Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Friday, February 28, 2014

2014 ஆண்டுபிறப்பும் நானும்

ஆண்டாண்டு காலமாக உலகம் முழுவதும் ஆண்டு பிறப்பைக் கொண்டாடும் கூட்டமும் கொண்டாடுபவர்களை முட்டாள்கள் என்று கூறும் கூட்டமும் இருந்து கொண்டே வருகிறது. நான் இப்போதைக்கு அவர்களில் யார் சரி யார் தவறு என்று கருத்து கூறுவதில் நுழையவில்லை.

பள்ளி, கல்லூரி காலங்களில் புத்தாண்டு தினம் இந்தியாவில் விடுமுறையாகக் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதால் அன்று ஒரு விடுமுறைக்கான சந்தோஷம் மட்டுமே எனக்கு இருந்ததுண்டு. மற்றபடி இறைநாட்டத்தால் நான் சார்ந்திருந்த ஊரில் அதற்கான கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறும் வழக்கம் இல்லாதததால் அன்றைய தினம் வார விடுமுறை போலவே மனதில் பதிந்திருந்தது.

கடந்த 2014 வருடப்பிறப்பு தினமும் வழக்கமான விடுமுறையாகக் கழிந்திருக்க வேண்டியது; குழந்தைகளுக்கான குளிர்கால விடுமுறை  மற்றும் உறவினர்களின் அமீரக விசிட் இரண்டும் சேர்ந்து இம்முறை துபையில் வருடந்தோறும் ஜனவரி 1 ஆரம்ப நிமிடங்களில் துபை புர்ஜ் கலிஃபாவில் நடைபெறும் ஃபயர்வொர்க்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றால் என்ன என்ற யோசனையைத் தோற்றுவித்தன. ஆறே நிமிடங்களில் 450000 ஃபயர்வொர்க்ஸ் காண்பிக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அந்த வரலாற்றில் இடம்பெற (?) அடுத்த சில மணிநேரங்களில் துபைக்குக் குடும்பத்தினரோடு கிளம்பியாகிவிட்டது. வழக்கம்போல் தொலைதூர பயணத்திற்கு செய்து கொள்ளும் எந்த முன்னேற்பாடும் இல்லை. இம்மாம்பெரிய அரசாங்கம் செய்திருக்கும் ஏற்பாடாகிற்றே…. அதில் பங்கேற்க வரும் மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து வைத்து நமக்காகக் காத்திருக்கும் என்ற உற்சாகத்தில் :-) வண்டியையும் விட்டாச்சு.

துபையின் எல்லையில் வாகனங்களை ஓரிடத்தில் பார்க் செய்துவிட்டு உலகப்புகழ்வாய்ந்த துபை மெட்ரோவில் (Guinness World Records has declared Dubai Metro as the world's longest fully automated metro network spanning at 75 kilometres (47 mi)) பயணித்து உலகிலேயே அதிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபா அருகில் செல்லலாம் என்பது திட்டம். விசிட் செய்திருக்கும் உறவினர் ஒருவர் அல்சர் பேஷண்ட் என்பதால் ஃபயர்வொர்க்ஸ் ஆரம்பிக்கும் முன்பு உண்ணும் கடமையை அனைவரும் முதலில் முடித்துவிடுவது என்று முடிவெடுத்தோம். அக்கம்பக்கம் இருந்த அனைத்து  உணவகங்களிலும் உணவிருந்ததோ இல்லையோ கூட்டம் இருந்தது. தேடியலைந்து ஒரு உணவகத்தில் இருந்து வரிசையில் காத்து நின்று, கூட்டத்தில் மகனின் காலணி தொலைத்து, வாங்கிய உணவை வயிறுநிறைய உண்டாகிற்று. அல்ஹம்துலில்லாஹ்.

உணவுவேட்டையை முடித்த சில மணித்துளிகளில் ஃபயர்வொர்க்ஸும் கண்டுகளித்தாகிற்று. சரி… கிளம்பலாம் என எழும்பினால் அலையலையாய் மக்கள் கூட்டம். அருகிலிருந்த மெட்ரோ நிலையத்தை அடைய கிட்டத்தட்ட 2 மணிநேரம் காத்திருந்த காத்திருப்பில் வீடு போய் சேருவோமா என்று மனதில் ஏற்பட்ட திகிலை சொல்லியே ஆகவேண்டும். அவ்வளவு கூட்டம். மக்கள் கூட்டத்தை சமாளிக்க காவல்துறை மிக அதிகமாகவே திணறியது. 5 நிமிட தூரங்களுக்கிடையில் தடுப்புகளை வைத்து ஒரு பக்கம் மக்களை நிறுத்தி மறு பக்கம் மக்களை செல்ல அனுமதித்து, கூச்சல் குழப்பம், பனி, தூக்கக்கலக்கம், கிட்டத்தட்ட சாலையில் சிறை வைக்கப்பட்ட உணர்வு. ஒரு வழியாக அருகிலிருந்த மெட்ரோ நிலையத்தினை அடைந்தாகிற்று. நடந்த வந்த பாதை முழுவதும் காலணிகள் எங்கும் பரவி கிடந்தன. ஏதோ கலவர பூமியில் நடந்து செல்வது போன்ற ஒரு எண்ணம்.


சரி… மெட்ரோவில் ஏறியாகிற்று. உலகத்தரம் வாய்ந்ததாகிற்றே… அடுத்த சில நிமிடங்களில் நம் வாகனத்தில் ஏறியமர்ந்தால் போதும் என்ற எண்ணத்திலும் மண் அல்ல… பாறாங்கல்லே விழுந்தது. கிளம்பிய சில நிமிடங்களிலேயே மீண்டும் கிளம்பிய இடத்திற்கே வந்து நின்றது மெட்ரோ… ஒரு அறிவிப்பு இறங்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அடுத்த அறிவிப்பு இத்துடன் மெட்ரோ சேவை முடிந்தது என்றும் மாறி மாறி வந்து பயணிகளை திகிலடையச் செய்தது. உறக்கக்கலக்கத்தில் இருந்த பலர், இந்த திகில் எதுவும் இல்லாமல் உறங்கிவிட ஒரு வழியாக புறப்பட்டது மெட்ரோ. ஒரு வழியாக மகிழுந்துகளில் ஏறியமர்ந்தோம். அபுதாபிக்கு வந்து சேர்கையில் மணி காலை 7.

என் கேள்வியெல்லாம் ஏன்???? 
எதற்காக இந்த புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடு???? 
யாரை மகிழ்விக்க இந்நிகழ்ச்சியினை துபை அரசு ஏற்பாடு செய்துள்ளது???? 
இதனால் யாருக்கு என்ன லாபம்???? 
உலகளவில் எத்தனையோ சாதனைகள் புரிந்துள்ள துபை, இந்த சிறிய விஷயத்தில் சமாளிப்பதில் சிரமம் என்று தெள்ளத்தெளிவாக அறிந்தும் தன் நாட்டு மக்களை அலைக்கழிப்பது ஏன்???? 
புத்தாண்டு கொண்டாட நினைக்கும் மக்களுக்கு புத்திமதி சொல்ல துணிவில்லை என்றாலும் குறைந்தபட்சம் ஒதுங்கிக்கொள்ளாமல் அவர்களை முட்டாளாக்குவது ஏன்????
அல்லது இக்கொண்டாட்டத்தில் அறிவில்லாமல் பங்கேற்ற மக்களுக்கு இந்த சிரமங்கள் தேவையான பாடங்களை புகட்டிவிடும் என்ற எண்ணமா????
கின்னஸ் சாதனை படைத்து வரலாற்றில் தன் பெயர் பதிக்க, தன் நாட்டு மக்களின் நேரம், பொருள், சக்திகளை வீணாக்க நினைப்பது ஏன்????



