தினமும் செய்திதாளைப் பார்த்தால் குறைந்தது ஒரு திருட்டு செய்தியோ அல்லது திருடனைப் பற்றி செய்தியோ வந்திருக்கும். அதைப் படித்ததும் எங்கே நமக்கும் அது போல் அனுபவம் (அதாவது நம் உடைமைக்கும் அது போல் திருட்டு) நடந்திடுமோன்ற பயத்தில் கொஞ்ச நாளைக்கு நம்ம நிம்மதி திருட்டு போய்டும் :( அதுவும் நம் கற்பனை குதிரைக்கு கேட்கவே வேண்டாம்... வீட்டில் தனியா இருக்கும்போது ஒரு சின்ன சத்தம் கேட்டுச்சு...அவ்வளவுதான்... அந்த மாதிரி சமயங்கள்ல கொஞ்சம் தைரியத்தை வரவழச்சுட்டு எல்லா அறைகளையும் செக் பண்ணிட்டு நேரா போனை எடுத்து (தெரிஞ்சவங்க) யாருக்காவது ப்ளேடு போட ஆரம்பிச்சுடுவேன் ;)... பயம் பறந்துடும்... நாலு நல்ல விஷயங்களை அவங்களோட பகிர்ந்திட்ட மாதிரியும் இருக்கும் ;)
சில நாட்களுக்கு முன் நாளிதழில் வாசகர் கடிதத்தில் ஒருவர் தன் வீட்டில் நடந்த நூதன திருட்டைப் பற்றி எழுதியிருந்தார். அவருடைய மனைவி காலை 9 மணிக்கு வீட்டில் தனியே இருந்திருக்கிறார். நல்லா தூங்கிட்டு... தூக்கத்திலயும் அந்த அம்மா கொஞ்ச உஷாராத்தான் இருப்பாங்க போலிருக்கு... வீட்டில் யாரோ நடமாடுற சத்தம் கேட்டு முழிச்சிருக்காங்க... ஒரு ஆள் அவங்க இருந்த அறைக்கு எதிர் ஆறைக்குள்ள நுழையறத பார்த்திருக்காங்க... அப்பா... எனக்கு வாசிக்க வாசிக்க பக் பக்குனு ஆயிடுச்சு... அப்ப உங்களுக்கு?
அவங்க நல்ல நேரம் திருடன் அவங்க அறைக்குள்ள நுழையாம அவங்க குழந்தைகள் அறைக்குள் போயிருக்கான். அத பார்த்ததும் இந்த அம்மா தன் அறையைப் பூட்டிட்டு அவங்க பக்கத்தில இருந்த போனில் அவங்க கணவருக்கு விஷயத்த மெல்ல சொல்லியிருக்காங்க... அவர் உடனே போலீஸுக்கு தகவல் சொல்லியிருக்காங்க... அதுக்கப்புறம் இந்தம்மா சத்தம் போட்டாங்கன்னும் தன் கடிதத்தில் எழுதியிருந்தார். திருடனைப் பிடித்ததைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.
திருடன் வீட்டு லாக்கை உடைத்துவிட்டு வந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். என்னைப் பொறுத்தவரை இந்த மாதிரி சமயத்தில் அந்த அம்மா அறையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குள் இருந்ததே கொஞ்சம் ஆபத்தானதுதான். வீட்டு லாக்கையே உடைத்தவனுக்கு அறையின் லாக்கை உடைக்க வெகு நேரம் ஆகாது. அவன் அறியாதபடி அவர் வெளியே சென்றிருக்க வேண்டும்.
பில்டிங் செக்யூரிட்டியின் கவனக்குறைபாடுதான் இதில் முதல் தவறு. புதியதாக ஒருவர் கட்டிடத்தில் நுழையும்போது அவனைக் கொஞ்சம் விசாரித்திருந்தால் அவன் வந்த வழியே சென்றிருப்பான்.
வாசகர் குறிப்பிட்டிருந்த காரணமும் கவனத்தில் வைக்க வேண்டிய ஒன்றுதான். அதாவது அவருடைய வீட்டில் டீவி சத்தமோ மற்ற பேச்சு சத்தமோ கேட்காததும் ஆளில்லாத வீடு என நினைத்து திருடனை வீட்டில் நுழையச் செய்திருக்கலாம்.
