ஆண்டாண்டு காலமாக உலகம் முழுவதும்
ஆண்டு பிறப்பைக் கொண்டாடும் கூட்டமும் கொண்டாடுபவர்களை முட்டாள்கள் என்று கூறும் கூட்டமும்
இருந்து கொண்டே வருகிறது. நான் இப்போதைக்கு அவர்களில் யார் சரி யார் தவறு என்று கருத்து
கூறுவதில் நுழையவில்லை.
பள்ளி, கல்லூரி காலங்களில்
புத்தாண்டு தினம் இந்தியாவில் விடுமுறையாகக் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதால் அன்று ஒரு விடுமுறைக்கான
சந்தோஷம் மட்டுமே எனக்கு இருந்ததுண்டு. மற்றபடி இறைநாட்டத்தால் நான் சார்ந்திருந்த
ஊரில் அதற்கான கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறும் வழக்கம் இல்லாதததால் அன்றைய தினம்
வார விடுமுறை போலவே மனதில் பதிந்திருந்தது.
கடந்த 2014 வருடப்பிறப்பு
தினமும் வழக்கமான விடுமுறையாகக் கழிந்திருக்க வேண்டியது; குழந்தைகளுக்கான குளிர்கால விடுமுறை மற்றும் உறவினர்களின் அமீரக விசிட்
இரண்டும் சேர்ந்து இம்முறை துபையில் வருடந்தோறும் ஜனவரி 1 ஆரம்ப நிமிடங்களில் துபை புர்ஜ்
கலிஃபாவில் நடைபெறும் ஃபயர்வொர்க்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றால் என்ன என்ற யோசனையைத் தோற்றுவித்தன. ஆறே நிமிடங்களில் 450000 ஃபயர்வொர்க்ஸ் காண்பிக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அந்த வரலாற்றில் இடம்பெற (?) அடுத்த சில மணிநேரங்களில் துபைக்குக் குடும்பத்தினரோடு கிளம்பியாகிவிட்டது. வழக்கம்போல்
தொலைதூர பயணத்திற்கு செய்து கொள்ளும் எந்த முன்னேற்பாடும் இல்லை. இம்மாம்பெரிய அரசாங்கம்
செய்திருக்கும் ஏற்பாடாகிற்றே…. அதில் பங்கேற்க வரும் மக்களுக்கு அனைத்து வசதிகளும்
செய்து வைத்து நமக்காகக் காத்திருக்கும் என்ற உற்சாகத்தில் :-) வண்டியையும் விட்டாச்சு.
துபையின் எல்லையில் வாகனங்களை
ஓரிடத்தில் பார்க் செய்துவிட்டு உலகப்புகழ்வாய்ந்த துபை மெட்ரோவில் (Guinness World Records has declared Dubai Metro as the world's longest fully automated metro network spanning at 75 kilometres (47 mi))
பயணித்து உலகிலேயே அதிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபா அருகில்
செல்லலாம் என்பது திட்டம். விசிட் செய்திருக்கும் உறவினர் ஒருவர் அல்சர் பேஷண்ட் என்பதால்
ஃபயர்வொர்க்ஸ் ஆரம்பிக்கும் முன்பு உண்ணும் கடமையை அனைவரும் முதலில் முடித்துவிடுவது
என்று முடிவெடுத்தோம். அக்கம்பக்கம் இருந்த அனைத்து உணவகங்களிலும் உணவிருந்ததோ இல்லையோ கூட்டம் இருந்தது.
தேடியலைந்து ஒரு உணவகத்தில் இருந்து வரிசையில் காத்து நின்று, கூட்டத்தில் மகனின் காலணி
தொலைத்து, வாங்கிய உணவை வயிறுநிறைய உண்டாகிற்று. அல்ஹம்துலில்லாஹ்.