[hide]Climate data for Dubai
Month
Jan
Feb
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Year
Record high °C (°F)
31.6
(88.9)
37.5
(99.5)
41.3
(106.3)
43.5
(110.3)
47.0
(116.6)
46.7
(116.1)
49.0
(120.2)
48.7
(119.7)
45.1
(113.2)
42.0
(107.6)
41.0
(105.8)
35.5
(95.9)
49
(120.2)
Average high °C (°F)
24.0
(75.2)
25.4
(77.7)
28.2
(82.8)
32.9
(91.2)
37.6
(99.7)
39.5
(103.1)
40.8
(105.4)
41.3
(106.3)
38.9
(102)
35.4
(95.7)
30.5
(86.9)
26.2
(79.2)
33.4
(92.1)
Daily mean °C (°F)
19
(66)
20
(68)
22.5
(72.5)
26
(79)
30.5
(86.9)
33
(91)
34.5
(94.1)
35.5
(95.9)
32.5
(90.5)
29
(84)
24.5
(76.1)
21
(70)
27.5
(81.5)
Average low °C (°F)
14.3
(57.7)
15.4
(59.7)
17.6
(63.7)
20.8
(69.4)
24.6
(76.3)
27.2
(81)
29.9
(85.8)
30.2
(86.4)
27.5
(81.5)
23.9
(75)
19.9
(67.8)
16.3
(61.3)
22.3
(72.1)
Record low °C (°F)
6.1
(43)
6.9
(44.4)
9.0
(48.2)
13.4
(56.1)
15.1
(59.2)
18.2
(64.8)
20.4
(68.7)
23.1
(73.6)
16.5
(61.7)
15.0
(59)
11.8
(53.2)
8.2
(46.8)
6.1
(43)
Precipitation mm (inches)
18.8
(0.74)
25.0
(0.984)
22.1
(0.87)
7.2
(0.283)
0.4
(0.016)
0.0
(0)
0.8
(0.031)
0.0
(0)
0.0
(0)
1.1
(0.043)
2.7
(0.106)
16.2
(0.638)
94.3
(3.711)
Avg. precipitation days
5.4
4.7
5.8
2.6
0.3
0.0
0.5
0.5
0.1
0.2
1.3
3.8
25.2
65
65
63
55
53
58
56
57
60
60
61
64
59.8
Mean monthly sunshine hours
254.2
229.6
254.5
294.0
344.1
342.0
322.4
316.2
309.0
303.8
285.0
256.6
3,511.4
Source #1: Dubai Meteorological Office[4]
Source #2: climatebase.ru (extremes, sun),[5], NOAA (humidity, 1974-1991)[6]


விக்கிபீடியாவின் இந்த சார்ட்படி டிசம்பரை விட ஜனவ்ரியில் அதிக குளிர் அமீரகத்தில் பதிவாகியிருப்பது தெரிய வருகிறது. அப்படியெனில் ஜனவரியில் தானே குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும்?? யாருக்காக டிசம்பரில் 20ந் தேதியில் இருந்து ஜனவரி 2ந்தேதி வரை விடுமுறை விட வேண்டும்?? டிசம்பரை விட ஜனவரியில் தான் அதிக பனியும் சமயத்தில் மழையும் பொழிவதை மக்கள் உணர்ந்திருக்கும்போது ஆட்சியாளர்கள் அறியாதது அதிர்ச்சியாகவே உள்ளது.

நோன்பிற்குப் பின்பும் ஹஜ்ஜிற்குப் பின்பும் மட்டுமே பெருநாள் கொண்டாட்டங்களை வகுத்துத்தந்த மார்க்கத்தைப் பின்பற்றும் ஆட்சியாளர்கள், தமது நாட்டில் இத்தகைய கொண்டாட்டங்களை ஊக்கப்படுத்துவது வியப்பாகவே உள்ளது. உலகில் எத்தனையோ நாடுகளில் மக்கள் இஸ்லாமிய ஆட்சிக்காக ஏங்கித் தவிக்கும் காலத்தில், கைகளில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது இவர்களுக்கு? 

உலகில் அழகிய முன்மாதிரி ஆட்சியினைப் புரிய இவ்வாட்சியாளர்களுக்குத் தேவையான விழிப்புணர்வத் தரவும் மார்க்க அறிவைய இவ்வாட்சியாளர்களுக்கும் நமக்கும் இறைவன் அதிகப்படுத்திக் கொடுக்கவும் ப்ரார்த்தனை செய்வோம்.

புத்தாண்டு தினத்தைக் கொண்டாடி அந்த வருடத்தை மகிழ்வோடு வரவேற்றால் அந்த வருடம் முழுவதும் மகிழ்வோடு கழியும் என்று கூறும் மக்கள் எனக்கென்ன பதில் வைத்திருக்கிறார்கள்?? உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று கூறுவது என் காதில் கேட்கிறது. அது பதில் இல்லாதவர்களின் பதில் என்று நான் கூறுவது உங்களுக்குக் கேட்கிறதா?? இந்த வருடத்தின் முதல் நாளைத் தவிர இன்று வரை இறையருளால் மகிழ்வாகவே இருக்கிறேன். கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லையெனில் ஜனவரி 1ந்தேதியும் நிம்மதியுடன் இருந்திருப்பேன்.

Wednesday, October 10, 2012

எங்கிருந்தாலும் வாழ்க!!


இப்பல்லாம் எங்க பார்த்தாலும் புரட்சி...கலவரம்.... தடியடி... எல்லாவற்றுக்கும் காரணமானவர்கள் பாதுகாப்பா இருந்துக்கறாங்க... ஆனா பொதுமக்கள் தான் பாதிப்படையறாங்க... கடையடைப்பினால் சரியான சாப்பாடு கிடைக்காது.... பள்ளிக்குச் செல்ல முடியாது... பணிக்கும் செல்ல முடியாது.... தேவைக்கு மருத்துவமனைக்கும் போக முடியாது.... இப்படி பொதுமக்களாகிய நாம் படுற அவதி தாங்க முடியாது.....

அதிலயும் அரபு நாடுகள்ல நடந்த, நடந்து கொண்டிருக்கும் Arab  Uprising  எனப்படும் அரேபிய கலகம் என்ற வார்த்தையைக் கேட்டாலே பொது மக்களுக்கும் பீதியாகுது.... பதிவியில் இருக்கிறவங்களுக்கும் ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கு. டுனீஷியா எனும் சிறிய நாட்டில் 17 டிசம்பர் 2010 அன்று அப்போதைய அதிபர் ஜைனுல் ஆபிதீன் பென் அலியின் 23 வருட கொடுங்கோலாட்சியை எதிர்த்து  முஹம்மது பூஅஸீஸி என்பவரின் உயிரிழப்பினால் ஆரம்பித்தது இந்த அரேபிய கலகம். 14 ஜனவரி 2011 அன்று பென் அலி பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதால் நல்லவேளையாக (?) இருபத்தட்டே நாட்களில்  கலகம் முடிவடைந்தது. ஒரு வேளை அரேபிய கலகத்தின் ஆரம்பமாகயிருந்ததால் அவர் சரியான  ப்ப்ப்ப்ளான் பண்ணலையோ என்னவோ?! அந்த 28 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்பு 338 , 2147 பேர் காயமடைந்தனர்.
----------------------------
எகிப்தின் நவீன பிர் அவ்ன் என்று அழைக்கப்பட்ட ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி கவிழ துனிஷிய கலகம் முன்மாதிரியாக இருந்தது. முபாரக்கின் ஆட்சியை கவிழ்க்க சதி தீட்டுவதில் சமூக வலைத்தளமான ட்விட்டர் பெரும்பங்கு வகித்தது. இப்படியாக முபாரக்கின் முப்ப்ப்ப்ப்ப்பது ஆண்டுகால கொடுங்கோலாட்சியை எதிர்க்க முக்கிய காரணமாக இருந்தவை அவர் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஆதரித்தது தான். .

