ஹ்க்கும்... வலைப்பூ ஆரம்பிச்சு எண்ணி மூணு மாசம் ஆகலை (அதென்ன மூணு மாசக்கணக்கு...முளச்சு மூணு இலை விடலைன்னு சொல்றதுல உள்ள அதே கணக்கு தான்...;)), அதுக்குள்ள பெண்ணுரிமை பேசற அளவுக்கு வந்தாச்சான்னு நீங்க நினைக்கிறத நானும் நினச்சேன்... அதுனால பெண்ணுரிமைப் பற்றி நான் எழுதப்போறதில்லை. ஏன்னா உலகத்தில் பெண்ணுரிமை பற்றி பெண்களுக்குத் தெரிந்ததை விட ஆண்கள் அதிகம் தெரிஞ்சு வச்சிருக்காங்க...
பெண்ணுரிமையைப் பற்றி பெண்கள் எதுக்கு தெரிஞ்சு வச்சிருக்காங்கன்னா அதை சமயத்துக்கு தற்காப்பு ஆயுதமா பயன்படுத்திக்கிறதுக்கு...
அதிகம் படிக்காத கிராமத்து பெண்கள் கூட பஞ்சாயத்து தலைவிகளாகவும் மகளிர் சுய உதவிக் குழு அமைத்தும்,இன்னும் பல நல்ல முன்னுதாரணங்களாகவும் தங்களையும் தாம் சார்ந்த ஊரையும் ஓரளவுக்காவது முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்றாங்க... நகரங்கள்ல பிறந்து வளர்ற பெண்கள் கூட ஒரு ஸ்டேட்டஸ்ஸுக்காக பொறியியலோ மருத்துவமோ படிச்சுட்டு அதைப் பயன்படுத்திக்காம குழந்தைகுட்டி சமையல்னு செட்டிலாயிடுறாங்க... அவங்களுக்கு அப்படி வேலைக்குப் போற எண்ணம் இல்லைன்னா ஆர்ட்ஸ் அல்லது சயின்ஸ் டிகிரி படிச்சிருந்தா அந்த பொறியியல்,மருத்துவ படிப்பு கஷ்டப்பட்டு படிச்சு தாங்கள் சேர்ந்த கிராமத்தின் மற்ற மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்க நினைக்கும் மாணவர்களுக்கு அதிகம் பயன்பட்டிருக்கும். ஏட்டுக்கல்வி கிடச்சிட்டா ஒரு பெண்ணுக்கு முழு சுதந்திரமும் தைரியமும் கிடச்சுடுமான்னா அதுவுமில்ல... அப்படியிருந்திருந்தா "பட்டதாரிப் பெண் தற்கொலை" போன்ற செய்திகளுக்கு இடமில்லையே!நகரத்தில் வாழ்றவங்களுக்கு பத்தோட பதிணொண்ணா தெரியுற அதே கல்லூரி படிப்பு கிராமத்தில் இருக்கிறவங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுக்கிறது. அதே அடையாளம் அவர்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் தைரியத்துடன் எதிர்கொள்ள உதவுகிறது. அதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா ...இருங்க இதையும் சொல்லி முடிச்சுடறேன்...
ஆண்கள் எதுக்கு பெண்ணுரிமையைப் பற்றி தெரிஞ்சுக்கறாங்கன்னா பெண்களிடம் தங்களோட எல்லை இதுவரைதான்..இதுக்கு மேல பேசினா அர்ச்சனை செயல்மூலமாவோ சொல்மூலமாவோ ஆரம்பிச்சுடும்னு அவங்க ஒதுங்கி தங்களுக்கு ஒரு தற்காப்பு ஆயுதமா பயன்படுத்திக்கிறாங்க... ;)
அதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா... என்னோட ஏட்டுக்கல்வி நம் நாட்டோட பெண்கல்வி சதிவீதத்தை உயர்த்திக்க மட்டுந்தாங்க உதவியிருக்கு:(... என் ஆ.கா. அவ்வளவு மோசமானவரான்னெல்லாம் நினச்சுடாதீங்க... யாருக்காக இல்லையோ, அடுத்த வேளை தைரியமா வீட்டுச் சாப்பாடு சாப்பிடணுன்றதுக்காகவாவது என்னோட உரிமைகள்ல மூக்கை நீட்டுறது கிடையாது... அப்பறம் என்னன்னு கேக்கறீங்களா? விஷயம் இதுதான்... என்னோட அஞ்சு வயசு பையன் கேக்கிற கேள்விகளுக்கு பதில் சொல்றதுக்கு நான் படிச்ச ஏட்டுக்கல்வி உதவலைன்னு சொல்ல வந்தேன்:(
போன தடவை ஊருக்கு போயிருந்தப்போ எங்க வீட்டுக்கு வந்தவங்க என் பையனைக் காட்டி 'இது உன் பையனா'ன்னு கேட்டாங்களாம்..நானும் 'ஆமா'ன்னு சொன்னேனாம்... 'நீ ஏன் ஆமான்னு சொன்னே... பாய்ஸ்செல்லாம் அப்பா பசங்க...கேர்ள்ஸ்தான் அம்மா பிள்ளைங்க'ன்னு அவன் பண்ண ஆராய்ச்சியைப் பார்த்து ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்... என்னடா இது... பத்து மாசம் கஷ்டப்பட்டு சுமந்து பெற்று ராத்திரி பகல்னு பார்க்காம வளர்க்கிறோம்... ஆனா புகழெல்லாம அப்பாவுக்கா...பெண்ணுரிமை என்னாவறது:( ...எப்படி இவனை வழிக்கு கொண்டு வர்றது... அப்படீன்னு பயங்கரமா (அடிக்க வரக்கூடாது;)) யோசிச்சேன்... அப்பதான் தோணுச்சு... அவன்கிட்ட கேட்டேன்... எல்லா பேபீஸும் யார் வயிற்றிலிருந்து வற்றாங்க'ன்னு..அவன் 'அம்மா வயித்திலயிருந்து'ன்னு சொன்னான்... 'அப்ப பாய்ஸும் அம்மா பிள்ளைங்க தானே'ன்னு கேட்டேன்... திருப்தியான பதில் கிடைச்சதுனால அமைதியாயிட்டான்... அவங்க அப்பாவுக்குத்தான் கொஞ்சம் வருத்தம்;).