உணவுவேட்டையை முடித்த
சில மணித்துளிகளில் ஃபயர்வொர்க்ஸும் கண்டுகளித்தாகிற்று. சரி… கிளம்பலாம் என எழும்பினால்
அலையலையாய் மக்கள் கூட்டம். அருகிலிருந்த மெட்ரோ நிலையத்தை அடைய கிட்டத்தட்ட 2 மணிநேரம்
காத்திருந்த காத்திருப்பில் வீடு போய் சேருவோமா என்று மனதில் ஏற்பட்ட திகிலை சொல்லியே
ஆகவேண்டும். அவ்வளவு கூட்டம். மக்கள் கூட்டத்தை சமாளிக்க காவல்துறை மிக அதிகமாகவே திணறியது.
5 நிமிட தூரங்களுக்கிடையில் தடுப்புகளை வைத்து ஒரு பக்கம் மக்களை நிறுத்தி மறு பக்கம்
மக்களை செல்ல அனுமதித்து, கூச்சல் குழப்பம், பனி, தூக்கக்கலக்கம், கிட்டத்தட்ட சாலையில்
சிறை வைக்கப்பட்ட உணர்வு. ஒரு வழியாக அருகிலிருந்த மெட்ரோ நிலையத்தினை அடைந்தாகிற்று.
நடந்த வந்த பாதை முழுவதும் காலணிகள் எங்கும் பரவி கிடந்தன. ஏதோ கலவர பூமியில் நடந்து
செல்வது போன்ற ஒரு எண்ணம்.
சரி… மெட்ரோவில் ஏறியாகிற்று.
உலகத்தரம் வாய்ந்ததாகிற்றே… அடுத்த சில நிமிடங்களில் நம் வாகனத்தில் ஏறியமர்ந்தால்
போதும் என்ற எண்ணத்திலும் மண் அல்ல… பாறாங்கல்லே விழுந்தது. கிளம்பிய சில நிமிடங்களிலேயே
மீண்டும் கிளம்பிய இடத்திற்கே வந்து நின்றது மெட்ரோ… ஒரு அறிவிப்பு இறங்க முயற்சிக்க
வேண்டாம் என்றும் அடுத்த அறிவிப்பு இத்துடன் மெட்ரோ சேவை முடிந்தது என்றும் மாறி மாறி
வந்து பயணிகளை திகிலடையச் செய்தது. உறக்கக்கலக்கத்தில் இருந்த பலர், இந்த திகில் எதுவும்
இல்லாமல் உறங்கிவிட ஒரு வழியாக புறப்பட்டது மெட்ரோ. ஒரு வழியாக மகிழுந்துகளில் ஏறியமர்ந்தோம்.
அபுதாபிக்கு வந்து சேர்கையில் மணி காலை 7.
என் கேள்வியெல்லாம் ஏன்????
எதற்காக இந்த புத்தாண்டு
கொண்டாட்ட ஏற்பாடு????
யாரை மகிழ்விக்க இந்நிகழ்ச்சியினை
துபை அரசு ஏற்பாடு செய்துள்ளது????
இதனால் யாருக்கு என்ன
லாபம்????
உலகளவில் எத்தனையோ சாதனைகள்
புரிந்துள்ள துபை, இந்த சிறிய விஷயத்தில் சமாளிப்பதில் சிரமம் என்று தெள்ளத்தெளிவாக
அறிந்தும் தன் நாட்டு மக்களை அலைக்கழிப்பது ஏன்????
புத்தாண்டு கொண்டாட நினைக்கும்
மக்களுக்கு புத்திமதி சொல்ல துணிவில்லை என்றாலும் குறைந்தபட்சம் ஒதுங்கிக்கொள்ளாமல்
அவர்களை முட்டாளாக்குவது ஏன்????
அல்லது இக்கொண்டாட்டத்தில்
அறிவில்லாமல் பங்கேற்ற மக்களுக்கு இந்த சிரமங்கள் தேவையான பாடங்களை புகட்டிவிடும் என்ற எண்ணமா????