25 ஜனவரி 2011 அன்று வெடித்த புரட்சியினால் சரியாக 18வது நாளில் 11 .02.2011  அன்று அதிபர் முபாரக் பதவி விலகினார். இந்த 18 நாட்களில் உயிரிழந்தவர்கள் 846, காயமடந்தவர்கள் - 6467.
-----------------------
கிட்டத்தட்ட தெற்கு ஏமனிலும் இதே கதை தான். தனது முப்பத்து மூஊஊஊன்று ஆண்டு கால பதவியிலிருந்து விலகினார் அலி அப்துல்லாஹ் சாலஹ். 27 ஜனவரி 2011ல் ஆரம்பித்த ஏமனிய புரட்சி ஒரு வருட காலம் நீடித்தது. அப்துல்லாஹ்வின் ஆட்சியை கடுமையாக எதிர்த்து, அதே வருடம் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, தவக்குல் கர்மன் எனும் பெண்மணி நடத்திய புரட்சி ஏமனிய புரட்சியில் பெரும்பங்கு வகித்தது. இந்த ஓராண்டு கால புரட்சியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000, காயமடைந்தோர் 22000.
-----------------
ஏமனுக்குப் பிறகு தொடங்கிய லிபிய கலகம்தான் ஏதோ சினிமா மாதிரி இருந்தது. 15 பிப்ரவரி 2011 அன்று அந்நாட்டு அதிபர் முஅம்மர் கடாஃபிக்கு எதிராக வெடித்த புரட்சியால் 20 அக்டோபர் 2011 அன்று நாட்டை விட்டு தப்ப முயன்ற கடாஃபி  சுட்டு கொல்லப்பட்டார். அவரது மகன் சிறையில் அடைக்கப்பட்டார்.  8 மாதங்கள் நீடித்த இக்கலகத்தில் 30000 உயிரிழந்தனர், 50000 காயமடைந்தனர். (முந்நாள் அதிபர் கடாஃபியைப் பற்றி நிறைய எழுதலாம். தன் சொந்த எண்ணங்களையே சட்டங்களாக்கி தன் நாட்டில் நாஆஆஆற்பத்தியிரண்டு ஆண்டுகள் ராணுவ ஆட்சி நடத்தியவர். அவருடைய வாரிசாக யாரையும் யாரும் கைகாட்டிவிடாதபடி அனைவரையும், தன் மகன்கள் உள்பட, தன் கட்டுக்குள் வைத்திருந்தார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்)
--------------------------
மேற்சொன்ன நாடுகளில் கலகங்கள் வெடித்ததன் தொடர்ச்சியாக 15 மார்ச் 2011ல் சிரியாவிலும் கலம் வெடித்தது. இன்னும் நடந்துகிட்டேயிருக்கு.... அந்த படுபாவி பஷார் அல் ஆஸாத் பதவிய விட்டு இறங்கவும் மாட்டேங்கறார்.... தன்னோட அமைச்சரவையில இருந்தே எத்தனையோ பேர் தனக்கெதிரா திரும்பினதுக்கப்புறமும் அவரோட பதவி வெறி அடங்கவில்லை.... தன் மக்களைத் தானே கொன்று குவிக்கிற தவறும் புரியவில்லை... உலகம் பூரா இருந்தும் எதிர்ப்பு வந்தும் சிறிய சிரிய நாட்டோடு தோழமையா பழகிட்டிருந்த எத்தனையோ நாடுகள் அவரோட எதிராளிகளுக்கே ஆதரவு மட்டுமல்ல ஆயுதமும் வழங்குவோம்னு பகிரங்கமா தெரிவித்த பின்பும் மண்டையில உறைக்க மாட்டேங்குது.... நானும் இந்த பதிவு எழுத இவ்ளோ நாளாகுதே.... நாம எழுதறதுக்குள்ள கலகம் முடிந்த நல்ல செய்தியோடு பதிவு போடலாம்னு காத்திட்டிருந்தேன்.(அப்பாடா... பதிவு போட தாமதமானதை சமாளிச்சாச்சு ;)))...
 
இந்த ஒன்றரை வருடங்களில் சுமர் 40,000 பேர் உயிரிழந்துள்ளனர்.:(((((
 
என்ன இவ, அடுத்த பதிவில் இஸ்ராவைப் பற்றி சொல்றேன்னுட்டு இப்ப இவ இஷ்டத்துக்கு ஏதோ எழுதறாளேன்னு நினைக்கிறீங்களா.... இதோ மேட்டருக்கு வந்துட்டேன் (அப்பாடா)...'உன்னோட தாய் நாடு எது' என அவளிடம் நான் கேட்டதுக்கு அவளோட பதில் 'சிரியா'. (இத முதல்லயே சொல்ல வேண்டியது தானே...)... பின் ஒரு நாள் அவளது வீட்டிற்குச் சென்று அவளுக்குப் பிரியாவிடையளித்து வந்தேன். அப்பொழுது தன் மேற்படிப்பு பற்றி என்ன்னிடமும் ஆலோசனை கேட்டாள் (இதிலேயே தெரிஞ்சிருக்குமே...அவள் எவ்ளோ அப்பாஆஆஆவின்னு :))). நானும் எனக்குத் தெரிந்ததை(?) எடுத்துச் சொல்லிவிட்டு, நினைவுப் பரிசு ஒன்றையும் கொடுத்துவிட்டு வந்தேன்.
 
மற்ற நாடுகளில் போர் முடிந்து தேர்தலும் நடந்து ஏதோ ஒரு வழியா கலகமெல்லாம் ஓரளவிற்கு முடிந்து விட்டது. ஆனால் என் இனிய இஸ்ராவின் நாட்டில் மட்டும் இன்னும் போர் முடியல...:(((  மற்ற நாடுகளில் நடந்தப்போ இருந்தத விட இப்ப ரொம்ப கவலையாக இருக்கு..... இஸ்ரா எங்க இருக்கிறாளோ....அவள் குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்களோ...எங்கே இருக்கிறார்களோ....செய்திதாளைப் பார்க்கும் போதெல்லாம் அவள் நினைவு தான்.... சிரிய நாட்டுப் போர் விரைவில் முடிவு பெற நீங்கள் செய்யும் துஆவில் இஸ்ராவிற்காகவும் அவள் குடும்பத்தினருக்காகவும் ஒரு வரி சேர்த்துக் கொள்ளுங்கள்.

நானும் இன்று முடியும்...நாளை முடியும் என்று எதிர்பார்க்கிறேன்... ஆனால் ஹிட்லர் சாகவில்லை.... இதோ இருக்கிறேன் என்று சொல்வது போல் ஆஸாத் நடத்தும் ஈவிரக்கமில்லாத போரின் பாதிப்பால் தம் சொந்த நாட்டை,வீட்டை விட்டு அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள 1.5 மில்லியன் மக்களில் ஒருத்தியாக அவள் இருப்பாளா... அப்படியாவது அவள் உயிரோடு இருக்க வேண்டும்...

