாபகம் வர ரூமில் எட்டிப் பார்த்தால் ஒரு மாஸ்கிங் டேப்பை எதிலோ ஒட்டி வேஸ்ட் செய்து கொண்டிருந்தான்... ரொம்பவும் மும்முரமாக...
சரி...இப்ப கேட்டால் தரமாட்டான்னு... நைசாக பேசி அவனை ரூமிற்கு வெளியே அனுப்பியாச்சு...அவன் வருவதற்குள் டேப்பை கப்போர்டின் மேல் வச்சிடலாம்னு வைத்து கொண்டிருக்கும்போதே திரும்பி வந்துவிட்டான். அவனுக்கு தெரியாமல் வைத்துவிடவேண்டுமே என்று அவசர அவசரமாக கப்போர்டின் மேல் நான் வைப்பதை அவன் பார்த்துவிட... ஆ ஆ ஆ என்று அவன் அலற(பொதுவா அவனுக்கு எதுவும் வேணுன்னா அழ மாட்டான்..அலறல்தான்) ஏற்கனவே இருந்த பதற்றத்தில் அவன் அலறலைக் கேட்டு நான் அலற ....கை தவறியதால் கப்போர்டின் மேல் காலங்காலமாக அவனுக்குத் தெரியாமல் ஒளித்து வைத்த அவனுடைய பொருட்கள் எல்லாம் கீழே விழ ... என்னவோ ஏதோவென்று அய்யாதுரை ஓடி வர ... என் இதயம் அன்னிக்கு துடித்த துடிப்பு இருக்கே... அப்பா.. இப்பவும் ஞாபகமிருக்கு.
எல்லாவித தீமையிலும் ஒரு நன்மை இருக்கிறது என்ற குர் ஆன் வசனத்தை நான் எப்போதும் அதிகம் விரும்பி நம்புவேன்...சரி...இந்த நிகழ்ச்சியில் யாருக்கு என்ன நன்மைன்னு கேக்கறீங்களா? என் பையனுக்குதாங்க...அன்னிக்கு வரை பூச்சாண்டி எடுத்துட்டு போயிட்டான்னு அவனை கஷ்டப்பட்டு நம்ப (ஒளிச்சு) வச்சிருந்த பொருளெலாம் கப்போர்ட் மேலிருந்து விழுந்தத பார்த்து அவனுக்கு சந்தோஷத்தைப் பார்க்கணுமே...ஹ்..ம்... அவன் என்னைப் பார்த்த பார்வையைப் பார்த்தா ...நீதான் அந்த பூச்சாண்டியான்னு கேக்கற மாதிரி இருந்துச்சு...
இதிலயிருந்து நாம தெரிஞ்சிக்க வேன்டியது என்னன்னா ((இதுக்கெல்லாம் ஒரு மாரலா...இதெல்லாம் ரொம்ப ஓவர்னு திட்டாதீங்க...பையனுக்கு ஏதாவது ஒரு அட்டு கதை சொல்லும்போது கூட அதில ஒரு நீதி சொல்லிச் சொல்லிப் பழக்கமாயிடுச்சு...) எந்த விஷயத்தையும் பதற்றமில்லாம பொறுமையா அதுவும் யாருக்கும் பயப்படாம செய்யணும்.
7 comments:
நல்ல காமெடிதான் போங்க.. எல்லா வீட்டிலும் இந்த பூச்சாண்டி மேலதான் பழியா...? :)))
ஆமா அஸ்மா...நம்ம எல்லாருக்கும் உதவி செய்ற பூச்சாண்டி எங்கிருந்தாலும் நல்லாருக்கணும்... உங்க என்ட்ரிக்கு நன்றி அஸ்மா.
சூப்பர் காமெடிங்க துரையம்மா!(வீட்டுல துரைங்க இருக்காங்கன்னா,நீங்க துரையம்மாதானே?:))
யார் யாரைப்பார்த்து பயப்படறாங்க என்று எனக்குத் தெளிவாஆஆஆஆத் தெரிந்துவிட்டது! ஹாஹ்ஹா!
பானு அக்கா, இந்த அவார்டை பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
Be prepared!! :))))))
http://mahikitchen.blogspot.com/2010/12/blog-post_22.html
ஹஹா
நல்ல கருத்து உள்ள குட்டி கதை
பதட்டபடாம
உங்க ப்ளாக் வாசிக்கணும் சொல்றீங்க...
வாங்க மகி... ஐ...துரையம்மா...இதுகூட நல்லா இருக்கே....
//யார் யாரைப்பார்த்து பயப்படறாங்க என்று எனக்குத் தெளிவாஆஆஆஆத் தெரிந்துவிட்டது! ஹாஹ்ஹா!// ஹி..ஹி... புரிஞ்சிடுச்ச்ச்சா?!
//பானு அக்கா, இந்த அவார்டை பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.//
அவார்டு தர்றீங்களா... ஓசியில தர்றேன்னு சொன்னா எதைவேணா வாங்கிக்க ரெடியா இருக்கோம்ல...என்ன என்னைய அக்காவாக்கிட்டீங்க... என்னை விட நீங்க 10 வயது கம்மியா இருந்தாலும் பரவாயில்ல.. பானு மட்டும் போதுமே மஹி...
ஹாய் சிவா...பதிவைப் படிச்சு நல்லா புரிஞ்சிக்கீட்டீங்களே... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Post a Comment