கின்னஸ் சாதனை படைத்து
வரலாற்றில் தன் பெயர் பதிக்க, தன் நாட்டு மக்களின் நேரம், பொருள், சக்திகளை வீணாக்க
நினைப்பது ஏன்????
[hide]Climate data for Dubai
|
|||||||||||||
Month
|
Jan
|
Feb
|
Mar
|
Apr
|
May
|
Jun
|
Jul
|
Aug
|
Sep
|
Oct
|
Nov
|
Dec
|
Year
|
Record high °C (°F)
|
31.6
(88.9) |
37.5
(99.5) |
41.3
(106.3) |
43.5
(110.3) |
47.0
(116.6) |
46.7
(116.1) |
49.0
(120.2) |
48.7
(119.7) |
45.1
(113.2) |
42.0
(107.6) |
41.0
(105.8) |
35.5
(95.9) |
49
(120.2) |
Average high °C (°F)
|
24.0
(75.2) |
25.4
(77.7) |
28.2
(82.8) |
32.9
(91.2) |
37.6
(99.7) |
39.5
(103.1) |
40.8
(105.4) |
41.3
(106.3) |
38.9
(102) |
35.4
(95.7) |
30.5
(86.9) |
26.2
(79.2) |
33.4
(92.1) |
Daily mean °C (°F)
|
19
(66) |
20
(68) |
22.5
(72.5) |
26
(79) |
30.5
(86.9) |
33
(91) |
34.5
(94.1) |
35.5
(95.9) |
32.5
(90.5) |
29
(84) |
24.5
(76.1) |
21
(70) |
27.5
(81.5) |
Average low °C (°F)
|
14.3
(57.7) |
15.4
(59.7) |
17.6
(63.7) |
20.8
(69.4) |
24.6
(76.3) |
27.2
(81) |
29.9
(85.8) |
30.2
(86.4) |
27.5
(81.5) |
23.9
(75) |
19.9
(67.8) |
16.3
(61.3) |
22.3
(72.1) |
Record low °C (°F)
|
6.1
(43) |
6.9
(44.4) |
9.0
(48.2) |
13.4
(56.1) |
15.1
(59.2) |
18.2
(64.8) |
20.4
(68.7) |
23.1
(73.6) |
16.5
(61.7) |
15.0
(59) |
11.8
(53.2) |
8.2
(46.8) |
6.1
(43) |
Precipitation mm
(inches)
|
18.8
(0.74) |
25.0
(0.984) |
22.1
(0.87) |
7.2
(0.283) |
0.4
(0.016) |
0.0
(0) |
0.8
(0.031) |
0.0
(0) |
0.0
(0) |
1.1
(0.043) |
2.7
(0.106) |
16.2
(0.638) |
94.3
(3.711) |
Avg. precipitation days
|
5.4
|
4.7
|
5.8
|
2.6
|
0.3
|
0.0
|
0.5
|
0.5
|
0.1
|
0.2
|
1.3
|
3.8
|
25.2
|
% humidity
|
65
|
65
|
63
|
55
|
53
|
58
|
56
|
57
|
60
|
60
|
61
|
64
|
59.8
|
Mean monthly sunshine hours
|
254.2
|
229.6
|
254.5
|
294.0
|
344.1
|
342.0
|
322.4
|
316.2
|
309.0
|
303.8
|
285.0
|
256.6
|
3,511.4
|
Source #1: Dubai Meteorological
Office[4]
|
|||||||||||||
விக்கிபீடியாவின் இந்த சார்ட்படி டிசம்பரை விட ஜனவ்ரியில் அதிக குளிர் அமீரகத்தில் பதிவாகியிருப்பது தெரிய வருகிறது. அப்படியெனில் ஜனவரியில் தானே குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும்?? யாருக்காக டிசம்பரில் 20ந் தேதியில் இருந்து ஜனவரி 2ந்தேதி வரை விடுமுறை விட வேண்டும்?? டிசம்பரை விட ஜனவரியில் தான் அதிக பனியும் சமயத்தில் மழையும் பொழிவதை மக்கள் உணர்ந்திருக்கும்போது ஆட்சியாளர்கள் அறியாதது அதிர்ச்சியாகவே உள்ளது.