யா அல்லாஹ்.... நீ அதிகம் விரும்பும் தொழுகையாளிகளின், இமாமாக வாழ்க்கை நடத்தும் அம்மனிதரின் குடும்பத்தினரை எல்லா வளமும் பெற்று வாழ செய்வாயாக..... அவர்கள் நாட்டில் நடந்தேறும் குழப்பங்கள் அனைத்திற்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பாயாக! ஆமீன்.

ஆதாரங்களனைத்திற்கும் விக்கிக்கு நன்றி. பதிவில் தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்க சகோஸ்!!

Sunday, September 23, 2012

இஸ்ரா !!

தலைப்பைப் பார்த்ததும இது இஸ்ராவா இஸ்ரோவா .... இஸ்ரோ பற்றி இவுக  என்ன எழுதப் போறாக ன்னெல்லாம் யோசிக்காதீங்க ... அது பத்தி எழுத -ஹுசைனம்மா இருக்காங்க.... ஆக்கப்பூர்வமா என்ன எழுதன்னு தலைப்பு யோசிக்கிறாங்களே ... நம்ம சிராஜன்னே இருக்காக.. ஏன் நீங்களும் எழுதலாம்...ஆனா என் தோழி  இஸ்ராவைப் பற்றி நான் மட்டுமே எழுத முடியும்.... (ஹி ..ஹி ... இத மட்டும் தான் நான் எழுத முடியும் ;))


பெயரைச   சொல்லும்போதே மனதின் மகிழ்ச்சி  முகத்தில் புன்னகையாக வெளிப்படும்... அவளுடன் பேசிய தருணங்கள் ஒவ்வொன்றாக ஆழ்  மனதிலிருந்து நினைவில் எட்டிப்பார்க்கும்...  அந்த சிறிய பெண்ணின் கள்ளங்கபடமற்ற பேச்சுக்கள் என் கவலையைப் போக்கும்  ... அவளை நினைத்தாலே 'smiling beauty' என்று சொல்வார்களே அச்சொல்லாடல் தான் நினைவிற்கு வரும். அவளுடன் பேசுபவருக்குத் தவிர மற்றவருக்கு அவள் பேசுவது கேட்காது. அவ்வப்போது நாளை பரீட்சை இருக்கிறது என்று  சொன்னாலும் அவளது படிப்பு சம்பந்தமான எந்த வித அழுத்தத்தையும் முகத்தில் காட்டிவிட மாட்டாள். தன சந்தோஷத்தை மட்டுமே மற்றவருடன்  பகிர்ந்து தன கவலைகளை மறைக்கும் ம்ன்முதிர்ச்சியை இந்த வயதிலேயே பெற்றவள். அவள் தான் எனதருமைத் தோழி இஸ்ரா...





முதன் முதலில் அவளை சந்தித்த தருணம் இப்பொழுதும் என் நினைவில் இருக்கிறது.... வெள்ளிகிழமை தொழுகை முடிந்ததும் பள்ளியில் ஒரு அறிவிப்பு வர அதகுண்டான விளக்கத்தை என் அருகில் இருந்த பெண்ணிடம் கேட்டேன். பொறுமையாக தாழ்ந்த குரலில் விளக்கியவளின் முகத்தை அதுவரை பார்த்திராததால் ' புதிதாக அருகில் குடி வந்திருக்கிறிர்களா இதுவரை உங்களை இங்கு நான் பார்த்ததில்லையே' என்ற என் கேள்விக்கு 'நான் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதால் அடிக்கடி வர முடியவில்லை' எனத தெரிவித்தாள். அதன் பிறகு தான் அப்பள்ளி வாசலின் இமாமின் (தொழுகை நடத்துபவரின்) மகள் எனவும் தெரிவித்தாள் .  



அவ்வறிமுகத்திற்குப் பிறகு அடிக்கடி சந்திப்பு தொடர்ந்தது. அங்கு நடத்தப்படும் வெள்ளிக்கிழமை குத்பா (உரை) பற்றிய விளக்கங்கள் பலவற்றை என்னிடம் விவரித்தாள். இதற்காக தொழுகை முடிந்த பின்பும் எனக்காக நேரம் ஒதுக்கி எனக்கு உதவினாள். இஸ்லாத்தைப் பற்றி அவளிடமிருந்து நானும் என்னிடமிருந்து அவளும் பகிர்ந்து கொண்டோம்.


இச்சந்திப்பிற்காகவே மதிய உணவு தயாரிப்பை  பள்ளிக்கு வரும் முன்பே ஓரளவு முடித்துவிட்டு கிளம்புவதற்காக காலையில் கொஞ்சம் சீக்கிரம் :(( எழும்ப வேண்டியிருந்தது .. பின்பு அதுவே நல்ல பழக்கமாக மாறிவிட்டிருந்தது (அதாவது இப்ப இல்லை....ஹி ஹி )...ஆனா ..... நல்ல வேளை ..சாப்பாடு....சாப்பாடுன்னு கிச்சனிலேயே  கிடக்காமல் இஸ்லாத்திற்காக நேரம் ஒதுக்க இறைவன் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தியதை நினைத்து இப்ப மனதிற்கு திருப்தியாக இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ் !


நான் பள்ளிக்கு செல்ல முடியாத போதும் அவள் எனக்காக வந்து காத்திருந்ததை என்னிடம் தெரிவித்தபோது மனம் வருந்தினேன். அவள் சொல்லும்போது சிறிதேனும் கோபப்பட்டிருந்தால் வருத்தப்பட்டிருக்கமாட்டேன். ஆனா வருத்தத்துடன்  சொன்னபோது என் தலையில் 'நங் நங்' நு கொட்டனும்போல இருந்துச்சு... ( உங்களுக்கு சந்தோஷமா இருக்குமே?!) ஆனா செய்யலை.... (எப்பூடி ?)அதன் பிறகு நான் செல்லாத நாட்களில் அவளுக்கு sms அனுப்பிவிடுவேன்.


கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆன பின் அவள் அந்த தகவலை  சொன்னாள் . அவளது தந்தைக்கு பணி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாகவும் அதனால் அவள் குடும்பத்தினர் அனைவரும் அவளது தாய் நாட்டிற்குத திரும்பி செல்லவிருப்பதாகவும் தெரிவித்தாள். அதைக் கேட்டதும் மனதிற்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. நெடுநாள் தொடர்ந்த நட்பில் பிரிவேற்படப்போவதை எண்ணி இருவருக்கும் மனம் கனத்து விட்டது. 


இந்த பிரிவு அவள் ஏற்கனவே எதிர்பார்த்து இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு உடனே நம்பமுடிவதாக இல்லை. சொல்லப்போனால் இந்நாட்பில் பிரிவு ஒன்று இருக்குமானால் அது நாங்கள் இந்தியா திரும்பும்போதுதான் அமையும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் என்றேனும் ஒருநாள் நான் சொல்லவிருந்த  அவ்வார்த்தைகள் அவளிடமிருந்து வந்தது எனக்கு ஏற்றுக்கொள்ள சிரமமாக இருந்தது ஏனெனில் அவள் வேற்று நாட்டை சேர்ந்தவள் என்பதே எனக்கு அப்போதுதான் தெரியவந்தது.   சிறிது நேரம் என்ன பேசுவது என்றே எனக்குத் தோன்றவில்லை. பிறகு சுதாரித்து உனது தாய் நாடு எது எனக் கேட்டேன்.. அது....


