எங்க வீட்டு சின்னத்துரை ஸ்கூல் போக ஆரம்பிச்சாச்சு... வீட்டில் இருக்கும்வரை எழுத்துகளும் எண்களும் எண்ணிக்கையும் மட்டுமே சொல்லிக்கொடுத்தேன். ரைம்ஸ் நெட்டில் பார்ப்பதோடு சரி. அவன் விரும்பும் நேரங்களில் தானாகப் படித்துக்கொண்டிருப்பான். ஸ்கூல் சேர்ந்த புதிதில் சில புதிய ரைம்ஸ் சொல்லிக்கொடுத்ததில் அவனுக்கு அதிக சந்தோஷம்... எப்பொழுதும் வாயில் ஏதேனும் ஒரு ரைம்ஸ்... நானே சில நேரங்களில் ரைம்ஸ் படிக்கும் அளவுக்கு... ... அதனைக் கண்ட பெரியத்துரை.... என்னை பேபி என்று கிண்டல் அடிக்கும் அளவிற்கு...அவ்வ்வ்...
ஒரு சமயம் ப்ளா ப்ளா ப்ளேக்ஷீப் என்று படிக்க... சிரிப்புடன் அது ப்ளா ப்ளா இல்லை.. பா பா என்றேன்... இல்லை .. அது ப்ளா ப்ளாதான் என்றான்.. முடீல. ஒகே என்று கூறி அத்தோடு விட்டாச்சு...
திடீரென்று ஒரு நாள் புது ரைம்ஸ் படித்தான். காட் இஸ் யம்மி.. காட் இஸ் யம்மி...என்று ஒரு ரைம்ஸ் படிக்க... அதிர்ந்து போய், அவனுடைய புக்கைத் திறந்தால்... அது காட் இஸ் நியர் மி.. காட் இஸ் நியர் மி...என்றிருந்தது... கிர்ர்ர்... இதையும் மாற்ற முடியாமல் தோற்றேன்... என்ன கொடுமை இது.. காட் இஸ் யம்மி... உண்மையிலேயே வீட்டில் நடக்கும் இந்த கொடுமையைக் கூட தட்டிக்கேட்க முடியவில்லை.... நாமெல்லாம் பர்மாஆஆவில் நடக்கும் கொடுமைகளுக்கெதிராகக் குரல் கொடுத்து... கஷ்டம் என்று தோன்றியது.
ஒரு நாள் அவனிடம் “நான் சொன்ன வேலையை நீ செய்யவில்லை.. நான் உன்னுடன் பேச மாட்டேன்” என்றேன்.
அவனது வாப்பாவும் “ம்மா.. இனி உன்னுடன் பேச மாட்டாங்க.. இனிமேல் நான் தான் உன் ஃப்ரெண்ட்” என்றார்.
சிறிது நேரம் மவுனம் காத்துவிட்டு, “ம்மா.. தண்ணீர் தா... தாகமா இருக்கு” என்றான்.
கொஞ்சமும் யோசிக்காமல், தண்ணீர் கொடுத்தேன். வாங்கிக் குடிக்கும் முன், “வாப்பா... ம்மா நான் சொன்னதைக் கேட்டு தண்ணி தந்துட்டாங்க.. ம்மா தான் என் ஃப்ரெண்ட்.. நீங்க இல்லை” என்றான்.
அம்மா... பசிக்குது என்றவுடன் அம்மாவுடன் போட்ட சண்டை முடிந்துவிடும் என்று ஃபேஸ்புக்கில் எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. மாஷா அல்லாஹ்... பிள்ளைகள் எப்படியெல்லாம் யோசித்து காய் நகர்த்துகிறார்கள். பாசத்தில் தோற்பது என்பது இதுதானோ?
ஒரு நாள் ஸ்கூலில் இருந்து வந்ததும்... “ம்மா.. இன்னைக்கு ஸ்கூலில் ஐஸ்கிரீம் பார்த்தேன்” என்றான்.
போச்சு.. ஸ்கூலில் ஐஸ்கிரீம் எல்லாம் விற்க ஆரம்பித்துவிட்டார்களா.. இனி ஐஸ்கிரீம் வாங்க காசு கேட்பானோ என்று படபடவென்று என்னவெல்லாமோ யோசனைகள்...
எங்க பார்த்தே... க்ளாசிலா.. க்ளாசிற்கு வெளியேவா..
வெளியே...
ஐஸ்கிரீம் கடையிலா... (காண்டீன் என்பதற்குப் பதில்.. கடையா என்று கேட்டேன்)
கடை எல்லாம் இல்லை...
அப்போ ஸ்கூலுக்கு வெளியே பார்த்தாயா..
இல்லை...
அப்போ ஃப்ரெண்ட் சாப்பிட்டுக்கொண்டிருந்தானா...
ஒட்டியிருப்பதை எல்லாம் சாப்பிட முடியாது...
அவ்வ்வ்... ஐஸ்கிரீம் படத்தை ஒட்டியிருப்பதைப் பார்த்தியா...
ஆமா...
(கிர்ர்ர்ர்....இதை முதல்லயே சொல்லியிருக்கலாமேடா.... ஷப்பா....முடீல...)
7 comments:
ரொம்பவும் அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்! பாசம் சொட்டும் இந்தப்பதிவை நானும் ரசித்துப்படித்தேன்!
வருகைக்கும் ரசித்துப்படித்தமைக்கும் மிக்க மகிழ்ச்சி அக்கா... :)
சந்தோஷமா இருக்கு படிச்சோன
சந்தோஷமா இருக்கு படிச்சோன
சந்தோஷமா இருக்கு படிச்சோன
நீங்கள் படித்ததில் எனக்கும் மகிழ்ச்சி ஷீரின் பானு
அப்படியே தாலாட்டும் விதமாக எழுத்து நடை ரொம்ப அருமையாக இருந்தது
Post a Comment