Thursday, December 9, 2010

நானும் என்டர் தட்டிட்டேனுங்க

என்னாடா..என்டர் தட்டிட்டாளா? ஏன் இவ்வளவு நாளா என்டர் பட்டனைத் தேடிட்டு இருந்தாளான்னெல்லாம் யோசிக்காம ப்ளாக் உலகிற்கு வருக வருகன்னு ரெண்டு வார்த்தை சொன்னீங்கன்னா ஏதோ நானும் ப்ளாக் கடலுக்குள்ள நீந்திக்களிக்கலாம்.


அனுபவங்கள்னு பட்டியல் போடுற அளவுக்கெல்லாம் நான் பெரிய அனுபவசாலி கிடையாது... அப்பாம்மா பொத்தி பொத்தி வளர்த்துட்டாங்க.... ஆனாலும் கணவருக்கும் பிள்ளைக்கும் என்னைக் கண்டால் கொஞ்சமாவது பயம் வர்ற மாதிரிதான் டீல் பண்றது....அப்ப டைட்டில்ல மட்டும் 'சொந்த கதை நொந்த கதை'ன்னு போட்டிருக்குன்னு பார்க்கறீங்களா?...அது ப்ளாக் உருவாக்கும்போது இருந்த மூடுல அப்படி போட்டாச்சு...


அப்ப என்னதான் எழுதப் போறேன்னு கேட்டா ...சாரி ....எனக்கே தெரியல...அருமையான மொக்கைகள் கொண்ட ப்ளாக் அப்படீன்னு யாராவது போட்டி நடத்துனா அதுல(யாவது) சேரலாம்ல..


ஷ்...அப்பா...அறிமுக பதிவு போடுறதுக்குள்ளாவே பசிக்க ஆரம்பிச்சுடுச்சு...அதுனால இத்தோடு விடை பெறுகிறேன்..டா டா.

9 comments:

ஹுஸைனம்மா said...

வாங்க, வாங்க.. பதிவுலகக் கடல்ல மூழ்கி முத்தெடுக்க வந்த மாமணியே வருக!! (நாங்க இந்தக் கடல்ல தத்தளிச்சிகிட்டிருக்கோம்கிறது தனிக்கதை)

//கணவருக்கும் பிள்ளைக்கும் என்னைக் கண்டால் கொஞ்சமாவது பயம் வர்ற மாதிரிதான் டீல் பண்றது//
ஹி..ஹி.. ஸேம் பிளட்டாயிருக்கீங்க!! இந்த ஒரு தகுதியே போதும், பதிவுக்கடல்ல டபால்னு குதிக்க!!
:-))))))

எந்த ஊர் நீங்க? எங்கிட்டு இருக்கீங்க?

யக்கா, தயவுசெஞ்சு வேர்ட் வெரிஃபிகேஷனை எடுத்துடுங்க.

Jaleela Kamal said...

வாங்க வாங்க
சொந்த கதை நொந்த கதைய எழுதினாலே தினம் தினம் ஒரு பதிவு போடலாம்.

இந்த கடலில் குதிச்சிங்க, அப்பற வெளியே போகவே மனசு வராது.

Mahi said...

வருக,வருக! ப்ளாக் கடலில் நீந்திக் களித்து,முத்துக்களும் எடுக்க வாழ்த்துக்கள்!
(என்ன முத்துக்கள்னு கேக்காதீங்க,அது ஒரு ஃப்ளோ-ல வந்த வாக்கியம்.:))

விரைவில் அடுத்த நீச்சலை எதிர்பார்க்கிறோம்,சீக்கிரம் வாங்க என்றென்றும் 16!

enrenrum16 said...

நன்றி ஹுஸைனம்மா... உங்க வரவேற்பைப் படிக்கும்போது அப்படியே நீங்க எனக்கு மாலை போட்டு வரவேற்கிற மாதிரி காட்சி தெரியுது...உங்களுக்கு ரொம்ப பக்கத்தில தான் இருக்கேன்...

நான் உங்களுக்கு தங்கச்சிதானுங்க...சொல் சரிபார்ப்பை நீக்கிட்டேன்.நன்றி.

enrenrum16 said...

ஜலீலாக்கா...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்ற நல்லெண்ணத்தில் நீங்க சொலியிருக்கிற ப்ளாகருக்கான டிப்ஸ் எல்லாம் வாசிச்சிருக்கேன்...நன்றிக்கா..

enrenrum16 said...

ஹாய் மகி... short and sweetஆ எழுதிட்டீங்க.... அடுத்த நீச்சலுக்கான பயிற்சிகள் நடந்திட்டுருக்கு. நன்றி Mahi.

Unknown said...

வாங்க, வாங்க..

ஆமினா said...

முதல் பதிவே கலக்கலா இருக்கு....

சீக்கிரமே பிரபல பதிவராகிடுவீங்க!

Anisha Yunus said...

////கணவருக்கும் பிள்ளைக்கும் என்னைக் கண்டால் கொஞ்சமாவது பயம் வர்ற மாதிரிதான் டீல் பண்றது//
ஹி..ஹி.. ஸேம் பிளட்டாயிருக்கீங்க!! இந்த ஒரு தகுதியே போதும், பதிவுக்கடல்ல டபால்னு குதிக்க!!
:-))))))//

இதுக்கு ரெக்கமண்டேஷன் வேறயா??
நடத்துங்க...நடத்துங்க...