இன்ஷாஅல்லாஹ், அடுத்த பதிவில்....

படங்கள்  கஊகிளில் கிடைத்தவை 

Sunday, May 27, 2012

தி ஃபர்ஸ்ட் ஸ்ட்ரெஸ்


(இப்பதிவுக்கும் ஹுஸைனம்மாவின் டென்த் டென்ஷன் பதிவுக்கும் சம்பந்தமில்லை ஹி..ஹி... ;-)))
வாங்க..வாங்க... என்னை யாருன்னு தெரியுதா? நாந்தான் என்றென்றும்16 அப்டீன்ற பேர்ல ப்ளாக் நடத்திட்டிருக்கிற (?) பானு...அப்பப்ப இப்டி எனக்கு நானே இன்ட்ரொ கொடுக்கவேண்டியதாயிருக்கு...:(...


கிட்டத்தட்ட ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு போயிட்டு வந்து பார்த்தா நம்ம பெரியதுரைக்கு விடுபட்ட பாடங்கிறாங்க... வீட்டுப்பாடங்கிறாங்க... தினமொரு வகுப்புத்தேர்வுங்கிறாங்க... ப்ராஜக்ட்டுங்கிறாங்க... அஸ்ஸெஸ்மென்டுங்கிறாங்க.... முடீல... பெரியதுரைன்ன உடனே ரொம்ப பெரிய்ய்ய்யதுரைன்னு நினச்சிடாதீங்க..... ஜஸ்ட் ஒண்ணாங்கிளாஸ் தான்.... ஹ்..ம்... மண்டை காயுது... பெண்டு நிமிருது.... கண்ணு இருளுது...இப்டி எல்லா டயலாக்ஸுமே இப்ப என் நிலமைக்கு பொருந்துது... :-((...ஓ..கே...ஸ்டாப்பிங் தெ பொலம்பல்ஸ்.......


ஊர்ல இருக்கும்போது நம்ம அய்யாதுரைக்கு கண் செக் பண்ணிட்டு லென்ஸ் மாத்திட்டு அப்படியே ஃப்ரேமையும் மாத்தலான்னு ஒவ்வொரு ஃப்ரேமா போட்டு பாத்து இது நல்லாருக்கா...இது நல்லாருக்கான்னு கேட்டுக்கிட்டிருந்தார் (கடையில் செலக்ஷனுக்கு வச்சிருக்கிற ஃப்ரேம்களில் சாதா லென்ஸ்தான மாட்டியிருக்கும்)..... நானும் ரெண்டு மூணு தடவை பொறுமையா பார்த்து பதில் சொல்லிட்டுருந்தேன்.... அடுத்த ஃப்ரேமுக்கு "ஏங்க அதான் முகம் பார்க்கிற கண்ணாடி இருக்குல்ல...அதுல பார்த்து செலக்ட் பண்ணுங்களேன்... ஏன் என்னையே தொந்தரவு பண்றீங்க..."ன்னு ஒரு ரைடு விட்டேன்.... அவரும் பாவமா "எனக்குத் தெரியல.... எனக்குத் தெரிஞ்சா நான் ஏன் உன்னைக் கேட்கிறேன்"னு சொன்னார்.... நானும் ஒரு ஃப்ரேம் கூட செலக்ட் பண்ணத் தெரியல....என்னத்த குடும்பத்தலைவனோன்னு ஒரு பொலம்பல் (மனசுக்குள்ள தான்) .....

அடுத்த ஃப்ரேமுக்கும் அதே கேள்வி,  அதே பதில் ... ....."எனக்குத் தெரியல.... எனக்குத் தெரிஞ்சா நான் ஏன் உன்னைக் கேட்கிறேன்" ...அதே புலம்பல்...

அப்பத்தான், நம்ம அய்யாதுரை தூங்கி முழிக்கும்போதே கண்ணாடி எடுத்து மட்டிக்கிற வரை தட்டி துழாவி ஒரு குத்துமதிப்பா நடமாடுறது ஞாபகம் வந்துச்சு.... "ஏங்க நீங்க தெரியல தெரியல்ன்னு சொன்னது அந்தத் தெரியலயா"ன்னு கேட்டா அவரும் பாவமா "ஹ்..-ம்... உனக்கு அது இப்பத்தான் புரியுதா"ன்னு கேட்க, கடைக்காரன் சிரிப்ப அடக்க முடியாம வாயை மூடிக்கிட்டு சிரிக்க. .... ச்ச... நம்ம பொழப்பு இப்டி சிரிப்பா சிரிச்சு போச்சு போங்க...

விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்... அநேகமா இன்ட்ரொ தேவைப்படுற அளவுக்கு இடைவெளி வராதுன்னு சொல்லி விடைபெறுவது என்றென்றும்16 பானு. வஸ்ஸலாம். நன்றி.

Monday, March 5, 2012

ஹையா .... நினைத்தது நடக்கவில்லை!!

நாம் நினைப்பது சில சமயங்களில் அப்படியே நடக்கும்..சில சமயங்களில் நடக்கிறா மாதிரி இருந்து அப்புறம் ரூட் மாறிப்போய்விடும். நினைத்தது நடக்காத சமயங்களில் மனம் வெறுத்துவிடாமல் இருக்க நான் சில சமயங்களில் ஒரு உத்தியை மேற்கொள்வேன். (ரொம்ப கற்பனை பண்ணாம வாசிக்கணும்...ஆமா)

என்ன நடந்தா நம் மனது சந்தோஷப்படணும்னு ஆசைப்படுறோமோ அதுக்கு நேரெதிராக மனதில் நினைத்து கொள்வேன்..உதாரணத்திற்கு எங்க வீட்டு அய்யாதுரையிடம் எதையாவது வாங்கித்தர சொல்லணும்னு மனம் ஆசைப்படும்போது அதை அவர் வாங்கித்தரலேன்னா என்ன சொல்லி சண்ட போடலாம்னு மனசுல வாக்கியங்கள தேர்ந்தெடுத்து தயாராக்கி வச்சுப்பேன். ஆனா அதிசயம்..கேட்டவுடனே வாங்கித்தந்துடுவாங்க ... ( ;-) போடலாமா? :-( போடலாமா?) சரி ஒன்றை இழந்தாத்தானே இன்னொன்று கிடைக்கும்... சண்டையை இழந்து ஆசைப்பட்டது கிடைச்சிருக்குன்னு மனச சமாதானப்படுத்திக்குவேன்.( சில விஷயங்களில் தான் இப்படி..பல விஷயங்களில் தலைகீழா நின்னாலும் ஒண்ணும் தேறாது :-((... அட நம்புங்க...)

கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு சம்பவம்... நான் நினச்சது நடக்கல....அப்படி நடக்காததில் சந்தோஷப்பட்டாலும் வருத்தமும் ஒரு திருப்தியும் இருந்துச்சு....  என்ன... தலை சுத்தி கீழ விழுந்திடுச்சா.... சரி...சரி.. எடுத்து மாட்டிக்கிட்டு மேல ... அட... கீழ படியுங்க...