அனுபவம் தந்த பாடத்தில் அவர் தந்த தீர்வும் நல்லதாகப் படுகிறது. அதாவது வீட்டு கதவு லாக் தவிர்த்து ஒரு தாழ்ப்பாளும் வைத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பில்லை என்றிருந்தார்.
ஆனால் இதிலும் என் மூளைக்கு ரெண்டு குறை தோணுது : (
1. அலுவலகம்/பள்ளி முடிந்து வரும் கணவர்/குழந்தையிடம் சாவி இருந்தாலும் வீட்டினுள் இருப்பவர் போய் கதவைத் திறக்கும் வரை அவர் வெளியே காத்திருக்க வேண்டும்.
2. தாழ்ப்பாள் போட்ட சமயத்தில் வீட்டினுள் தனியாக இருப்பவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் வெளியே இருந்து யாரும் காப்பாற்ற சிறிது சமயமெடுக்கும்.
என்ன பண்றது... கொலை, கொள்ளை போன்ற பெரிய இழப்புகளைத் தவிர்க்க இது போன்ற சின்ன சின்ன அசௌகரியங்களைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அதெல்லாம் சரி...வீட்டைப் பூட்டிட்டு குடும்பத்தோடு வெளியூர் போகும்போது என்ன பண்றதுன்னு தானே நினைக்கிறீங்க... வேறு வழியில்லை... வீட்டிலிருக்கும் நகை,பணத்தை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிவிட்டு செல்வதைத் தவிர வேறு ஒண்ணும் செய்ய முடியாது :(
என் சந்தேகம் தான் தீர்ந்த பாடில்லை. வீட்டு லாக்கை உடைக்கும் வரை அவன் யார் கண்ணிலும் படவேயில்லையா/யாருக்கும் கேட்கவேயில்லையா? :(
இந்த கடிதத்தைப் படித்ததும் செய்திதாளில் முன்பு படித்த மற்றொரு சம்பவமும் ஞாபகம் வந்துச்சு. பெண் ஒருவர் தன் குழந்தையுடன் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்க்கும் போது வீட்டு லாக் உடைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் உஷாராகி மெதுவாக வீட்டினுள் எட்டிப் பார்த்தால் ஒரு பெண் அவர் அறையிலிருந்த பீரோவை உடைத்து கொள்ளையடித்துக் கொண்டிருந்திருக்கிறாள். இவர் கொஞ்சமும் பயப்படாமல் அவளின் பின்னே சென்று அந்த பெண்ணைக் கையும் களவுமாக பிடித்திருக்கிறார். அந்த தைரியசாலியின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். நல்ல குண்டுகுண்டுன்னு இருந்தார். கொஞ்சம் நோஞ்சானாக இருந்திருந்தால் திருடி இவரைத் தாக்கியிருக்கலாம். குண்டா இருக்கிறதிலயும் ஒரு நன்மை இருக்கு ;)
எங்கள் வீட்டிலும் இந்த தாழ்ப்பாள் உண்டு... ஒரு முறை வீட்டில் தனியாக இருந்த சமயம் வீட்டு கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ஏற்கனவே பூட்டியிருந்த தாழ்ப்பாளை நன்றாக பூட்டிவிட்டு 'யாரது?' என்று கேட்டேன் (நாங்கள்லாம் படு உஷாருல்ல:) ) பதிலில்லை... இரண்டு மூன்று முறை கேட்டும் தட்டுவதைத் தவிர பதில் சொல்லவில்லை... நீங்க நினைக்கலாம்...லென்ஸ் வழியா பார்க்கலாமேஏன்னு... எங்க வீட்டுக் கதவுக்கு லென்ஸ் கிடையாது... ஹி..ஹி..ஒரு வேளை தமிழ் தெரியாத திருடனாயிருக்குமோ:( 'who's this' என்று கேட்டேன்.. 'it's me' என்றாள் கீழ் வீட்டிலிருக்கும், எங்கள் வீட்டிற்கு அவ்வப்போது வந்து விளையாடிச் செல்லும், அரபிச் சிறுமி...;)
![]() |
எல்லாரும் நல்லாருக்கணும்!! |