Sunday, May 27, 2012

தி ஃபர்ஸ்ட் ஸ்ட்ரெஸ்


(இப்பதிவுக்கும் ஹுஸைனம்மாவின் டென்த் டென்ஷன் பதிவுக்கும் சம்பந்தமில்லை ஹி..ஹி... ;-)))
வாங்க..வாங்க... என்னை யாருன்னு தெரியுதா? நாந்தான் என்றென்றும்16 அப்டீன்ற பேர்ல ப்ளாக் நடத்திட்டிருக்கிற (?) பானு...அப்பப்ப இப்டி எனக்கு நானே இன்ட்ரொ கொடுக்கவேண்டியதாயிருக்கு...:(...


கிட்டத்தட்ட ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு போயிட்டு வந்து பார்த்தா நம்ம பெரியதுரைக்கு விடுபட்ட பாடங்கிறாங்க... வீட்டுப்பாடங்கிறாங்க... தினமொரு வகுப்புத்தேர்வுங்கிறாங்க... ப்ராஜக்ட்டுங்கிறாங்க... அஸ்ஸெஸ்மென்டுங்கிறாங்க.... முடீல... பெரியதுரைன்ன உடனே ரொம்ப பெரிய்ய்ய்யதுரைன்னு நினச்சிடாதீங்க..... ஜஸ்ட் ஒண்ணாங்கிளாஸ் தான்.... ஹ்..ம்... மண்டை காயுது... பெண்டு நிமிருது.... கண்ணு இருளுது...இப்டி எல்லா டயலாக்ஸுமே இப்ப என் நிலமைக்கு பொருந்துது... :-((...ஓ..கே...ஸ்டாப்பிங் தெ பொலம்பல்ஸ்.......


ஊர்ல இருக்கும்போது நம்ம அய்யாதுரைக்கு கண் செக் பண்ணிட்டு லென்ஸ் மாத்திட்டு அப்படியே ஃப்ரேமையும் மாத்தலான்னு ஒவ்வொரு ஃப்ரேமா போட்டு பாத்து இது நல்லாருக்கா...இது நல்லாருக்கான்னு கேட்டுக்கிட்டிருந்தார் (கடையில் செலக்ஷனுக்கு வச்சிருக்கிற ஃப்ரேம்களில் சாதா லென்ஸ்தான மாட்டியிருக்கும்)..... நானும் ரெண்டு மூணு தடவை பொறுமையா பார்த்து பதில் சொல்லிட்டுருந்தேன்.... அடுத்த ஃப்ரேமுக்கு "ஏங்க அதான் முகம் பார்க்கிற கண்ணாடி இருக்குல்ல...அதுல பார்த்து செலக்ட் பண்ணுங்களேன்... ஏன் என்னையே தொந்தரவு பண்றீங்க..."ன்னு ஒரு ரைடு விட்டேன்.... அவரும் பாவமா "எனக்குத் தெரியல.... எனக்குத் தெரிஞ்சா நான் ஏன் உன்னைக் கேட்கிறேன்"னு சொன்னார்.... நானும் ஒரு ஃப்ரேம் கூட செலக்ட் பண்ணத் தெரியல....என்னத்த குடும்பத்தலைவனோன்னு ஒரு பொலம்பல் (மனசுக்குள்ள தான்) .....

அடுத்த ஃப்ரேமுக்கும் அதே கேள்வி,  அதே பதில் ... ....."எனக்குத் தெரியல.... எனக்குத் தெரிஞ்சா நான் ஏன் உன்னைக் கேட்கிறேன்" ...அதே புலம்பல்...

அப்பத்தான், நம்ம அய்யாதுரை தூங்கி முழிக்கும்போதே கண்ணாடி எடுத்து மட்டிக்கிற வரை தட்டி துழாவி ஒரு குத்துமதிப்பா நடமாடுறது ஞாபகம் வந்துச்சு.... "ஏங்க நீங்க தெரியல தெரியல்ன்னு சொன்னது அந்தத் தெரியலயா"ன்னு கேட்டா அவரும் பாவமா "ஹ்..-ம்... உனக்கு அது இப்பத்தான் புரியுதா"ன்னு கேட்க, கடைக்காரன் சிரிப்ப அடக்க முடியாம வாயை மூடிக்கிட்டு சிரிக்க. .... ச்ச... நம்ம பொழப்பு இப்டி சிரிப்பா சிரிச்சு போச்சு போங்க...

விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்... அநேகமா இன்ட்ரொ தேவைப்படுற அளவுக்கு இடைவெளி வராதுன்னு சொல்லி விடைபெறுவது என்றென்றும்16 பானு. வஸ்ஸலாம். நன்றி.