எங்க வீட்டுக்குப் பக்கத்தில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் எனக்கு தோழியாக கிடைத்தார். அவருடைய குடும்பமும் ரொம்ப இபாதத்தான (இறைபக்தி), இறையருளால் மகிழ்ச்சிகரமான குடும்பம். தோழியுடன் பிறந்தவர்கள் 5 பேர். ஒரு அண்ணன்...ஒரு தங்கை... மீதி 3 தம்பிங்க.. (கணக்கு சரியாகிடுச்சா?) அண்ணன் சவூதியிலயும் தங்கையும் ஒரு தம்பியும் அமெரிக்காவிலயும் ஒரு தம்பி பெங்களூருவிலயும் ஒரு தம்பி சிங்கை(ன்னு நினைக்கிறேன்)லயும் இருக்காங்க... அப்பா அம்மா ஊரில் தனியாக வசித்து வந்தார்கள். இதை அந்த அக்கா சொன்னதும் நான் நினச்சதுதான் இந்தப் பதிவுக்கே அடித்தளம்... அதாவது 'ஆசையாசையா பிள்ளைகள பெற்று வளர்த்தாங்க...இப்ப அவங்க தனியா ஊர்ல இருக்காங்களே.பிள்ளைகளும் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்காமல் அவர்களின் தாய் தந்தை நினைத்தாலும் இவர்களை ஒன்றாக சந்திக்க முடியாத தூரங்களில் இருக்கிறார்களே. ' அப்டீன்னெல்லாம் குதிரை அது பாட்டுக்கு ஒடிட்டு இருந்துச்சு....


இந்த சமயத்துல அவங்களோட தம்பியின் திருமணத்திற்கு எல்லாருமா ஊருக்கு போய்விட்டு வந்தார்கள். ஊரிலிருந்து திரும்பி வரவே மனசில்லை...  என்று அக்கா வருத்தப்பட்டார்கள். நானும் 'அக்கா..வருத்தப்படாதீங்க..கடைசி தம்பி திருமணமும் இது போல் விரைவில் மகிழ்ச்சிகரமானதாக அமையும்' னு சொல்லி வச்சேன். 'இன்ஷா அல்லாஹ் பானு' அவங்க சொன்னாங்க.

சில மாதங்களுக்குப் பிறகு அவங்க தங்கையின் பிரசவத்திற்கு அவரது பெற்றோர் அமெரிக்காவில் 6 மாதம் தங்கியிருந்தனர். பிறகு அக்காவுடைய பிரசவத்துக்கும் இங்கு வந்து 2 மாதங்கள் தங்கியிருந்தனர். நான் அப்பொழுது தற்செயலாக அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தேன். அன்றுதான் அவரது பெற்றோரின் பயணமும் அமைந்திருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தினால் 1 மாதம் முன்பே அவர்கள் கிளம்ப வேண்டியிருந்தது. அவரது அம்மா கையால் சமைத்த சுவையான மீன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு தொழுகைக்குச் சென்று திரும்பிய அவரது அப்பாவையும் சந்தித்து விட்டு கிளம்பினேன். அன்று அவர்கள் சவூதியில் இருக்கும் அவரது பேரக்குழந்தைகள் அவர்களை அழைத்ததால் அங்கு போய் சிறிது நாட்கள் தங்கிவிட்டு ஊருக்குச் செல்லவிருப்பதாக தெரிவித்தார்கள். ஹ்.ம். கொடுத்து வைத்தவர்கள்... பிள்ளைங்க நாலாப்பக்கமும் இருந்தா இது ஒரு வசதி... ஹாயாக ஊரைச் சுற்றலாம். அப்டீன்னு நினைச்சுக்கிட்டேன்.

சவூதிக்குச் சென்றவர்களுக்கு உம்ரா (சிறிய ஹஜ்) செய்ய விருப்பப்பட்டு மகனிடம் சொல்ல அவரது மகன்கள் அனைவரும் ஒரு வார விடுப்பு எடுத்துக் கொண்டு அவருடன் உம்ரா சென்றிருக்கிறார்கள். உம்ரா செய்துவிட்டு டேக்ஸிக்கு காத்திருக்கும் வேளையில் நெஞ்சு வலிக்கிறது என்று பிடித்துக் கொண்டு அமர்ந்தவரின் ரூஹ் பிரிந்திருக்கிறது..இன்னா லில்லாஹி.. (இறைவனிடமிருந்தே வருகிறோம்...மீன்டும் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது).

தமிழ்நாட்டில் எங்கோ இருந்தவர் அமெரிக்கா,அபுதாபி என்று இறையருளால் சிலகாலம் இருந்தவர் மக்காவில், உலகின் நான்கு திசைகளிலிருந்து வந்த மகன்கள் சூழ, மரணத்தைத் தழுவிய காட்சி மனதில் நிறைந்து ஆச்சரியம் பொங்குகிறது. இறைவனின் வாக்கு தான் எத்துனை உண்மையானது... இதோ அவ்வாகுகள்:

3:154  "“நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!” என்று (நபியே!) நீர் கூறும். (இவ்வாறு ஏற்பட்டது) உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை (அகற்றிச்) சுத்தப்படுத்துவதற்காகவும் ஆகும் - இன்னும், அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்."

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்.

Monday, February 14, 2011

கேள்விக்கென்ன பதில்?!

என் மகன் அடிக்கடி கேள்விகள் கேட்டுக்கிட்டு இருப்பான்னும் அதுக்கு சான்றா ரெண்டே ரென்டே கேள்விகளையும் தான் பதிவில் சொல்லியிருந்தேன்... மக்கா .... நீங்கள்லாம் என்ன நினைச்சீங்களோ...அதும் ரஜின் நல்லா அனுபவிங்கன்னு வேற சொல்லியிருந்தார்... இதெல்லாம் என் மகன் காதில் விழுந்துடுச்சோ என்னன்னு தெரியலை... அந்த பதிவை போட்ட அடுத்த வாரமே ஒரு நாளில் என்னை கேள்வி கேட்டு துளைச்சுட்டான்... நான் இந்த கேள்விகளை அவனிடமிருந்து எதிர்பார்த்தது தான்..ஆனால் அதுக்கு இன்னும் சில வருடங்கள் போகும்னும் சுலபமா அவனுக்கு புரியவச்சிடலாம்னும் ஒரு நம்பிக்கையோடு இருந்தேன்... ஆனா அவன் இப்பவே இந்த அஞ்சு வயசுலயே ... கேட்டுட்டான்யா... கேட்டுட்டான்யா :(

ம்மா... அல்லாஹ் கேர்ளா (girl) பாயா(boy)? (நான் அவனுக்கு அல்லாஹ்வை ஒருமையில் அல்லாது அவங்க,இவங்கன்னு பன்மையில் அறிமுகப்படுத்தி இருந்ததுதான் அவனுடைய இந்த சந்தேகத்துக்கு காரணமாயிடுச்சு :(  )

அல்லாஹ் கேர்ளும் கிடையாது... பாயும் கிடையாது... நம்மளைத்தான் அல்லாஹ் ஆண் பெண்ணா வச்சிருக்காங்க...

அல்லாஹ் மேலயிருந்து பாக்கிறாங்கன்னு சொன்னியே, பில்டிங் மேலயா இருப்பாங்க...

(என்னே ஒரு கற்பனை..அவ்வ்வ்.)இல்லமா... ஸ்கைல இருந்து பார்ப்பாங்க..அப்பதானே எல்லாரையும் பார்க்க முடியும்?!

அப்ப ஸ்கையிலயிருந்து கீழ விழுந்துட மாட்டாங்களா?

இல்ல..சேர் போட்டு உக்காந்திருப்பாங்க...

சேரை கயிறு போட்டு கட்டியிருப்பாங்களா?