நோன்பிற்குப் பின்பும் ஹஜ்ஜிற்குப் பின்பும் மட்டுமே பெருநாள் கொண்டாட்டங்களை வகுத்துத்தந்த மார்க்கத்தைப் பின்பற்றும் ஆட்சியாளர்கள், தமது நாட்டில் இத்தகைய கொண்டாட்டங்களை ஊக்கப்படுத்துவது வியப்பாகவே உள்ளது. உலகில் எத்தனையோ நாடுகளில் மக்கள் இஸ்லாமிய ஆட்சிக்காக ஏங்கித் தவிக்கும் காலத்தில், கைகளில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது இவர்களுக்கு?
உலகில் அழகிய முன்மாதிரி ஆட்சியினைப் புரிய இவ்வாட்சியாளர்களுக்குத் தேவையான விழிப்புணர்வத் தரவும் மார்க்க அறிவைய இவ்வாட்சியாளர்களுக்கும் நமக்கும் இறைவன் அதிகப்படுத்திக் கொடுக்கவும் ப்ரார்த்தனை செய்வோம்.
புத்தாண்டு தினத்தைக் கொண்டாடி அந்த வருடத்தை மகிழ்வோடு வரவேற்றால் அந்த வருடம் முழுவதும் மகிழ்வோடு கழியும் என்று கூறும் மக்கள் எனக்கென்ன பதில் வைத்திருக்கிறார்கள்?? உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று கூறுவது என் காதில் கேட்கிறது. அது பதில் இல்லாதவர்களின் பதில் என்று நான் கூறுவது உங்களுக்குக் கேட்கிறதா?? இந்த வருடத்தின் முதல் நாளைத் தவிர இன்று வரை இறையருளால் மகிழ்வாகவே இருக்கிறேன். கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லையெனில் ஜனவரி 1ந்தேதியும் நிம்மதியுடன் இருந்திருப்பேன்.
9 comments:
// இக்கொண்டாட்டத்தில் அறிவில்லாமல் பங்கேற்ற மக்களுக்கு இந்த சிரமங்கள் தேவையான பாடங்களை புகட்டிவிடும் என்ற எண்ணமா????//
நீங்க ஒரு அரிச்சந்திரின்னு நிரூபிச்சிட்டீங்க....
// இந்த வருடத்தின் முதல் நாளைத் தவிர இன்று வரை இறையருளால் மகிழ்வாகவே இருக்கிறேன்.//
ஒருவேளை புத்தாண்டை புர்ஜ் கலிபாவில் கொண்டாடியதால் தான் இந்த வருடம் மகிழ்வா போயிகிட்டு இருக்கோ???? ஹி..ஹி..ஹி..ஹி
போஸ்ட் எழுதிய விதம் அருமையா இருக்கு... உங்களுக்குள் நல்ல எழுத்து திறமை இருக்கு... முயன்றால் நல்ல ஆக்கங்களை படைக்கலாம்...
குட் வொர்க்...
/
நீங்க ஒரு அரிச்சந்திரின்னு நிரூபிச்சிட்டீங்க./
:)
/ஒருவேளை புத்தாண்டை புர்ஜ் கலிபாவில் கொண்டாடியதால் தான் இந்த வருடம் மகிழ்வா போயிகிட்டு இருக்கோ???? / கொண்டாட்டத்திற்காக அல்ல.. ஒரு பிக்னிக் போல் சென்று வந்தோம். அவ்வளவே.
உங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி.
ஒரு நாட்டு அரசரை விடுங்க, நம்ம வீட்டுல அதிகாரம் நம்ம கையில இருந்தும், நம்மால எந்த அளவுக்கு இஸ்லாமைச் செயல்படுத்த முடியுது? கணவன் - மனைவி, பிள்ளைகள் லெவலில் ஏதோ ஓரளவு ஓகேன்னாலும், மாமியார், அம்மா லெவலில் நம்மால் எந்தளவு தடுக்க முடியுது? இன்னி வரை என் அம்மாவை தேவையற்ற விருந்துகள் வைப்பது, சீர்கள் செய்வதிலிருந்து என்னால் தடுக்க முடியலை. :-)
மேலும், இங்கு நடப்பது மன்னராட்சி - ஷரியாவைச் சட்டமாகக் கொண்ட மன்னராட்சி. அவ்வளவுதான். இஸ்லாமிய ஆட்சின்னு நீங்களா நினைச்சுகிட்டா? :-)
துபாயை உலக அளவில் வர்த்தகத்தில் முன்னிலைப் படுத்துவதற்காக இதுபோன்ற விளம்பரங்கள் தேவையாக இருக்கலாமாயிருக்கும். என்னைப் பொறுத்த வரை, இது நம்மைப் போல நடுத்தர மக்களுக்கு இலவசமா கிடைக்கிற கண்காட்சி. (அமெரிக்காவுல இதைவிட சின்ன அளவுல உள்ள வாண வேடிக்கைக்கு 15-20 டாலர் டிக்கெட்டாம்!!) மேலும், இதன்மூலம் எத்தனை பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்பதை எண்ணிப் பார்க்கிறேன்.
நம்ம நாட்டைவிட இங்க எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடக்குது. உதாரணமா, அரசு வேலைவாய்ப்புகளில் (வெளிநாட்டினருக்கு) இலஞ்சம், பரிந்துரை, சாதி முக்கியத்துவம் எதுவும் இல்லை. மேலும், அமீரகம் பல நலிந்த நாடுகளுக்குச் செய்யும் உதவிகள் நாம் எண்ணியும் பார்க்க முடியாதது. அல்ஹம்துலில்லாஹ். அவர்களின் இந்த கொடையே நாட்டு மக்களைக் காக்கிறது என்று எண்ணிக் கொள்வேன்.
அப்புறம் இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.
//இந்த சிறிய விஷயத்தில் சமாளிப்பதில் சிரமம் என்று தெள்ளத்தெளிவாக அறிந்தும் //
சமாளிக்க முடியாம திணறினார்களா? ஏதாவது அசம்பாவிதம் நடந்துதா? இல்லையே? அப்புறம் எப்படி திணறினார்கள்னு சொல்றீங்க? இதுவரை எனக்குத் தெரிந்து, இதுபோன்ற பெரிய கூட்டங்களை, அழகாத் திறமையாச் சமாளிக்கிறாங்கன்னுதான் பாத்து/கேட்டு இருக்கேன். எந்தச் சின்ன அசம்பாவிதமும் இதுவரை நடக்கலை, அல்ஹம்துலில்லாஹ்.
ஆமா, இந்தச் சின்னக் கூட்டத்துக்கே இப்புடி பதர்றீங்களே, நாளை இன்ஷா அல்லாஹ் ஹஜ்ஜுக்குப் போனா என்ன சொல்வீங்க? அங்க இதவிட பிரம்மாண்டமான கூட்டம் இருக்குமே? :-)))
சரி, இதெல்லாம் ஒரு மனுவா எழுதி நாட்டு ராஜாகிட்ட கொடுக்கிறது? அட்லீஸ்ட் ஒரு ‘வாசகர் கடிதமாவது’ எழுதுறது? (ஹி..ஹி..ஹி... )
/கணவன் - மனைவி, பிள்ளைகள் லெவலில் ஏதோ ஓரளவு ஓகேன்னாலும், மாமியார், அம்மா லெவலில் நம்மால் எந்தளவு தடுக்க முடியுது?/
கரக்ட்... நம் வீட்டுக்கு நாம் தான் அதிக உரிமையுள்ளவர்கள்.. அது போல் நம் அம்மா/மாமியார் வீட்டிற்கு நம் அம்மா/மாமியார் தான் அதிக உரிமையுள்ளவர்...:)
நாட்டரசர் ஒரு ச்ட்டம் இயற்றிவிட்டால் அதை மாற்றுவோர் யார்??
மேலும், இங்கு நடப்பது மன்னராட்சி - ஷரியாவைச் சட்டமாகக் கொண்ட மன்னராட்சி. அவ்வளவுதான். இஸ்லாமிய ஆட்சின்னு நீங்களா நினைச்சுகிட்டா? :-) // இஸ்லாமிய ஆட்சி நடத்த வாய்ப்பு இருந்தும் அலட்சியமா இருக்காங்கன்னு சொல்ல வந்தேன்.:)
/இதன்மூலம் எத்தனை பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்பதை எண்ணிப் பார்க்கிறேன்./ வேலைவாய்ப்பு நிரம்பி இருப்பதும் அதனால் பயனடைவதும் நல்ல விஷயங்க்கள் தான்... ஆனால் ஹலாலானதாக இருக்க வேண்டியதும் அவசியம் அல்லவா??
/நம்ம நாட்டைவிட இங்க எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடக்குது. உதாரணமா, அரசு வேலைவாய்ப்புகளில் (வெளிநாட்டினருக்கு) இலஞ்சம், பரிந்துரை, சாதி முக்கியத்துவம் எதுவும் இல்லை. மேலும், அமீரகம் பல நலிந்த நாடுகளுக்குச் செய்யும் உதவிகள் நாம் எண்ணியும் பார்க்க முடியாதது. அல்ஹம்துலில்லாஹ். அவர்களின் இந்த கொடையே நாட்டு மக்களைக் காக்கிறது என்று எண்ணிக் கொள்வேன்./// அல்ஹம்துலில்லாஹ்.
/சமாளிக்க முடியாம திணறினார்களா? ஏதாவது அசம்பாவிதம் நடந்துதா? இல்லையே? அப்புறம் எப்படி திணறினார்கள்னு சொல்றீங்க? // இறையருளால் அசம்பாவிதம் எதுவும் நான் அறிந்து இல்லை... ஆனால் அங்கு வந்திருந்த பலருக்கும் பலவித வசதியின்மைகள் இருந்தது உண்மைதான்.. உதாரணம் தான் நான் சொல்லியிருக்கும் மெட்ரோ விஷயம், உணவுத் தட்டுப்பாடு.
/ஆமா, இந்தச் சின்னக் கூட்டத்துக்கே இப்புடி பதர்றீங்களே, நாளை இன்ஷா அல்லாஹ் ஹஜ்ஜுக்குப் போனா என்ன சொல்வீங்க? அங்க இதவிட பிரம்மாண்டமான கூட்டம் இருக்குமே? :-)))/ இந்த விஷயத்தில் இறைவனின் உதவி கேட்க முடியும் என்ற தைரியம் தான்... துஆ செய்யுங்கள். :)
/சரி, இதெல்லாம் ஒரு மனுவா எழுதி நாட்டு ராஜாகிட்ட கொடுக்கிறது? அட்லீஸ்ட் ஒரு ‘வாசகர் கடிதமாவது’ எழுதுறது? (ஹி..ஹி..ஹி... )/ வாசகர் கடிதம் எழுத விருப்பம் தான்.. என் ஆங்கிலத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு நான் சொன்னதுக்கு மாற்றாக நடவடிக்கை எடுத்துடக்கூடாதேன்ற பயம் தான் காரணம்.ஹா..ஹா...
Post a Comment