அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு
மொத்தம் 48 பாகங்கள்.. நாளுக்கு ஒன்று என்றாலும் ஒன்றரை மாதம் என்று எனக்கு நானே கெடு வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்... ஏன்னா புத்தகம் படிப்பதில் அவ்வ்வ்வளவு ஆர்வம்... ஹி ஹி... ஒரு வருடத்திற்கு முன்பு அப்புத்தகத்தின் விமர்சனங்கள் படித்ததில் இருந்தே எப்படியாவது படிக்க வேண்டும் என்று ஒரு ஆர்வம் இருந்தது. புத்தகம் கையில் கிடைத்தபோது விமர்சனங்கள் அத்தனையும் மறந்து விட்டது.ஆனால் உள்ளடக்கத்தின் மீதிருந்த ஆவல் மட்டும் நினைவை விட்டு அகலவில்லை. அல்ஹம்துலில்லாஹ். புத்தகம் கையில் கிடைத்தது. நான் படித்து முடித்த வேகம் பதிவின் இறுதியில்.... :)
மொத்தம் 48 பாகங்கள்.. நாளுக்கு ஒன்று என்றாலும் ஒன்றரை மாதம் என்று எனக்கு நானே கெடு வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்... ஏன்னா புத்தகம் படிப்பதில் அவ்வ்வ்வளவு ஆர்வம்... ஹி ஹி... ஒரு வருடத்திற்கு முன்பு அப்புத்தகத்தின் விமர்சனங்கள் படித்ததில் இருந்தே எப்படியாவது படிக்க வேண்டும் என்று ஒரு ஆர்வம் இருந்தது. புத்தகம் கையில் கிடைத்தபோது விமர்சனங்கள் அத்தனையும் மறந்து விட்டது.ஆனால் உள்ளடக்கத்தின் மீதிருந்த ஆவல் மட்டும் நினைவை விட்டு அகலவில்லை. அல்ஹம்துலில்லாஹ். புத்தகம் கையில் கிடைத்தது. நான் படித்து முடித்த வேகம் பதிவின் இறுதியில்.... :)
உமர் முக்தார் அவர்களைக் குறித்த தகவல்கள் அதிகமாக அரபு மொழியன்றி வேறு மொழிகளில் இல்லாதநிலையில்,1980களில் ஆதாரப்பூர்வ தகவல்களை மிகவும் சிரமப்பட்டு திரட்டி, மறுமலர்ச்சி வாரஇதழில் தொடராக எழுபது பாகங்களாக வெளியிட்ட ஆசிரியர் நாவலர் அவர்கள், பின்பு புத்தகமாக வெளியிட்டு பலரிடம் கொண்டுசேர்த்திருக்கிறார்கள். இந்த புத்தகம் வெளிவர உதவிய அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.
உலகின் புகழ்பெற்ற சர்வாதிகாரிகளில் ஒருவரான முசோலினியின் பிடியில் லிபிய மக்கள் பட்ட கஷ்டங்கள் எவ்வளவு படித்தாலும் அவற்றை முழுவதும் உணர்ந்து கொள்வதென்பது மிகவும் சிரமமே. அத்தனை கஷ்டங்களுக்கிடையேயும் லிபிய மக்கள் பொறுமையுடன் ஒற்றுமையாகத்தமது ஆட்சியாளர்களை எதிர்கொண்ட விதம், முணுக்கென்றால் நமது சகோதரர்களையே பகைத்து வசைபாடும் நமக்கு மிகவும் வியப்பாகவே படுகிறது. எதிரிகள் தம்மைக் கொடூரமாகத் தாக்கியபோதும் போர் தர்மங்களை முழுவதுமாகக் கடைப்பிடித்து ஒழுகிய பண்பு, இன்றைய இயக்கவாதிகள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
புத்தகத்தின் நாயகர்களை, அவர்களது செயல்பாடுகளை நேரடியாகக் கூறி அறிமுகப்படுத்துவதே அநேக ஆசிரியர்கள் கடைப்பிடிக்கும் வழியாகும். ஆனால், நாவலர் அவர்கள் உமர் முக்தாரின் எதிரிகள் எதிர்கொண்டசவால்கள் மூலமாக, புத்தகநாயகரையும் அவரது சமயோஜிதத்தையும் மனிதாபிமானத்தையும் ஈமானையும் மக்களுக்கு எடுத்துரைத்த விதம் மிக மிக அருமை. இத்தாலிய படைகள் லிபியாவில் சந்தித்த சவால்கள் ஒவ்வொன்றையும் அறிய வரும்போது உமர் முக்தார் அவர்கள் மீது பெரும் மரியாதை ஏற்படுத்தியது. அவர்களது கதாப்பாத்திரத்தின் பேச்சை எப்பொழுது கேட்போம் என்று பேராவலைத் தூண்டிவிட்டது உண்மை.
அதிமுக்கியமாக, எதிரிகளின் தலைவராகப் பதவியேற்று, உமர் முக்தார் அவர்களைக் கொன்று விடுவதற்காகவே லிபியாவிற்கு அனுப்பப்பட்ட ஜெனரல் கிராஸியானி, உமர் முக்தார் அவர்கள் சார்ந்த சுதந்திரப்படைக்கு ஆதரவைமட்டுமின்றி, அவர்களுடன் சேர்ந்து லிபிய மக்களுக்கு விடுதலை வாங்கித் தரவேண்டும் என்ற விருப்பத்திலும்சுதந்திர போராட்ட படையின் போர் தர்மங்களை ஒரு எதிரியாகக் கண்டும் அனுபவித்தும் இருந்த காரணத்தினாலும் இஸ்லாத்தைத் தழுவியது, சுதந்திர போராட்ட குழுவின் பெரு வெற்றியாக அமைந்தது எனலாம்.