(அவ்வ்வ்..) ஆமா...

அப்ப நாம ஸ்கைக்கு போகணும்னா ஏணி போட்டா ஏறிடலாமா?

இல்லமா.. ஏணி போட்டாலும் ஸ்கை எட்டாது...ரொம்ப தூரத்தில இருக்கு.

அப்ப எப்டி போறது...?

நாமல்லாம் தாத்தா,பாட்டி ஆனதுக்கப்புறம் அல்லாஹ் நம்மளை எடுத்துப்பாங்க...

எப்டி எடுப்பாங்க..அல்லாஹ்க்கு பெரிய கையா?

(ம்ம்...என்ன சொல்றது..முழிக்கிறேன்)

அல்லாஹ்க்கு பெரிய கையா?

அது வந்து...அல்லாஹ்கிட்ட நிறைய பேர் இருக்காங்க..அவங்க பேர் மலக்குகள்..அல்லாஹ் அவங்ககிட்ட யாரை எடுக்க சொல்றானோ அவங்க இங்க வந்து அவங்களை எடுத்துட்டு அல்லாஹ்கிட்ட போய்டுவாங்க...

எப்டி?

அது தெரியலை..அல்லாஹ்வுக்குத் தான் தெரியும்.

சரி..ஸ்கைல என்ன இருக்கும்?

எல்லாம் இருக்கும்..

பெரிய ரைட்டிங் போர்டு, ஸ்கெட்ச் எல்லாம் இருக்குமா?

நீ இப்ப சின்ன பையனா இருக்கிறதுனால இதெல்லாம் உனக்கு பிடிச்சிருக்கு...ஆனா ஸ்கைக்குப் போகும்போது நீ தாத்தா ஆகிடுவல்ல..அப்ப உனக்கு என்ன தேவையோ அதெல்லாம் ஸ்கைல அல்லாஹ் வச்சிருப்பாங்க...

அப்ப டீவியெல்லாம் இருக்குமா...

இங்க நமக்கு போரடிக்குது...அதனால டீவி கொஞ்ச நேரம் பார்க்கிறோம்..ஸ்கைல எப்பவும் நாம் தொழுதுட்டு ஓதிட்டு தான் இருப்போம்...அதனால் டீவியெல்லாம் இருக்காது.

அப்ப நான் மட்டும் தனியாவா போகணும்? (லேசா விசும்பல்)

நீ ஸ்கைக்கு வரும்போது நானும் வாப்பாவும் அங்க இருப்போம்... (ஆமீன்)

அப்ப சரி. ஸ்கைல வேற என்ன இருக்கும்?

நாம இப்ப நல்ல தொழுது ஓதிட்டு இருந்தா அல்லாஹ் நமக்காக ஸ்கைல வீடு தருவாங்க...

அது பெரிய வீடா இருக்குமா? மாடி இருக்குமா? பன்க் பெட்டெல்லாம்(bunk bed) இருக்குமா?

ஆமா எல்லாம் இருக்கும். நமக்கு என்ன வேணுமோ நாம அல்லாஹ்கிட்ட கேட்டா உடனே தருவாங்க.

அப்ப நாம இங்கிருந்து ஒண்ணும் கொண்டு போக வேண்டாமா?

(அவ்வ்)வேண்டாம்... எல்லாமே அங்க புதுசா இருக்கும். அங்க தூசி கிடையாது. மழை, வெயில் கிடையாது...அதனால அங்க எல்லாமே புதுசா இருக்கும். நமக்கு என்ன வேணுமோ அத சாப்பிடலாம். எல்லாமே அங்க சூப்பர் டேஸ்டா இருக்கும்.

ம்ம்ம்...

அல்லாஹ் நமக்கு இதெல்லாம் செய்யணும்னா நாம நல்லா தொழணும்..ஓதணும்..நல்ல பிள்ளையா இருக்கணும்..(சைடு கேப்பில் ஒரு பிட்டு போட்டாச்சு)

ம்ம்...

இதுக்கெல்லாம் தான் நான் உன்கிட்ட எப்பவும் ஓதணும்,தொழணும்னு சொல்றேன். நீ நல்லா தொழுவியாம்மா?

ம்ம்ம்..(அப்புறம் என்னால் முடிஞ்ச அளவு பிட்டு போட்டாச்சு... அல்லாஹ்வால் முடியாதது எதுவுமே இல்லைன்னு என்னால முடிஞ்ச அளவுக்கு அவனுக்கு புரிய வச்சேன்.சரி..சரின்னு தலையாட்டிட்டு இருந்தான்.).
அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு ராத்திரி தூக்கத்தில் என்னவோ சொன்னான்.

என்னமா?

(தூங்கிட்டே) அல்லாஹ் ஏம்மா முடிச்சாங்க?

(என்ன..அல்லாஹ்வா?அல்லாஹ்வையா சொல்றான். ஆஹா பிள்ளை தூக்கத்தில கூட அல்லாஹ்வைப் பத்தி நினைக்கிறானேன்னு பெருமை பிடிபடலை எனக்கு)என்னமா?

(தூங்கிட்டே) அல்லாஹ் ஏம்மா முடிச்சாங்க?

அல்லாஹ் என்ன முடிச்சாங்க?

அல்லாஹ் ஏம்மா ஹோம்வொர்க் முடிச்சாங்க?

(அவ்வ்... எனக்கு அழறதா சிரிக்கிறதானு தெரியலை. அல்லாஹ்வைப் பத்தி அவனுக்கு புரியுற மாதிரி நான் சொல்லலையோ...இல்ல நான் சொன்னதை அவன் வயசுக்கு ஏத்த மாதிரி அவன் புரிஞ்சிக்கிட்டானா..அவன் பெரியவனாகும்போது நான் சொன்னதை சரியா புரிஞ்சிக்குவானா? ஹ்..ம்...யா அல்லாஹ்...உதவி செய்.

இப்பவும் அப்பப்ப அல்லாஹ்வைப் பற்றி ஏதாவது அவனுக்கு தோணினதைக் கேட்டுட்டு இருக்கிறான்..இங்கு ஸ்கை என்று அவனுக்கு நான் சொல்லியிருப்பது சொர்க்கம் ஒன்றைத்தான்... அவனுக்கு நரகத்தை இன்னும் சிறிது நாள் கழித்து அறிமுகப்படுத்தலாம்னு நினச்சிருக்கேன்.இப்போதைக்கு நல்ல பிள்ளையா இருந்தா அல்லாஹ் நமக்கு உதவி செய்வாங்கன்னும் சேட்டை பண்ணினா பூச்சாண்டி வந்து பிடிச்சுட்டு போய்டுவாங்கன்னும் சொல்லி வச்சிருகேன்... இது எவ்வளவு நாள் ஓடுதோ ஓடட்டும். ;)  இன்ஷா அல்லாஹ் என் மகன் பெரியவனாகும்போது இதைப் படிக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை .

Sunday, January 30, 2011

பெண்ணுரிமை!


ஹ்க்கும்... வலைப்பூ ஆரம்பிச்சு எண்ணி மூணு மாசம் ஆகலை (அதென்ன மூணு மாசக்கணக்கு...முளச்சு மூணு இலை விடலைன்னு சொல்றதுல உள்ள அதே கணக்கு தான்...;)), அதுக்குள்ள பெண்ணுரிமை பேசற அளவுக்கு வந்தாச்சான்னு நீங்க நினைக்கிறத நானும் நினச்சேன்... அதுனால பெண்ணுரிமைப் பற்றி நான் எழுதப்போறதில்லை. ஏன்னா உலகத்தில் பெண்ணுரிமை பற்றி பெண்களுக்குத் தெரிந்ததை விட ஆண்கள் அதிகம் தெரிஞ்சு வச்சிருக்காங்க...