9 comments:

Mahi said...

:) :) superb comedy! Nalla kudumbam Banu! Jaadiketha moodi-na athu neenga rendu perumthaan! Ha..ha..ha!

ஹுஸைனம்மா said...

//டென்த் டென்ஷன்//
//தி ஃபர்ஸ்ட் ஸ்ட்ரெஸ்"//
சம்பந்தமேயில்லைதான்..

இன்னொரு பதிவரான அனிஷாவும் நான் பதிவெழுதினாத்தான் அவங்களுக்கும் பதிவெழுதத் தோணுதுன்னு சொல்லிருந்தாங்க..

ஒருவேளை என் எழுத்து, அடிக்கடி பதிவெழுதாதவங்களைக்கூட ”இதுக்கு நாம எழுதுறதே பெட்டர்”னு உசுப்பி, எழுதத் தூண்டி விடுதோ.... எப்படியோ நாலு பேருக்கு நல்லது நடந்தாச் சரி!! :-)))))))

ஒரேயொரு ஒண்ணாங்கிளாஸுக்கே இப்படிப் புலம்பலா? ஒரு பத்தாங்க்ளாஸும், கூடவே ஒரு நாலாங்கிளாஸையும் சேத்து மேய்ச்சுகிட்டு இருக்க நாங்கல்லாம்... ??!!

//விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்....... சொல்லி விடைபெறுவது என்றென்றும்16 பானு. வஸ்ஸலாம். நன்றி.//

இதுக்கு முன்னாடி டிவில வேலை பாத்தீங்களா? :-))))))

enrenrum16 said...

வாங்க மகி... ஜாடிக்கேத்த மூடியா இருக்கனும்னு நாங்களும் முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கோம்.... அது ஆச்சு வருஷம் 7 1/2 ..... (ச்ச... நம்பர் கூட சரியில்ல.... )... ஏதோ போகுது போங்க..;)) உங்க கருத்துக்கு நன்றி மகி.

enrenrum16 said...

/”இதுக்கு நாம எழுதுறதே பெட்டர்”னு உசுப்பி, எழுதத் தூண்டி விடுதோ.... /ச்ச..ச்ச... அப்படியெல்லாம் இல்லீங்க... பதிவு எழுதி முடிச்சதுக்கப்புறம் தலைப்பு யோசிக்கும் போது தான் (நாம தான் தலைப்புக்கு ரொம்ம்ம்ம்ப யோசிப்பமே :)) உங்க பதிவு ஞாபகம் வந்தது....

/ஒரு பத்தாங்க்ளாஸும், கூடவே ஒரு நாலாங்கிளாஸையும் சேத்து மேய்ச்சுகிட்டு இருக்க நாங்கல்லாம்... ??!!/ நிஜமாவே இந்த விஷயத்தில் உங்கள மாதிரி அம்மாக்கள் தாங்க என்ன மாதிரி அம்மாக்களுக்கு ரோல் மாடல்... :-)

/இதுக்கு முன்னாடி டிவில வேலை பாத்தீங்களா? / நாங்கள்ளாம் டீவில வேலை பார்த்தா பாக்கறவங்க கண்ணு கூசும்ன்றதால ரேடியோல வேலை பார்க்க (அல்ப) ஆசைப்பட்டேன்..அதுக்கு ஒரு பதிவு போடுறேன்... கொசுவத்தி வாசிக்க ரெடியா இருங்க... ஹி..ஹி.. (அய்யய்யோ தெரியாம கேட்டுட்டேன்ன்னு நீங்க எவ்ளோ சாரி கேட்டாலும் விடப்போறதில்ல... ஹி..ஹி..)

ஸாதிகா said...

ஹ்ம்ம்ம்.....யம்மாடி பானு..ஒண்ணாப்புக்கே இத்தனை பில்ட்ப்பா?ஹப்பப்பா?

enrenrum16 said...

வாங்க ஸாதிகாக்கா... ஹி..ஹி..ச்சும்மா ஒரு கலாய்ப்பு.... உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிக்கா.

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

பிரதமர் மன்மோகன் இஸ்லாத்தை ஏற்றார்-நேரடி பேட்டி

உடனே பார்க்கவும்
WWW.TVPMUSLIM.BLOGSPOT.COM

Unknown said...

இவ்வளவு பில்டப் ஆகாது பானு.. அந்த பச்ச மண்ணு ( அதான் உங்க பெரிய்யய்ய துரை'' பாவம். இப்படி ஒரு அம்மாகிட்ட மாட்டுனதுக்கு :)

Unknown said...
This comment has been removed by the author.