தலைப்பில் ஈஸியானதுன்னு எழுதியிருக்கேனே தவிர, இது மிக மிக மிக ஈஸியான செய்முறை... இறால் சுத்தம் செய்யும் நேரம் போக அரைமணிநேரத்தில் முடிந்துவிடும்.
இறாலில் உள்ள சத்துக்கள்:
இறாலில் அதிகமாக கல்சியம், அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. இறால்களில் அதிகப்படியான கொழுப்பு காணப்படுகிறது. இந்த கொழுப்பானது நல்ல கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்பு வகையைச் சேர்ந்ததால், இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் (விக்கி ) . செலெனியம், புரதம் நிறைந்த மற்றும் விட்டமின் B12,D, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்,இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தனாகம்,தாமிரம் நிறைந்த நல்ல சத்தான உணவாகும். (http://aarokyam.blogspot.com)
ஓக்கே...இனி தேவையான பொருட்கள்:
இறால் - 25 - 30
வெங்காயம் - 2
தக்காளி - 2
மிளகாய் - 1
எலுமிச்சை - பாதி
மிளகாய்த்தூள் - 1 டே.ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1 டே.ஸ்பூன்
கருவேப்பிலை, கொத்தமல்லியிலை - சிறிது
தேங்காய் - கால் முறி அரைத்தது
உப்பு - தேவைக்கு
செய்முறை:
1. பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய் மற்றும் கருவேப்பிலை போட்டு வதக்கவும்.
2. வெங்காயம் பாதி வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
3. தக்காளியும் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
4. தக்காளி நன்கு குழைந்ததும் மிளகாய்த்தூள் சேர்க்கவும். அனைத்தையும் ஒரு நிமிடம் நன்கு வேக விடவும்.
5. பிறகு பாதி எலுமிச்சை பிழியவும். உப்பு இரண்டு ஸ்பூன் சேர்க்கவும்.
6. ஒரு நிமிடம் கழிந்ததும் இறாலைச் சேர்க்கவும். 15 - 20 நிமிடங்களில் இறால் வெந்துவிடும்.
7. பிறகு தேங்காய் விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
8. பிறகென்ன சாதம், ரசத்துடன் சேர்த்து ஒரு பிடி பிடிக்க வேண்டியதுதான்.

இது வரை சமையல் குறிப்புகளைப் படிக்க மட்டுமே செய்திருக்கிறேன்... முதல் குறிப்பிது..... எதொவொண்ணு மிஸ் ஆகற மாதிரியே ஃபீலிங்...... ஆனா எதுன்னுதான் தெரியல.....(குறிப்பில் உப்பு சேர்த்துட்டேன்..நன்றி ஹுஸைனம்மா) ஒக்கே..இனி ஜலீலாக்கா பாடு...ஏன்னா இதை ஜலிலாக்காவின் பேச்சிலர்ஸ் ஃ பீஸ்ட் ஈவெண்ட்டிற்காக அனுப்புகிறேன்.
16 comments:
//எதொவொண்ணு மிஸ் ஆகற மாதிரியே ஃபீலிங்...... ஆனா எதுன்னுதான் தெரியல.....//
உப்பு!!
(நான் எவ்வளவோ பரவாயில்லை போலருக்கே!!) :-)))))
ஆஆஹா...உப்பு எழுத மறந்திட்டனோ? ஓக்கே....சேர்த்திடறேன்..நன்றி ஹுஸைனம்மா
//Anonymous has left a new comment on your post "ஈஸி இறால் குழம்பு":
WHY THIS KOLAVERI//
உங்களுக்கு இது கொலைவெறியா தெரிஞ்சுதுன்னா செய்யாதீங்க... இத சாப்பிட்டு நாங்க எல்லாரும் நல்லாத்தான் இருக்கோம், இறையருளால்....
Thanx for visiting...come again:)))(varuvinga??)
Wow. Elumishai oothi seiythathillai.. Naaga puli serpoom. Next time ippadi try panni parkuren. Ennaku prawn endral romba pidikum..
பாயிஸா....இறால் சாப்பிட்டால் சிலருக்குச் சூட்டினால் வயிற்றுவலி வரலாம். அதைத் தடுக்க எலுமிச்சை சேர்ப்போம். சூடும் குறையும்..புளிப்புச் சுவையும் கிடைக்கும். கருத்துக்கு நன்றிப்பா.
எல்லாவற்றையும் செய்த பின் குழம்பை சிறிது வற்ற வைத்து எடுத்தால் இன்னும் சுவையாக இருக்கும்
தேங்காய் கொஞ்சம் அதிகமாக சேர்த்த்டாலும் சுவை அதிகமாக இருக்கும்......
ரொம்ப அருமையான குறிப்பு ,
என் ஈவண்டுக்கு அனுப்பியமைக்கு மிக்கநன்றி.
மீதியும் இன்றைக்குள் போட்டு விட்டால் நல்லது.
பாயிஸா....இறால் சாப்பிட்டால் சிலருக்குச் சூட்டினால் வயிற்றுவலி வரலாம். அதைத் தடுக்க எலுமிச்சை சேர்ப்போம்.//அடேங்கப்பா...எத்தனை பெரிய விஷயத்தினை சொல்லிட்டீங்க.உண்மையில் இது எனக்கு தெரியாது.வயிற்றுவலிக்கு பயந்து இறால் சாப்பிடாமல் பல சமயம் தவிர்ப்பேன்.இனி இருக்கவே இருக்கு எலுமிச்சை.
பரவாஇல்லை.ஜலீலா மலைகளையே அசைத்து பார்த்துட்டாங்க...
@ஆத்மா..
ஹி..ஹி.. நல்ல வற்றவைத்து எடுத்தால் சுவை உண்மையில்ல் நன்றாக இருக்கும்... ஆனா...ஆனா.. .எல்லாருக்கும் போதாது.:)) வருகைக்கும் அருமையான கருத்துக்கும் நன்றிப்பா.
@ஜலீலாக்கா
அக்கா.... சமையல் குறிப்பு எழுதும் ஆர்வத்தைத் தூண்டிய உங்களுக்கு நான்தான் நன்றி சொல்லணும் :))
miithiyai poodamudiyalakkaa...sorry :(
@ஸாதிகாக்கா
அய்யய்யோ... என்ன பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டீங்க.... ரொம்ப நன்றிக்கா.... அக்கா... வயிற்றுவலி பிரச்சினை இருந்தால் எலுமிச்சை பிழிந்து சாப்பிடுங்கள்...இருப்பினும் முதலில் சிறு அளவு சாப்பிட்டு முயற்சி செய்ங்க...:))
ஒன்று தான் போஸ்ட் செய்து இருக்கீங்க மீதி இரண்டு எங்கே??
இங்கு போஸ்ட் பண்ணலையா??
ஒகே
பரவாயில்லை
jaleela akka... pls check mail :)
http://samaiyalattakaasam.blogspot.com/2013/01/blog-post_3.html
Post a Comment