பெண்ணுரிமையைப் பற்றி பெண்கள் எதுக்கு தெரிஞ்சு வச்சிருக்காங்கன்னா அதை சமயத்துக்கு தற்காப்பு ஆயுதமா பயன்படுத்திக்கிறதுக்கு...
அதிகம் படிக்காத கிராமத்து பெண்கள் கூட பஞ்சாயத்து தலைவிகளாகவும் மகளிர் சுய உதவிக் குழு அமைத்தும்,இன்னும் பல நல்ல முன்னுதாரணங்களாகவும்  தங்களையும் தாம் சார்ந்த ஊரையும் ஓரளவுக்காவது முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்றாங்க... நகரங்கள்ல பிறந்து வளர்ற பெண்கள் கூட ஒரு ஸ்டேட்டஸ்ஸுக்காக பொறியியலோ மருத்துவமோ படிச்சுட்டு அதைப் பயன்படுத்திக்காம குழந்தைகுட்டி சமையல்னு செட்டிலாயிடுறாங்க... அவங்களுக்கு அப்படி வேலைக்குப் போற எண்ணம் இல்லைன்னா ஆர்ட்ஸ் அல்லது சயின்ஸ் டிகிரி படிச்சிருந்தா அந்த பொறியியல்,மருத்துவ படிப்பு கஷ்டப்பட்டு படிச்சு தாங்கள் சேர்ந்த கிராமத்தின் மற்ற மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்க நினைக்கும் மாணவர்களுக்கு அதிகம் பயன்பட்டிருக்கும். ஏட்டுக்கல்வி கிடச்சிட்டா ஒரு பெண்ணுக்கு முழு சுதந்திரமும் தைரியமும் கிடச்சுடுமான்னா அதுவுமில்ல... அப்படியிருந்திருந்தா "பட்டதாரிப் பெண் தற்கொலை" போன்ற செய்திகளுக்கு இடமில்லையே!நகரத்தில் வாழ்றவங்களுக்கு பத்தோட பதிணொண்ணா தெரியுற அதே கல்லூரி படிப்பு கிராமத்தில் இருக்கிறவங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுக்கிறது. அதே அடையாளம் அவர்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் தைரியத்துடன் எதிர்கொள்ள உதவுகிறது. அதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா ...இருங்க இதையும் சொல்லி முடிச்சுடறேன்...

ஆண்கள் எதுக்கு பெண்ணுரிமையைப் பற்றி தெரிஞ்சுக்கறாங்கன்னா பெண்களிடம் தங்களோட எல்லை இதுவரைதான்..இதுக்கு மேல பேசினா அர்ச்சனை செயல்மூலமாவோ சொல்மூலமாவோ ஆரம்பிச்சுடும்னு அவங்க ஒதுங்கி தங்களுக்கு ஒரு தற்காப்பு ஆயுதமா பயன்படுத்திக்கிறாங்க... ;)

அதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா... என்னோட ஏட்டுக்கல்வி நம் நாட்டோட பெண்கல்வி சதிவீதத்தை உயர்த்திக்க மட்டுந்தாங்க உதவியிருக்கு:(... என் ஆ.கா. அவ்வளவு மோசமானவரான்னெல்லாம் நினச்சுடாதீங்க... யாருக்காக இல்லையோ, அடுத்த வேளை தைரியமா வீட்டுச் சாப்பாடு சாப்பிடணுன்றதுக்காகவாவது என்னோட உரிமைகள்ல மூக்கை நீட்டுறது கிடையாது... அப்பறம் என்னன்னு கேக்கறீங்களா? விஷயம் இதுதான்... என்னோட அஞ்சு வயசு பையன் கேக்கிற கேள்விகளுக்கு பதில் சொல்றதுக்கு நான் படிச்ச ஏட்டுக்கல்வி உதவலைன்னு சொல்ல வந்தேன்:(

போன தடவை ஊருக்கு போயிருந்தப்போ எங்க வீட்டுக்கு வந்தவங்க என் பையனைக் காட்டி 'இது உன் பையனா'ன்னு கேட்டாங்களாம்..நானும் 'ஆமா'ன்னு சொன்னேனாம்... 'நீ ஏன் ஆமான்னு சொன்னே... பாய்ஸ்செல்லாம் அப்பா பசங்க...கேர்ள்ஸ்தான் அம்மா பிள்ளைங்க'ன்னு அவன் பண்ண ஆராய்ச்சியைப் பார்த்து ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்...  என்னடா இது... பத்து மாசம் கஷ்டப்பட்டு சுமந்து பெற்று ராத்திரி பகல்னு பார்க்காம வளர்க்கிறோம்... ஆனா புகழெல்லாம அப்பாவுக்கா...பெண்ணுரிமை என்னாவறது:( ...எப்படி இவனை வழிக்கு கொண்டு வர்றது... அப்படீன்னு பயங்கரமா (அடிக்க வரக்கூடாது;)) யோசிச்சேன்... அப்பதான் தோணுச்சு... அவன்கிட்ட கேட்டேன்... எல்லா பேபீஸும் யார் வயிற்றிலிருந்து வற்றாங்க'ன்னு..அவன் 'அம்மா வயித்திலயிருந்து'ன்னு சொன்னான்... 'அப்ப பாய்ஸும் அம்மா பிள்ளைங்க தானே'ன்னு கேட்டேன்... திருப்தியான பதில் கிடைச்சதுனால அமைதியாயிட்டான்... அவங்க அப்பாவுக்குத்தான் கொஞ்சம் வருத்தம்;).

எனக்கு விடை தெரியாத ஒரு கேள்வி அவன் இன்னும் கேட்டுக்கிட்டு இருக்கான்... உதவுங்க.. பொதுவா அவன் வாங்கிக் கேக்கிற பொருள் அவசியமில்லாதது எதுவும் பிங்க் நிறத்தில் இருந்துச்சுன்னா 'அதெல்லாம் கேர்ள்ஸுக்குரியது'ன்னு சொன்னா திரும்பிக்கூட பார்க்க மாட்டான். சமீபத்துல பிங்க் நிறத்தில் ஒரு பென்சில் பாக்ஸ் அவனுக்கு ரொம்ப பிடிச்சுபோயிடுச்சு... அது கேர்ள்ஸுக்குரியதுன்னு சொல்லியும் 'அப்ப லேடீஸ் மட்டும் ஏன் ஜென்ட்ஸ் காரை ஓட்டுறாங்க'ன்னு ஒரு கேள்வி கேட்டான்... நானும் 'ஹலோ.. லேடீஸ் கார்,ஜென்ட்ஸ் கார்னு ஒண்ணும் கிடையாது... யார் வேணா எந்த கார் வேணா ஓட்டலாம்'னு சமளிச்சேன். அதுக்கு அவன் சொல்றான் ' அப்ப லேடீஸ் ஜென்ட்ஸோட பேண்ட்,ஷர்ட் போடுறாங்கள்ல... எனக்கும் இந்த கேர்ள்ஸ் பென்சில் பாக்ஸ் வாங்கித் தா'....அவ்வ்வ்... முடியலை...என்னை யாராச்சும்  காப்பாத்துங்களேன்...:(....அதாவது பெண்ணுரிமையைக் காப்பாத்துங்க....