Monday, December 13, 2010

தெரியும்...ஆனா தெரியாது

பாளையாங்கோட்டையில் இங்கிலீஷ் மீடியத்தில் படிச்சுட்டு சும்மா பந்தாவா காலேஜிலயும் சேர்ந்தாச்சு. காலேஜ் வகுப்பு தோழிகள் (தமிழ் மீடியத்தில் படிச்சவங்க) ஆங்கிலத்தில் ஏதாவது டவுட்டுன்னா என்கிட்ட கேப்பாங்க... எனக்கு தெரியாத வார்த்தைன்னாலும் எப்படியாவது அந்த வார்த்தை இடம்பெற்ற வாக்கியத்தை, முடிஞ்சா பாராவையே படிச்சு ஒரு வழியா அந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்லுவேன். 'அப்படியா'னு சந்தேகம் கேட்டவ இன்னும் குழம்பி போறத பத்தியெல்லாம் கவலைப்பட்டது கிடையாது.எப்படியோ, தெரியாதுன்னு சொல்லாம, சமாளிச்ச திருப்தி.


டிகிரி முடிச்சு சில மாதங்களில் வேலையிலயும் சேர்ந்தாச்சு அதுவும் அப்பா வேலை பார்த்த வெளிநாட்டுல. கொலீக்ஸ் கூடயும் சரளமா பேசி பழகியாச்சு. ஆனா ஃபோன் அடிச்சா (official calls) வயித்தில கரைக்கும் பாருங்க புளி ...தமிழே மறந்துடும்... அந்தளவுக்கு ஃபோன்ல பேச பயம். ஏதாவது ஃபைல் அல்லது தகவல் கேட்டு யாராவது ஃபோன் பண்ணினா தெரிஞ்ச மேட்டரா இருந்தாலும் சொதப்பிடுவேன். தெரியாத மேட்டர்னா...அவ்வளவுதான்... அத சொல்லி இத சொல்லி நான் குழம்பி...தகவல் கேட்டவங்களையும் குழப்பி ஒரே சொதப்பல்ஸ் ஆஃப் செப்பல்ஸ் தான். தெரியாததை தெரியாதுன்னு சொன்னா எதும் திட்டிடுவாங்களோன்னு ரொம்ப பயம்.  இப்படியே ஒன்னு, ரெண்டு வாரம் ஓடிடுச்சு.


அப்பதான் என் பக்கத்து ஸீட்ல இருந்த ஒரு ஸ்டாஃப் அவங்களுக்கு வந்த ஃபோன் கால்ஸ் அட்டன்ட் பண்ணும்போது ஒரு விஷயம் கவனிச்சேன். அவங்களுக்கு தெரியாத விஷயத்தை, தெரிந்த விஷயத்தைத் தெரியுன்னு சொல்றத விட, ரொம்ப கேஷுவலா தெரியாதுன்னு சொல்வாங்க.


அப்பதான் எனக்கு உறைச்சுது. தெரிந்த விஷயத்தை தெரியுன்னு சொல்றதுக்கு தைரியம் தேவையில்ல. தெரியாத விஷயத்த தெரியாதுன்னு சொல்றது தான் தைரியசாலி, புத்திசாலிக்கு :)) அழகுன்னு. அதிலருந்து எனக்கு தெரியாத விஷயத்த யாராவது என்கிட்ட கேட்டா 'எனக்கு தெரியாது... கொஞ்சம் டைம் கொடுத்தீங்கன்னா தகவல் சேகரிச்சுட்டு சொல்றேன்' அப்படீன்னு கொஞ்சம் சொல்ல ஆரம்பிச்சேன். அவங்க சரின்னு சொன்னா டேட்டா கலக்ட் பண்ணி தெரிவிக்கறது இல்லாட்டி ரொம்ப நல்லதுன்னு நினைச்சுக்கிறது. அதுக்கப்புறம் அந்த ஆபீஸ்ல ஒரு மூணு வருஷம் பழந்தின்னு கொட்டை போட்டு, அதுக்கப்புறம் கொட்டை போட இடமில்லாததால வேலைய விட்டுட்டேன்;)).

12 comments:

அஸ்மா said...

