Wednesday, January 28, 2015

பர்தாவினுள் பழமைவாதி



சுஜாதாவின்
விஞ்ஞானக்கதைகளின்று
நனவாகிக்கொண்டிருக்க
இன்னும் தேங்காயினுள் பூவை
நம்பினால் அது
பழமைவாதம்


தாய்மதம்
திரும்புமாறு
தன் மக்களை
வலியுறுத்தும்
மதச்சார்பற்ற
இந்திய அரசு!
அந்தோ பரிதாபம்!!
அதுவன்றோ பழமைவாதம்.


முகநூலில் முகம்காட்டினால்
மட்டுமே
முற்போக்குவாதியென
முட்டாள்தனமாக
எண்ணி
சொல்லவந்த
கருத்துகளைப்
பின்னுக்குத்தள்ளினாலது
பழமைவாதம்


சுடிதாரில் அனைவரும்
தஞ்சம் புகுந்துவிட
மடிசாரில்
பவனி வந்தால் - அது
பழமைவாதம்


அனாதைக்குழந்தைகள்
அன்புக்குத் தவித்திருக்க
துணையிடம் குறையிருந்தால்
யாரோ ஒருவரது
விந்துவைச் சுமக்கும்
குலவெறி - அது
பழமைவாதம்



நடிகைகளின் உடை அணிந்தால் 
நன்மதிப்பை பெற்றுவிடலாம் என்ற 
மூளைச்சலவையில் 
மூழ்கி
டைட்ஸ் (tights) அணிந்து
பைக்கில் பறந்தால் - அது
பழமைவாதம்


இவை சரியாயிருக்க,
பர்தாவினுள் இருப்பது
ஒலிம்பிக்கை வென்ற
முஸ்லிம் பெண்ணல்ல...
பழமைவாதங்களைப்
பரப்பி அதனின்றும்
வெளிவரத்தயங்கும்
முட்டாள்களே!!

7 comments:

Flavour Studio Team said...

அருமை...!!

மும்தாஜ் said...

நச் பதிவு.. !!!

Unknown said...

"பண்பட்ட பழமைவாதி"

zalha said...

wel said!

dryousufadam said...

அருமை யான பதிவு

தனிமரம் said...

அருமையான சாடல்க்கவிதை.

பானு said...

@ஷர்மிளா ஹமீத்


நன்றி!! :) தங்கள் ஒற்றை வார்த்தை பாராட்டு என்னை இன்னும் நிறைய எழுதத் தூண்டுகிறது... :)



@மும்தாஜ் அக்கா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அக்கா.


@தாஹிரா பானு,

சரியாக சொன்னீர்கள்
பர்தாவினுள் இருக்கும் முஸ்லிம் பெண்ணின் பண்பட்ட மனம், வெற்று வாய்வார்த்தை பேசுபவர்களுக்குப் புரிய வாய்ப்பில்லை. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.



@ஸல்ஹா

பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி சகோதரி.


@யூசுஃப் ஆதாம் சகோ

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி சகோ.


@தனிமரம்

வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோ.