Saturday, December 22, 2012

தோசையம்மா தோசை...

வெளிநாடுகளில் குடும்பத்துடன்  இருப்பவர்களை விட தனியாக இருக்கும் அநேக மக்கள், என்னைப் பொறுத்தவரை, ஹோட்டல்களுக்கு அதிகம் செல்வதில்லை.


அதிகம் பார்த்தால் பேச்சிலர்ஸ் குழம்பு வீட்டில் செய்து கொண்டு குபூஸ், பரோட்டா, நாண் போன்றவற்றை கடையில் வாங்கிக் கொள்வர். மைதாவில் செய்யப்படும் இவ்வுணவுகளை ஓரளவிற்கு குறைத்துக் கொள்ளலாம் - கோதுமை, அரிசிமாவு தோசை போன்ற எளிய உணவுகளைச் செய்யப் பழகிக் கொண்டால்.


அரிசிமாவு தோசைக்கு மாவையும் கடைகளில் தான் வாங்கிக் கொள்ள வேண்டிய நிலையிலிருக்கின்றனர். ஆனால் கோதுமை தோசை எளிமையாக வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.

கோதுமை மாவில் உள்ள சத்துக்கள்:

கார்போஹைட்ரேட், நார்ச் சத்து, மெக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், ஃபோலிக் அமிலம், தைமின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. ரிபோஃப்ளோவின், புரதம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம் ஆகியவை ஓரளவும்... குரோமியம், கால்சியம் மிகக் குறைந்த அளவும் இருக்கின்றன. கோதுமை மாவில் செய்யப்படும் உணவுகள் மெதுவாகத்தான் ஜீரணமாகும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் எண்ணெய் சேர்க்காமல் சுக்கா ரொட்டியாகச் சுட்டுச் சாப்பிடலாம். சாப்பிட்டதும் நன்றாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் (http://balajipriyan.blogspot.com/2012/05/blog-post.html)

ஓக்கே...இனி தேவையான பொருட்கள்:


கோதுமை மாவு - 2 டம்ளர் (கிட்டத்தட்ட 400கி)
தண்ணீர் - 1 1/2 டம்ளர் 
உப்பு - 1 ஸ்பூன் 

தாளிக்க:

வெங்காயம் - 1 (மீடியம்)
தக்காளி - 1 (மீடியம்)
மிளகாய் - 1
கருவேப்பிலை, கொத்தமல்லியிலை - சிறிது


செய்முறை:
கோதுமை தோசை செய்ய மாவில் ஒன்றரை டம்ளர் தண்ணீரை முதலிலேயே சடாரென்று ஊற்றிவிடவும். சிறிது சிறிதாக ஊற்றினால் கட்டிகள் ஆகிவிடும். உப்பையும் போட்டு நன்றாக கலக்கி விடவும். இப்போது தேவைக்கு மீதி தண்ணீரையும் ஊற்றி வைக்கவும்.


கடுகு,உளுந்து தாளித்து வெங்காயம்,தக்காளியைப் போட்டு வதக்கவும். வதங்கியதும் பொடியாக நறுக்கிய மிளகாய், கருவேப்பிலை, மல்லியிலை போட்டு சிறிது வதக்கவும்.  மாவில் சேர்த்து கலக்கி இப்படி மொறுமொறுவென சுட்டெடுத்தால் பரோட்டா தோற்றுவிடும். சத்துக்கு சத்துமாச்சு. வீட்டிலேயே செய்ததுமாச்சு.



தொட்டுக்கொள்ள கறிகுழம்பானாலும் சரி.... தேங்க்காய்ச் சட்னியானாலும் சரி... சுவை அருமையாகயிருக்கும். அரிசிமாவு தோசை போல் அல்லாமல் கணக்கின்றி தாராளமாகச் சாப்பிடலாம்.


இதை ஜலிலாக்காவின் பேச்சிலர்ஸ் ஃ பீஸ்ட் ஈவெண்ட்டிற்காக அனுப்புகிறேன்.

5 comments:

Mahi said...

Nice Dosai...I won't make even the tempering Banu! Uppu-maavu-thanni - mix n make Dosai! ;)

Unknown said...

Thakkali poothu dosai seithathu illai.. Ithu romba simple la iruku.. Try pannuvoom...

enrenrum16 said...

ரொம்ப நேரநெருக்கடியில் நானும் அவ்வப்போது தாளிக்காமல் செய்திருக்கிறேன்... ஆனால் தாளித்தால் தனி சுவைதான் இல்லையா மகி?

enrenrum16 said...

தக்காளி சேர்த்து பாருங்க.... இன்னும் நல்லாயிருக்கும்,faiza :)

cookbookjaleela said...

மிக அருமையான சத்தான தோசைக்கு மிக்க நன்றி