கொடுங்கோலன் முசோலினியின் நெருங்கிய நண்பருக்கு அமைந்திருந்த கிராஸியானியின் மனதில் ஆரம்பத்திலிருந்தே குடிகொண்டிருந்த இரக்கக்குணம் நமக்கு வியப்பைத்தந்தாலும் சற்று யோசித்தால் அதற்கான மூலக்காரணம் எது என்று நமக்குப் புலப்படும். ஒவ்வொரு அற்ப காரணத்திற்காகவும் முசோலினி கத்தி கூச்சலிடும்போதெல்லாம் அமைதி காத்து, முசோலினிக்கு ஏற்ற வகையில் அமைதியாகக் கருத்துத் தெரிவித்து,ஆக மொத்தத்தில் முசோலினியை முழு நேரமும் சாந்தப்படுத்தும் பணியைத் தொடர்ந்து செய்து வந்ததாலேயே,ஜெனரல் கிராஸியானியின் லிபிய மக்கள் மீதான கருணைப்பார்வைக்கும் காரணமாக இருந்திருக்கலாம். கொடுங்கோலன் தனது தோல்விக்குத் தானே வழிவகுத்துக் கொடுத்ததாகவே எனக்குத்தோன்றியது.
லிபியாவின் சுதந்திரப் போராட்ட குழுவின் ஒவ்வொரு ரகசிய நடவடிக்கையும் ஆக்ரோஷத்துடனும் அதே சமயம் நியாயத்துடனும் நிகழ்த்திய கொரில்லா தாக்குதலும் அத்தனை கிடுக்கிப்பிடியிலும் அவர்களுக்கு இருந்த சுதந்திர வேட்கையும் அதற்காகத் தம் இன்னுயிரையும் நீக்க முன்வந்ததும் நம்மை பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு வினாடியும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் நிலையில் சிறிது தகவல் கசிந்தாலும் தமது மொத்த இயக்கத்திற்கும் நாட்டின் மக்களுக்கும் எதிர்காலத்திற்கும் பலத்த உயிர், பொருள் சேதம் நிச்சயம் என்ற சூழ்நிலையில், அக்குழு உறுப்பினர்களின் ஒற்றுமை, நாம் காலத்திற்கும் மீண்டும் மீண்டும் படித்துப் படிப்பினை பெற வேண்டியது முஸ்லிம்களாகிய நம் அனைவருக்கும் தவிர்க்கமுடியாது. முழுக்க முழுக்க நிதானத்தையும் சுதாரிப்பையுமே கையாண்டு நல்லதொரு முன்னுதாரணத்தை நிறுவிவிட்டு சென்றுள்ளார்கள் உமர் முக்தார் அவர்கள்.
பொருளோ ஆயுதமோ ஏன் உறுப்பினர்கள் கூட அதிகம் இல்லாத சிறிய குழு ஒன்று, இத்தாலியின் சர்வாதிகாரி முசோலியின் படையை எதிர்கொள்ள, தம் நாட்டின் பாலைவனம் சார்ந்து தமக்கு இருந்த அறிவை மட்டுமே மூலதனமாகக் கொண்டு மிக அருமையான திட்டங்கள் தீட்டிய சம்பவங்கள் எத்தனை முறை படித்தாலும் சலிக்காது.
க்ளைமாக்ஸ் வெகு சீக்கிரத்தில் வந்து விட்டதாக மனதில் ஒரு எண்ணம் தோன்றியது தவிர்க்க இயலவில்லை. ஒரு வேளை எழுத்தின் சுவாரசியம் அவ்வாறு நினைக்கச் செய்திருக்கலாம். புத்தகம் முழுவதும் விறுவிறுப்பு, சுவாரசியம், உத்வேகம் நிறைந்துள்ளன.
இனி நான் புத்தகத்தை முடித்த விதம்.. ஹி ஹி...
கிடைத்த அன்றே 11 பாகங்கள் மளமளவென படித்தாயிற்று. அடுத்த நாளில் 10 பாகங்கள் முடித்தாயிற்று.என்னைஎன்னால் நம்பவே முடியவில்லை. புத்தகம் என்றாலே காத தூரம் ஓடும் நானா... இரண்டு நாட்களில் 21 பாகங்கள் முடித்தேன்? அடுத்த பதினாறு பாகங்களையும் சந்தர்ப்பம் அமையும் சூழல்களில் எல்லாம் அடுத்த பத்துநாட்களிலும் இறுதி நாளில் இறுதி 12 பாகங்களை ஒரே மூச்சிலும் படித்தேன். புத்தகத்தை முடித்தேன். 1 1/2 மாதம் என கெடு வைத்துத் துவங்கிய பணியினை இரண்டு வாரங்களில் முடிக்க வைத்து விட்டார் நாவலர் அவர்கள். எல்லாப் புகழும் அல்லாவிற்கே.
கலைஞர் கருணாநிதி இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளைப் படித்து அறிந்து கொண்டதாகக் கூறியிருப்பது மற்றுமொரு சிறப்பு. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று நிகழ்வுகள் நிறைந்த புத்தகம்.
No comments:
Post a Comment