வாங்க என்றென்றும்16! புத்திசாலியான நீங்க தைரியசாலியாகவும் ஆன‌ கதை நல்லா இருக்கு. அதுசரி... உங்க பேரைச் சொன்னா 'பாட்டி'ன்னா கூப்பிடப் போறோம்? :)) இப்படி 'என்றென்றும்16'ன்னு கஷ்டமான பெயரா வெச்சிருக்கீங்களே..?

enrenrum16 said...

அஸ்மா, உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.என் பேர் பானுங்க...

Mahi said...

ஐ..நீங்க யாருன்னு கண்டுபிடிச்சுட்டேனே! :)

enrenrum16 said...

வாங்க மகி...//நீங்க யாருன்னு கண்டுபிடிச்சுட்டேனே! :)// அ... நிஜமாவே கண்டுபிடிச்சிட்டீங்களா? இல்ல போட்டு வாங்கறீங்களா?

Mahi said...

நெசமாத்தேன் சொல்றேன்! ஆனா நீங்க இப்படி கேட்டதும் கொஞ்சம் டவுட்டா இருக்கு.
//என் பேர் பானுங்க...// அப்புறம் உங்க ஆங்கிலப் படிப்பையும் பார்த்து 'அவங்களா' இருக்குமோன்னு ஒரு தாட்! ;)

சரி,உங்க பேர் N-ல ஸ்டார்ட் ஆகுமா? 3 பசங்களா உங்களுக்கு? ஆமாம்னா நான் கரெக்ட்டு,இல்லைன்னா நீங்க கரெக்ட்டு! ஹிஹி!

அஸ்மா said...

பானு...? எனக்குத் தெரிந்த 'பானு'கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் நீங்களும் ஒண்ணா இருக்குமோன்னு ஒரு நினைப்பு. மஹி வேற கண்டுபிடிச்சதா சொன்னவுடன் யோசனை அதிகமாயிடுச்சு :-) அதுசரி, என் முதல் கமெண்ட் தமாஷாதானே எடுத்துக்கிட்டீங்க? கோபமெல்லாம் இல்லியே..? :)

enrenrum16 said...

ஹாய் மகி....என் பேர் Nல ஆரம்பிக்காது....மூணாவது குழந்தைக்கு இனிதான் ட்ரை பண்ணனும்...ஹி..ஹி..

(அப்பாடா)

enrenrum16 said...

ஸலாம் அஸ்மா... உங்க முதல் பின்னூட்டத்தின் மூலம் தான் உங்களிடம் முதன் முதலாக அறிமுகமே ஆனது. அதனால் இந்த பானு உங்களுக்கு புது தோழி. கோபமெல்லாமில்லை...பாட்டியென்றதும் சிரிப்புதான் வந்தது.

அஸ்மா said...

//உங்க முதல் பின்னூட்டத்தின் மூலம் தான் உங்களிடம் முதன் முதலாக அறிமுகமே ஆனது. அதனால் இந்த பானு உங்களுக்கு புது தோழி//

சந்தோஷம், புது தோழி :)

//கோபமெல்லாமில்லை... பாட்டியென்றதும் சிரிப்புதான் வந்தது//

அப்பாடா... நான் நினைத்தது நடந்துவிட்டது. அதாங்க நீங்க சிரிச்சது :-) தேங்க்ஸ்!

Mahi said...

சட்டுப்புட்டுன்னு அடுத்த பதிவைப் போடுங்க பானு! :)

enrenrum16 said...

அட...அதுக்குள்ள என் ப்ளாக்குக்கு இப்படி தீவிர ரசிகர்களா? என் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க கூடிய விரைவில் பதிவு போடப்படுகிறது.(எஸ்கேப்பூ)

Jaleela Kamal said...

ஹா தெரியும் ஆனா தெரியாது.

பானு வா நானும் நீங்க வரும் போதெல்லாம் யாரு யாருன்னு பெயர் தெரியாமல் குழம்பி கொண்டு இருந்தேன்.
மீதி பதிவுகளை பிறகு வந்து படிக்கிறேன்.
அவார்டுக்கு ஓவ்வொருத்தருக்கா, சோர் சொல்லி வரேன் இங்கு வந்தா அத மாட்டிட்டிட்டீங்க ரொம்ப சந்தோஷம்,